வீடு & கார் கடன் வாங்குவதற்கான சிறந்த வங்கிகள் எது?.. நமக்கு என்ன நன்மை!!
இந்த 3 வங்கிகளிடமிருந்து கடன் பெறுவதால் உங்களுக்கு நிறைய நன்மை கிடைக்கும்... இந்த நன்மை ஆகஸ்ட் 10 முதல் செயல்படுத்தப்படுகிறது..!
இந்த 3 வங்கிகளிடமிருந்து கடன் பெறுவதால் உங்களுக்கு நிறைய நன்மை கிடைக்கும்... இந்த நன்மை ஆகஸ்ட் 10 முதல் செயல்படுத்தப்படுகிறது..!
வீடு வாங்குபவர்களுக்கு (Home buyers) அல்லது கார் வாங்குவோருக்கு (new Car) ஒரு நல்ல செய்தி உள்ளது. நீங்கள் இப்போது மலிவான விலையில் வங்கிகளில் இருந்து கடன் பெறலாம். ஏனெனில், Bank of Maharashtra, Uco Bank மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகியவை MCLR-யை குறைத்துள்ளன.
பாங்க் ஆப் மகாராஷ்டிரா MCLR-யை 0.20 சதவீதம் குறைத்துள்ளது. புனேவை தளமாகக் கொண்ட இந்த வங்கி தொடர்ச்சியாக 5 வது முறையாக MCLR-யை குறைத்துள்ளது. வங்கியின் கூற்றுப்படி, இப்போது 1 ஆண்டு MCLR 0.10 சதவீதம் குறைந்து 7.50 லிருந்து 7.40 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. ஒரு நாள் MCLR 7 முதல் 6.80 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்த வழியில், 1 மாத MCLR 7.10 முதல் 6.90 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
MCLR தவிர, விவசாயிகள் மற்றும் சில்லறை வாடிக்கையாளர்களுக்கான கடன்களுக்கான வட்டி விகிதத்தை வங்கி குறைத்துள்ளது. விவசாயிகளுக்கு இப்போது 1 வருடத்திற்கு 7.40 சதவீத MCLR-க்கு அக்ரி தங்கக் கடன் கிடைக்கும். முன்னதாக இந்த விகிதம் 7.80 சதவீதமாக இருந்தது.
ALSO READ | இந்திய ரயில்வேயில் வேலைவாய்ப்புக்காக காத்திருப்பவர்களுக்கு ஒரு அதிர்ச்சி..!
மற்றொரு பொதுத்துறை வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (IOB) அனைத்து முதிர்வு கடன்களிலும் MCLR-யை 0.10 சதவீதம் குறைத்துள்ளது. இந்த விலக்கு ஆகஸ்ட் 10 முதல் பொருந்தும். 1 ஆண்டுMCLR 7.75 லிருந்து 7.65 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளதாக வங்கி தெரிவித்துள்ளது. 1 நாள் கடனுக்கான MCLR 7.30 லிருந்து 7.20 சதவீதமாகவும், 6 மாத MCLR 7.65 லிருந்து 7.55 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது.
IOB இரண்டு ஆண்டு MCLR-யை 7.75 லிருந்து 7.65 சதவீதமாகக் குறைத்துள்ளது. சென்னை தலைமையிடமான வங்கியும் அதன் அடிப்படை வீதத்தை 9.45 லிருந்து 9.35 சதவீதமாகக் குறைப்பதாக அறிவித்துள்ளது. இந்த விலக்கு ஆகஸ்ட் 10 முதல் பொருந்தும்.
இதனுடன், யூகோ வங்கியும் MCLR-யை 0.10 சதவீதம் குறைத்துள்ளது. திருத்தப்பட்ட வட்டி விகிதங்கள் ஆகஸ்ட் 10 முதல் அமலுக்கு வரும் என்று யூகோ வங்கி தெரிவித்துள்ளது. இது வங்கியின் MCLR-இணைக்கப்பட்ட கடனை மலிவானதாக மாற்றும். 1 ஆண்டு MCLR இப்போது 7.40 சதவீதமாகக் குறையும் என்று வங்கி தெரிவித்துள்ளது. இப்போது அது 7.50 சதவீதமாகும். இதேபோல், 3 மாத மற்றும் 6 மாத MCLR முறையே 7.05 சதவீதமாகவும் 7.30 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளன.