ராசிபலன் டிசம்பர் 5, 2021: இந்த 4 ராசிக்காரகளும் ஞாயிற்றுக்கிழமை கவனமாக இருக்க வேண்டும். பொய் குற்றம் சுமத்தப்படலாம். அல்லது சில பழைய விஷயத்தில் சக ஊழியர்களுடன் வாக்குவாதம் ஏற்படலாம். வயிற்றுப் பிரச்சனைகளும் உங்களைத் தொந்தரவு செய்யலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேஷம்: மாணவர்கள் படிப்பில் சிறப்பாக செயல்படுவார்கள். கடன் கொடுப்பதை தவிர்க்கவும். வணிகம் மற்றும் பணத்திற்காக சற்று சிரமம் ஏற்படும் நாள். வயிற்றில் பிரச்சனைகள் ஏற்படலாம். உண்ணும் உணவு மற்றும் பானங்களில் சிறிது கவனம் செலுத்துங்கள் இல்லையெனில் வாயு கோளாறுகள் ஏற்படும். அதிர்ஷ்டம் உங்களுடன் இருக்கும், எனவே முன்னெச்சரிக்கை மட்டும் போதுமானது.


ரிஷபம்: உத்தியோகத்தில் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். பதவி உயர்வு அல்லது அது தொடர்பான பேச்சுக்கள் வந்து மகிழ்ச்சியைத் தரும். மகனோ, பிள்ளைகளோ சில பாராட்டுக்குரிய வேலைகளைச் செய்வார்கள். நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன் நல்ல பயணத்தை மேற்கொள்வீர்கள். ரிஷப ராசிக்காரர்களுக்கு இது நல்ல நேரம்.


மிதுனம்: அதிர்ஷ்டம் உங்களுடன் இருக்கும், குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் நிலவம். குடும்பத்தின் பெயரை ஒளிரச் செய்யும் வேலையை நீங்கள் மேற்கொள்ளலாம். முடங்கிய பணம் திரும்ப கிடைக்கும், அதை முதலீடு செய்யலாம்.


கடகம்: உங்கள் அதிர்ஷ்டமும், திறமையும் ஒன்றிணையும் நேரம் இது. அனைத்து பணிகளிலும் வெற்றி பெறுவீர்கள். காதல் உறவுகளும் மகிழ்ச்சியைத் தரும். நீங்கள் புத்திசாலித்தனமாக பேசி, மகிழ்ச்சியை பிறருக்கும் பகிர்ந்தளிப்பீர்கள். உங்கள் துணையுடன் முக்கியமான விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். அன்புக்குரியவர்ளுக்கும், பெரியவர்களுக்கும் மரியாதை கொடுத்தால் வாழ்க்கையில் மகிழ்ச்சிக்கு குறைவேது?  


ALSO READ | அடுத்த 13 நாட்களுக்கு அன்னை லட்சுமியின் கடைக்கண் பார்வை பெறும்  5 ராசிக்காரர்கள்!


சிம்மம்: பலருடன் சுமூகமான உரையாடல் ஏற்பட்டு நல்லுறவு உருவாகும். பணியிடத்தில் பிரச்சனைகள் வரலாம். எந்த வகையான உண்மை அல்லது பொய்யான குற்றச்சாட்டும் உங்கள் மீது சுமத்தப்படலாம். நல்லவர்களுடன் தொடர்பு ஏற்படும் வாய்ப்புகள் உண்டு. உங்கள் வேலையில் வெற்றிடைய உதவிகள் கிடைக்கும்.


கன்னி: ஆரோக்கியம் நன்றாக இருக்கும். மற்றவர்களுடன் இனிமையாக நடந்து கொள்வீர்கள். வெளியூர் பயணம் மகிழ்ச்சியைத் தரும். வேலை சம்பந்தமாக நீண்ட தூரப் பயணம் சாத்தியமாகும். பணத்தை முதலீடு செய்வதற்கு ஏற்ற நாள். பாலிசி, ஷேர் மார்க்கெட்டில் பணத்தை முதலீடு செய்யலாம்.


துலாம்: சாமர்த்தியம் காட்டுவதன் மூலம் வேலையில் வெற்றி பெறுவீர்கள். அதிகப்படியான கோபம் பிரச்சனையை அதிகரிக்கும். குழந்தைகளின் உதவி மகிழ்ச்சி அதிகரிக்கும். இறைவனை தியானிப்பது மன அமைதியை தரும். கல்வித்துறையில் தொடர் முயற்சியால் நல்லப் பலன்களைப் பெறலாம்.


விருச்சிகம்: திருமண வாழ்க்கையில் இனிமை உண்டாகும். குடும்பம் அல்லது அன்புக்குரியவர்களுடன் நல்ல நேரம் செலவிடப்படும். மங்களமானப் பணிகளில் கலந்து கொள்ளும் பாக்கியம் கிடைக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பும் கிடைக்கும். நிதிநிலைமை திருப்திகரமாக இருக்கும்.


ALSO READ | அருகில் நெருங்கினாலே உயிர்பலி கேட்கும் கொலைகார மரம்


தனுசு: ஆரோக்கியம் சீராக இருக்கும். திட்டமிட்டு செயல்பட்டு, வேலையில் வெற்றி பெறுவீர்கள். பெற்றோரின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். நண்பர்களுடன் நேரம் செலவிட உகந்த நேரம் இது. கோபம் உங்கள் மீது ஆதிக்கம் செலுத்த இடம் கொடுக்காமல் இருந்தால், இன்றைய நாள் நன்றாக இருக்கும்.


மகரம்: பணியில் உங்கள் முழு ஒத்துழைப்பையும் தருவீர்கள். வானிலையின் தாக்கத்தை நீங்கள் தாங்கிக்கொள்ள நேரிடலாம். காதல் தொடர்பான விஷயங்களுக்கு சாதகமான நாள் இன்று.


கும்பம்: சக ஊழியர்களுடன் பழைய விஷயங்கள் தொடர்பாக வாக்குவாதம் ஏற்படலாம். எனவே, கவனமாக வேலை செய்யுங்கள், சர்ச்சைகளைத் தவிர்க்கவும். தனிப்பட்ட வாழ்க்கையில் சில பிரச்சனைகள் வரலாம். மனைவியின் எண்ணத்தைப் புரிந்து கொள்ள முயற்சித்தால் நல்லது.


மீனம்: அதிர்ஷ்டம் உங்களை ஆதரிக்கும். மனச் சோர்வு நீங்கி எல்லா தரப்பிலிருந்தும் நல்ல செய்தி கிடைக்கும். முன்னேற்றம் காண கடினமாக உழைக்கு வேண்டியிருக்கும். அதிர்ஷ்டம் உங்கள் பக்கத்தில் உள்ளது. வேலையில் லாபகரமான சூழ்நிலை உருவாகும்.


READ ALSO | மூன்றாம் உலகப்போர் 2022ல் வரும்! -நோஸ்ட்ராடாமஸ் கணிப்பு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR