வைரல் வீடியோவால் 10 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டதாக நினைத்த நபர் தனது குடுபத்துடன் இணைந்துள்ளார்..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த பறந்து விரிந்த உலகில் ஒவ்வொரு நிமிடமும் ஏதாவது ஒரு மூலையில் விசித்திரமான செயல் நடந்து கொண்டு தான் இருக்கிறது. அது, நகைச்சுவையாகவும் இருக்கலாம்; அல்லது அதிர்ச்சி தரக்கூடிய நிகழ்வுகளாவும் இருக்கலாம். அந்த நிகழ்வுகள் அனைத்து இணையதளம் (Social Media) மூலம் நம்மிடம் வந்து சேர்கிறது. அது வாழ்நாளில் நம்மால் மறக்க முடியாத நிகழ்வாக கூட அமையலாம். அப்படி வைரலான வீடியோவால் 10 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டதாக நினைத்த நபர் தனது குடுபத்துடன் இணைந்துள்ளார். 


பிரேசில் நாட்டில் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன் தனது வீட்டை விட்டு பிரிந்த நிலையில், ஒருவர் தெரு தெருவாக சுற்றித் திரிந்துள்ளார். சாலையோரம் கிடைக்கும் குப்பைகளை சேகரித்து கடந்த பத்து ஆண்டுகள் அந்த நபர் வாழ்ந்து வந்த நிலையில், ஆண்கள் பேஷன் ஸ்டோர் மற்றும் முடி திருத்தும் நிலையம் நடத்தி வரும் அலெசான்ட்ரா லோபோ என்பவர், அந்த ஆதரவற்ற நபரிடம் உணவு ஏதேனும் வேண்டுமா என கேட்டுள்ளார்.



ALSO READ | வெட்ட வெளியில் மியா கலிஃபா செய்த அறுவறுப்பான செயல்... தீயாய் பரவும் வீடியோ!


அதற்க்கு அவர், தனக்கு உணவு வேண்டாம் என கூறியுள்ளார். இதையடுத்து, அலெசான்ட்ரா லோபோ, புதர் போல் வளர்ந்துள்ள முடி மற்றும் தாடி ஆகியவை அவருக்கு அகற்ற அலெசான்ட்ரா லோபோ முடிவு செய்துள்ளார். அழுக்கு உடை, நீண்ட தாடியுடன் இருந்த அந்த நபருக்கு, முடி திருத்தம் செய்து புத்தம் புது ஆளாக மாறிவிட்டார். அத்துடன் வீடில்லாமல் திரிந்த அந்த மனிதருக்கு சில ஆடைகளையும் லோபோ கொடுத்துள்ளார். மேலும், அந்த நபரின் பழைய புகைப்படம் மற்றும் புதிய புகைப்படம் ஆகியவற்றை இணைத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.


இந்த புகைப்படம் வைரலான நிலையில், அந்த வீடற்ற மனிதரின் புகைப்படம் உறவினர்கள் கவனத்திற்கும் சென்றுள்ளது. கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன் வீட்டை விட்டு அந்த நபர் வெளியேறியிருந்த நிலையில், அவரது குடும்பத்தினர் அவர் இறந்திருக்கலாம் என கருதியுள்ளனர். இந்த பதிவை பார்த்ததும், உடனடியாக அவர்கள் அலெசான்ட்ரா லோபோவிடம் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர்.


இதுகுறித்து, ‘உணவு வேண்டுமா என கேட்ட போது அதை அவர் மறுத்ததால் அவரை ஸ்டைலாக மாற்ற வேண்டும் என முடிவு செய்தோம். அவர் பேசும்போது மிகவும் கூச்ச சுபாவமுள்ள நபராக இருந்தார். முடியை சரி செய்து அவரை புதிய ஆளாக மாற்றிய பின் அவரது பழைய மற்றும் புதிய புகைப்படங்களை இணைத்து பதிவிட்டதும் அவரது குடும்பத்தினர் என்னை தொடர்பு கொண்டு பேசினர். அவரிடம் தொலைபேசி மற்றும் முகவரி இல்லாததால் அவரை இணைந்து கண்டுபிடிக்க முடிவு செய்துள்ளோம். அவருக்கு உதவி செய்து அவரை ஆள் அடையாளம் தெரியாமல் மாற்ற வேண்டும் என நினைத்த போது இப்படி ஒரு நல்ல காரியம் ஒரு குடும்பத்தினருக்கு செய்யப் போகிறேன் என ஒருபோதும் நினைக்கவில்லை’ என நெகிழ்ச்சியுடன் அலெசான்ட்ரா குறிப்பிட்டுள்ளார்.


உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்... 


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR