Holi 2020: ஹோலி பற்றிய தகவல்... நல்ல நேரம், பூஜை செய்யும் முறை வண்ணங்கள்..!!
ஹோலி பண்டிகை பரஸ்பர சகோதரத்துவம் மற்றும் நல்லிணக்கத்தின் அடையாளமாகும் கருதப்படுகிறது.
ஹோலி 2020: நாடு முழுவதும் 2020 மார்ச் 9 ஆம் தேதி திங்கள் இரவு அன்று ஹோலிகா தகனம் (Holika Dahan) செய்யப்படும். இதில் நெருப்புகளை மூட்டி எரிப்பார்கள். தீமைகள் நீங்கி நன்மையின் நல்ல அடையாளமாக கொண்டாடப்படுவது தான் ஹோலி (Holi) பண்டிகை சிறப்பு என்று கருதப்படுகிறது. இந்த திருவிழாவிற்கும் சமூக முக்கியத்துவம் உண்டு. ஹோலி பண்டிகை பரஸ்பர சகோதரத்துவம் மற்றும் நல்லிணக்கத்தின் அடையாளமாகும் கருதப்படுகிறது. மேலும் மார்ச் 10 ஆம் தேதி ஹோலி பண்டிகை கொண்டாப்படும். அதில் ஒருவருக்கொருவர் வண்ணப் பொடிகளை பூசிக்கொள்வார்கள் அல்லது வண்ணம் கலந்த நீரையோ வீசுவார்கள்.
ஹோலி பண்டிகையின் நல்ல நேரம்:
ஹோலி தகனம்: 9 மார்ச் 2020
ஹோலி தகனம் செய்ய நல்ல நேரம்: 18:26:20 முதல் 20:52:17 வரை
ஹோலி தகனத்தின் நேர காலம்: 2 மணி 25 நிமிடங்கள்
பத்ரா கரணம்: 09:50:36 முதல் 10:51:24 வரை
பத்ரா கரணத்தின் முகம்: 10:51:24 முதல் 12:32:44 வரை
ஹோலி தகனத்தின் பூஜா விதிகள்:
இந்த நாள் ஃபால்குன் சுக்லாவின் பவுர்ணமி. இந்த நாளில் விரதத்தையும் கடைபிடிக்கலாம். குளித்தபின் தான் பூஜை எடுக்க வேண்டும். ஹோலிகா தகனத்தில் தளத்தில் மாட்டு சாணத்திலில் ஹோலிகா மற்றும் பக்தர் பிரஹ்லதாவின் வடிவத்தை வரையவும். இந்த நாளில் நரசிம்ம பகவனை வணங்குங்கள். பழங்கள், இனிப்புகள் போன்றவற்றை இறைவனுக்கு படியுங்கள்படையுங்கள். மாலையில், நெருப்பை எரித்து மூன்று அல்லது ஏழு முறை சுற்றவும். ஹோலிகா தகனத்துக்கு பிறகு, கோதுமை மற்றும் கரும்பு ஆகியவற்றை அர்ப்பணிக்கவும். நீங்கள் தானியங்களையும் பயன்படுத்தலாம். எரியும் அக்னி மீது தீர்த்தைதை தெளியுங்கள். ஹோலிகாவை எரித்த பிறகு, அதன் சாம்பலை எடுத்து நெற்றியில் வைத்துக்கொள்ளுங்கள்.
மேலும் படிக்க: ஹோலி கொண்டாட்டம்... பாதுகாக்க சில முறைகள்!
ஹோலியின் கதை:
ஹிரண்யகஷ்யப் மன்னர் தனது சக்தியைப் பற்றி மிகவும் பெருமிதம் கொண்டார் என்று நம்பப்படுகிறது. ஈகோவில், சுர் ஹிரண்யகஷ்யபும் கடவுளுக்கு சவால் விடுத்தார். தங்களை வணங்கும்படி தனது குடிமக்களுக்கு அழுத்தம் கொடுக்கத் தொடங்கினார். அவர் தன்னை கடவுள் என்று நம்பத் தொடங்கினார். ஆனால் ஹிரண்யகஷிப்புவின் மகன் பிரஹ்லதா விஷ்ணுவின் பக்தர். விஷ்ணுவை வழிபடுவதை பல முறை ஹிரண்யகஷ்யப் தடுத்தார். ஆனால் அவரின் மகன் பிரஹ்லதா கேட்கவில்லை. இந்த சம்பவம் ஹிரண்யகாஷ்யப்பை மிகவும் கோபப்படுத்தியது
அதன்பிறகு பிரஹ்லதாவை சித்திரவதை செய்து துன்புறுத்தப்பட்டது. தொடர்ச்சியாக எட்டு நாட்கள் மகன் பிரஹ்லதா மீது, அவரது தந்தை ஹிரண்யகஷ்யப் பல்வேறு வகையான அட்டூழியங்களைச் செய்தார். ஆனாலும் அவர் அதில் வெற்றி பெறமுடியவில்லை.
அதன் பிறகு தனது சகோதரி ஹோலிகாவை பிரஹ்லதாவுடன் நெருப்பில் அமருமாறு கட்டளையிட்டார். ஹோலிகா தீயில் எரிய மாட்டார் என்ற வரத்தை ஹிரண்யகஷிப் வழங்கினார். ஆனால் பிரஹ்லதாவுக்கு எந்தவரமும் வழங்கப்படவில்லை.
இருவரும் நெருப்பில் அமர்ந்தப்பட்டார்கள். அதில் பிரஹ்லதா சகோதரி ஹோலிகாவின் உடல் தீயில் எரிந்தது. அதேநேரத்தில் பிரஹ்லதாவுக்கு தீயினால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. அப்போதிருந்து, ஹோலிகா தகனம் நிகழ்வு பாரம்பரியமாக நடந்து கொண்டிருக்கிறது.