திலகம், வளையல் அணிய மறுத்த மனைவிக்கு விவாகரத்து வழங்கிய கணவர்..!
நெற்றியில் குங்குமமும், கையில் வளையாலும் அணிய மறுத்த மனைவிக்கு விவாரகரத்து வழங்கிய கணவர்...!
நெற்றியில் குங்குமமும், கையில் வளையாலும் அணிய மறுத்த மனைவிக்கு விவாரகரத்து வழங்கிய கணவர்...!
இந்து திருமணமான பெண்ணின் பழக்கவழக்கங்களின்படி, 'குங்குமம், வளையைல் அணிவது மரபு. ஆனால், இவற்றை அணிய மறுத்ததால் மனைவிக்கு விவாகரத்து செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவர்களுக்கு அசாமில் கடந்த 2012 அம் ஆண்டு திருமணமானமாகி உள்ளது. இதையடுத்து, இவர்கள் இருவருக்கும் அடிக்கடி மனஸ்தாபம் ஏற்பட்டதால் 2013 ஆம் ஆண்டு கணவரின் வீட்டைவிட்டு வெளியேறி பெண், தன்னை கணவர் வீட்டார் கொடுமைப்படுத்தியதாக காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரில் இருந்து கணவரையும் அவர் குடும்பத்தாரையும் உயர் நீதிமன்றம் விடுவித்துள்ளது.
இதையடுத்து, கணவர் மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி குடும்பநல நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அதில், ‘‘கூட்டுக் குடும்பத்தை விட்டு தனிக்குடித்தனம் போக மனைவி வற்புறுத்தினார். அதற்கு இணங்காததால் தாம்பத்ய உறவு பாதிக்கப்பட்டு குழந்தைகள் இல்லை. அடிக்கடி இருவருக்கும் இடையே சண்டைஏற்பட்டது. இதனால் நான் துன்புற்றேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார். இதை குடும்பநல நீதிமன்றம் ஏற்காமல் மனுவை தள்ளுபடி செய்தது.
READ | கொரோனா போரில் பெரிய வெற்றி!! COVAXIN என்ற தடுப்பூசியை கண்டுபிடித்த இந்தியா
இந்த உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் கணவர் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்து உயர் நீதிமன்றம் கூறிக்கையில்., கணவரும் அவரது வீட்டாரும் தன்னைக் கொடுமைப்படுத்தியதாக மனைவி கூறிய புகார் நிரூபிக்கப்படவில்லை. இந்து திருமண முறையில் முக்கியமாக கருதப்படும் நெற்றியில் குங்குமமும் வளையலையும் அணிய மறுக்கிறார் என்று கணவர் கூறிய குற்றச்சாட்டைமனைவி மறுக்கவில்லை. திலகத்தையும் வளையலையும் பெண் அணிய மறுப்பது கணவருடனான திருமணத்தை ஏற்கவில்லை என்பதை குறிக்கிறது.
கணவர் மற்றும் அவர் வீட்டார் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துவதும் கொடுமைப்படுத்துவதற்கு ஒப்பாகும். அதேநேரம், விருப்பமில்லாத மனைவியுடன் சேர்ந்து வாழச் சொல்வதும் துன்புறுத்துவது போன்றதாகும். எனவே இந்த வழக்கில் விவாகரத்து வழங்கப்படுவதாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.