Health Benefits of Asafoetida: பெருங்காயம் இந்திய சமையலறைகளில் கண்டிப்பாக இருக்கும் ஒரு மசாலா பொருளாகும். இதனை உணவில் சேர்ப்பதால், உனவின் சுவை அதிகரிப்பது மட்டுமின்றி, இதில் உடல் ஆரோக்கியத்துக்கான பல நன்மைகளும் உள்ளன. இது பல உணவு வகைகளின் சுவையை கூட்ட பயன்படுகிறது. பெருங்காயம் சேர்த்தால் சுவை கூடும் என்பது பலருக்கு தெரியும். ஆனால், இதனால், உடல் ஆரோக்கியமும் கூடும் என்பது நம்மில் பலருக்கு தெரிந்திருகக் வாய்ப்பில்லை. நம் உடலில் இருக்கும் பல பிரச்சனைகளிலிருந்து விடுபட பெருங்காயம் பெரிய சகாயமாக இருக்கிறது. பெருங்காயத்தின் ஆரோக்கிய நன்மைகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
பெருங்காயம் சாப்பிடுவது இந்த பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கிறது:
பெருங்காயம் ஆரோக்கியத்தின் பொக்கிஷமாகக் கருதப்படுகிறது. உடல் ஆரோக்கியத்துக்கு நன்மை பயக்கும் பல கூறுகள் இதில் உள்ளன. இதை ஒரு சிறப்பு வழியில் பயன்படுத்தினால், பல நோய்களிலிருந்து விடுதலை பெறலாம். எந்தெந்த பிரச்சனைகளுக்கு பெருங்காயம் நிவாரணமாக அமைகின்றது என்பதை இங்கே காணலாம்.
1. அஜீரணம்
வயிறு தொடர்பான பிரச்சனைகளால் நீங்கள் அவதியில் இருந்தால், பெருங்காயம் இதில் மிக நல்ல மருந்தாக உங்களுக்கு உதவும். அஜீரணம் ஏற்பட்டால், முதலில் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரை எடுத்து அதில் பெருங்காயத்தை கலந்து குடிக்கவும். இது தவிர பெருங்காயத்தை அரைத்து பேஸ்ட்டை தயார் செய்து தொப்புளைச் சுற்றிலும் தேய்ப்பது இந்த பிரச்சனையிலிருந்து தீர்வு காண ஒரு சிறந்த வழியாகும். இப்படி செய்தால், செரிமானம் விரைவில் சரியாகும்.
மேலும் படிக்க | Corona Pneumonia: கடுமையான நிமோனியாவை ஏற்படுத்தும் கொரோனாவின் அடுத்த அட்ராசிடி
2. தலைவலி
பல நேரங்களில் நாம் பதற்றம் காரணமாக தலைவலியை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அதற்காக நாம் வலி நிவாரணிகளை உட்கொள்கிறோம். எனினும், வலி நிவாரணிகளை உட்கொள்வது ஆபத்தாகலாம். ஏனெனில், இவற்றால் பல பக்க விளைவுகள் ஏற்படக்கூடும். தலைவலிக்கு இயற்கையான நிவாரணம் வேண்டுமானால் பெருங்காயத்தை அரைத்து பேஸ்ட் செய்து நெற்றியில் தடவி வந்தால் சிறிது நேரத்தில் நிவாரணம் கிடைக்கும்.
3. வயிறு உப்பசம்
பலர் வாயுத் தொல்லையால் அவதிப்படுகிறார்கள். இது பல பிரச்சனைகளுக்கு காரணமாகின்றது. இதனால் தாங்க முடியாத வலியும் ஏற்படுகின்றது. வாயுத் தொல்லை, வயிறு உப்பசம் ஆகியவை ஏற்பட்டால், கடுகு எண்ணெயுடன் பெருங்காயப் பொடியை சேர்த்து தொப்புளைச் சுற்றி தடவவும். இப்படி செய்தால் விரைவில் நிவாரணம் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | Belly Fat: என்ன பண்ணாலும் தொப்பையை குறையலையா.. ‘இந்த’ ஆசனம் செய்தால் போதும்..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ