ஹோலிகா தகனம் (Holika Dahan) என்பது ஹோலிப் பண்டிகைக்கு முதல் நாள் மாலை அதாவது இன்று மாலை கொண்டாடப்படும் பண்டிகையாகும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரகலாதனைக் கொல்வதற்காக இரணியகசிபுவின் தூண்டுதலால் ஹோலிகா மேற்கொண்ட முயற்சியில் அவளே எரிந்து மாண்டுபோனாள். இந்நிகழ்ச்சியின் அடையாளமாக ஹோலிகா தகனம் கொண்டாடப்படுகிறது.


பிரகலாதன் கதையோடு இணைந்த பல நிகழ்வுகள் இருந்தாலும் ஹோலிகாவை எரிப்பதுதான் ஹோலியுடன் இணைக்கப்படுகிறது. வட இந்தியா, நேபாளம் மற்றும் தென்னிந்தியாவின் சில பகுதிகளில் ஹோலி நாளுக்கு முந்தைய இரவில் சிதைமூட்டி எரிக்கப்படுகிறது. இந்தியாவின் சில பகுதிகளில் இந்நாள் ”ஹோலிகா” என்றும் அழைக்கப்படுகிறது.


ஹோலிக்கு முதல் நாள் மாலையில் சூரிய மறைவின்போது அல்லது மறைவுக்குப்பின் தயார்செய்து வைக்கப்பட்டிருக்கும் சிதையில் தீ மூட்டப்படுகிறது. ஹோலிகா தகனத்திற்கு அடுத்த நாள் வண்ணத் திருவிழாவான ஹோலி கொண்டாடி மகிழப்படுகிறது.


ஹோலிகா எரிந்துபோனதற்கான காரணம்:- 


ஹோலிகா எரிந்து போனதற்கு பலவிதமான காரணங்கள் நிலவுகின்றன. அவற்றுள் சில காரணங்கள் இதோ,


> திருமால் உள்ளே வந்ததால் ஹோலிகாவை எரிந்து போனாள்.


> அடுத்தவர்களுக்கு எந்தவிதத் துன்பமும் செய்யப் பயன்படுத்தக்கூடாது என்ற நிபந்தனையின்பேரில் தான் பிரம்மா ஹோலிகாவுக்கு சக்தியளித்திருந்தார். ஆனால் அவள் பிரகலாதனைக் கொல்வதற்குச் சதிசெய்ததால் அவளது சக்தி பயனில்லாமல் போனது.


> ஹோலிகா இயல்பாகவே நல்லவள். அவள் அணிந்திருந்த உடைதான் அவளுக்கு சக்தியைத் தரவல்லது. தான் செய்யப்போகும் காரியம் தவறானது என்பதை உணர்ந்த ஹோலிகா அந்த ஆடையைப் பிரகலாதனுக்குத் தந்துவிட்டுத் தான் தீயில் எரிந்து மாண்டாள்.


> தீயிலிருந்து பாதுகாக்கக் கூடிய ஒரு போர்வையால் தன்னை மூடிக்கொண்டு ஹோலிகா பிரகலாதனை மடியிலமர்த்தியவாறு தீக்குள் இறங்கினா. திருமால் வேகமான காற்றை வீசச் செய்து அப்போர்வையை ஹோலிகாவிடமிருந்து விலகி பிரகலாதனை மூடிக்கொள்ளச் செய்தார். இதனால் பிரகலாதன் காப்பாற்றப்பட்டான், ஹோலிகா தீயில் மாண்டாள்.