தீபாவளி பலகாரங்கள் சாப்பிட்டு வயிறு வலிக்குதா..? சரி செய்ய சிம்பிள் டிப்ஸ்!
தீபாவளியன்று பலகாரங்களை மாங்கு மாங்கென்று சாப்பிட்டதால் பலருக்கு வயிறு உபாதைகள் ஏற்பட்டிருக்கும். இதை சரி செய்வது எப்படி?
இந்த வருடத்தின் தீபாவளி திருநாள் இனிதே முடிவடைந்து விட்டது. தீபாவளி என்றாலே பலகாரங்களுக்கும் பட்டாசுகளுக்கும் பஞ்சமே இருக்காது. அதிரசம், முறுக்கு, ஜாங்கிரி, ஜிலேபி, குலாப் ஜாமூன், சாெய்யம், வடை, பாயாசம் என பல வகையான பலகாரங்களை சமைத்து சாப்பிடுகிறோமோ இல்லையோ, பிறருக்கும் கொடுத்து மகிழ்வாேம். நம் வீட்டில் செய்த பலகாரங்கள் மட்டுமன்றி, அக்கம் பக்கத்து வீட்டார் செய்தது, அத்தை-மாமா வீட்டில் செய்தது என பல்வேறு வகையான தின்பண்டங்களை வைத்து வாய்க்கும் வயிற்றுக்கும் சண்டை போட்டுக்கொள்வோம். இப்படி அளவுக்கு மீறி இனிப்பு மற்றும் காரங்களை சாப்பிடுவதால் நம் வயிறும் கெட்டுப்போவதுண்டு. இதனால் ஏற்படும் வயிற்று வலியை சரிசெய்ய சில வழிமுறைகள் இருக்கின்றன. அவை என்னென்ன தெரியுமா?
பெருங்காயம் வைத்தியம்:
நம் உடலுக்குள் ஏற்பட்ட காயங்களை ஆற்றும் மேஜிக் மந்திரம் பெருங்காயத்திடம் உள்ளது. அதிகம் சாப்பிட்டதால் ஏற்படும் வயிறு வீக்க, உப்பசம் என அனைத்தையும் பெருங்காயம் சரி செய்து விடும். வயிற்று வலி ஏற்படும் ஓது ஒரு டம்ளர் தண்ணீரை கொதிக்க வைத்து மிளகு அளவுக்கான பெருங்காயக்கட்டியை போட வேண்டும், பொடி பெருங்காயம்தான் இருக்கிறது என்றால், தண்ணீர் இளஞ்சூட்டில் இருக்கும் போது கால் டீஸ்பூன் அளவு பெருங்காயத்தை சேர்க்கலாம். அதை அப்படியே பருகலாம்.
தண்ணீர் குடிக்க வேண்டும்:
சில சமயங்களில் அதிகளவில் சாப்பிடும் நாம் அதே அளவு தண்ணீரை குடிக்க மறந்து விடுவோம். எனவே, உடலில் நீர்ச்சத்தை தக்க வைத்துக்கொள்வது நமது கடமை. நிறைய தண்ணீர் குடிப்பதால் சாப்பிட்ட உணவும் எளிதில் சரிமானம் ஆகும். தண்ணீர் மட்டுமன்றி, நீரேற்றத்தை அதிகரிக்கும் பழங்களையும் எடுத்துக்கொள்வது சிறந்தது.
மேலும் படிக்க | 7 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கினால் உங்கள் உடலில் என்ன நடக்கும்?
சோம்பு:
அஞ்சரைப்பெட்டியில் உள்ள மசாலா பொருட்களில் முதன்மையான ஒன்று, சோம்பு. இதை அசைவ உணவுகளுக்கும் சேர்த்துக்கொள்வர், சைவத்திற்கும் சேர்த்துக்கொள்வர். இதனை தண்ணீரில் கொதிக்க வைத்து சாப்பிட வேண்டும் என்ற அவசியம் இல்லை. வெறும் வாயிலும் அப்படியே மென்று சாப்பிடலாம். பல்லி மிட்டாய் வடிவில் விற்கப்படுவது சோம்புதான். வயிறு வலி ஏற்படும் போது 4 டீஸ்பூன் அளவு சோம்பை தண்ணீரில் கொதிக்க வைத்து குடிக்க வேண்டும். இதனால் வயிறு வலி சரியாவதோடு நெஞ்செரிச்சல் பிரச்சனையும் தீரும். வயிற்றில் ஏற்படும் கோளாறுகளும் இதனால் தீறும்.
வடித்த கஞ்சி:
பலரது வீட்டில் சாப்பாட்டை வேக வைத்து சாப்பிடுவர். அப்படி சாதம் வடித்த கஞ்சி நீரில் கல் உப்பு மற்றும் மஞ்சள் தூள் கலந்து குடிக்க வேண்டும். இதை கர்பகாலத்தில் இருக்கும் பெண்மணிகள் செய்ய வேண்டாம். இது போல, வடித்த சாதத்தில் கல் உப்பும் மஞ்சள் தூளும் சேர்த்து குடித்தால் எப்பேற்பட்ட வயிற்று வலியும் தீர்ந்து விடும் என்பது முன்னோர்களின் கூற்றாக உள்ளது.
சீரகத்தண்ணீர்:
சீரகம், செரிமான மண்டலத்தை சரி செய்ய உதவும் உணவு பொருட்களுள் ஒன்று. நம்ம ஊரிலேயே பலர் காலையில் எழுந்தவுடன் சீரக தண்ணீரை குடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஏனென்றால், இது அஜீரண கோளாறை சரி செய்யும். வயிறு வலி ஏற்படும் சமயத்தில் ஒரு லிட்டர் தண்ணீரை கொதிக்க வைத்து அதை இறக்கியவுடன் சீரகத்தை சிறிதளவு வறுத்து சேர்க்க வேண்டும். இதை அப்படியே சிறிது நேரம் ஊற வைத்து பிறகு குடிக்கலாம்.
மேலும் படிக்க | வெந்தயம் சாப்பிடுவது நல்லதுதான்.. ஆனா இந்த மாதிரி பிரச்சனையும் உண்டாகலாம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ