`ஃபேர் & லவ்லி இனி க்ளோ & லவ்லி`..... பெயரை மாற்றிய HUL..!
யூனிலீவர் நிறுவனம், தனது அழகு கிரீமான, ஃபேர் & லவ்லி-யின் பெயரை ‘க்ளோ & லவ்லி’ என்று மாற்றியுள்ளது..!
யூனிலீவர் நிறுவனம், தனது அழகு கிரீமான, ஃபேர் & லவ்லி-யின் பெயரை ‘க்ளோ & லவ்லி’ என்று மாற்றியுள்ளது..!
இந்தியாவில் பெண், ஆண் என வேறுபாடு இல்லாமல் மிக அதிக அளவு உபயோகிக்கப்படும் அழகு சாதன சாதனங்களில் ஒன்று "ஃபேர் & லவ்லி, இது ஒரு ஹிந்துஸ்தான் யூனிலீவர் (Hindustan Unilever) நிறுவனத்தின் தயாரிப்பாகும். இதனை பலரும் தங்களின் அழகை மேம்படுத்துவதற்காக பயன்படுத்தி வருகின்றனர். அந்த நிறுவனமும் இதனை பயன்படுத்தினால் அனைவரும் சிவப்பாக மாறிவிடலாம் என்றே பல ஆண்டுகளாக விளப்பரப்படுத்தி வருகிறது.
இந்நிலையில், இந்துஸ்தான் யூனிலீவர் தனது இந்திய பிரிவில் விற்பனை செய்யப்பட்டு வரும் அழகு கிரீமான 'ஃபேர் அண்ட் லவ்லி'-யின் பெயரை மாற்றப்போவதாக சமீபத்தில் தெரிவித்திருந்தது. மேலும், இந்த பெயர் கறுப்பு நிற சருமத்தின் மீதான தவறான நம்பிக்கையை ஊக்குவிக்கும் விதமாக உள்ளதாக விமர்சிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம் தரப்பில் கூறும் போது, தங்களது பொருளின் பெயரில் உள்ள 'ஃபேர்' என்ற வார்த்தையை பயன்படுத்துவதை நிறுத்தப்போவதாக தெரிவித்துள்ளது. மேலும், இந்த கிரீம் புதிய பெயர் ஒழுங்குமுறை ஒப்புதலுக்காக் காத்திருப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த மாற்றம் சில மாதங்களில் நடைமுறைக்கு வர உள்ளதாகவும் அது கூறியிருந்தது.
READ | Big Breaking: முதல் கொரோனா தடுப்பூசி ஆகஸ்ட் 15ம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும்
இந்நிலையில், 'க்ளோ & லவ்லி' என்று பெயர் மாற்றியுள்ளது ஃபேர் & லவ்லி. ஆண்களுக்கான ஸ்கின் கிரீம் 'க்ளோ & ஹேண்ட்சம்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இத்தனை நாட்களாக அதன் உச்சரிப்பு கூட பெரும்பாலான பேருக்கு தெரியாமல் 'பேரன் லவ்லி' என்று மக்கள் வாயில் புழங்கியது. "சரும பராமரிப்பு பிராண்டுகளின் உலகளாவிய போர்ட்ஃபோலியோவை உள்ளடக்குவதற்கும், அனைத்து தோல் டோன்களையும் கருத்தில் கொண்டும், அழகின் பன்முகத்தன்மையைக் கொண்டாடுவதற்கும் நாங்கள் முழுமையாக கடமைப்பட்டுள்ளோம். 'ஃபேர்', 'வெள்ளை' மற்றும் 'ப்ரைட்' போன்ற சொற்களின் பயன்பாடு சரியானது ஒற்றை பரிணாமத்தோடு உள்ளதால் பெயர் மாற்றம் தேவைப்பட்டது, " என்று இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவன அழகு சாதன பிரிவு தலைவர் சன்னி ஜெயின் தெரிவித்துள்ளார்.