ஆரோக்கியம்: இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், நமது சுகாதார அமைப்பு அதிக சுமை என்ற அச்சுறுத்தலை எதிர்கொள்கிறது. அதேநேரத்தில் இதுபோன்ற சூழ்நிலையில் லேசான அறிகுறிகள் உள்ளவர்களை மருத்துவமனையில் அனுமதிக்க முடியாது. அத்தகைய விஷயத்தில் நீங்கள் என்ன செய்ய வேண்டும்? அவர்களை வீட்டில் வைத்து தான் பாதுகாக்க வேண்டும். எப்படி அவர்களை கவனித்துக்கொள்வது மற்றும் பராமரிப்பது என்பது குறித்து தெரிந்துக்கொள்வோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மனதில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்:


> நோயாளியை நன்கு காற்றோட்டமான தனி அறையில் வைக்கவும்.


> வீட்டில் நோயாளியின் நடமாற்றத்தை கட்டுப்படுத்துங்கள் மற்றும் அவருக்களுக்கான பகிரப்பட்ட இடத்தைக் குறைக்கவும்.


> வீட்டு உறுப்பினர்கள் வெவ்வேறு அறைகளில் தங்க வேண்டும் அல்லது நோயாளியிடமிருந்து குறைந்தபட்சம் 1 மீட்டர் தூரத்தை பராமரிக்க வேண்டும்.


> பராமரிப்பாளர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துங்கள், நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும் ஒருவரை நியமிக்கவும்.


> நோயாளி முழுமையாக குணமடைந்து COVID-19 இன் அறிகுறிகளோ இல்லாத வரை பார்வையாளர்களை அனுமதிக்கக்கூடாது.


> நோயாளிகளுடனான எந்தவொரு தொடர்பு அல்லது அவர்களை பார்த்த பிறகு கை நன்றாக சுத்தம் செய்யுங்கள்.


> சோப்பு மற்றும் தண்ணீரில் கழுவிய பின் கைகளை துடைப்பதில் காகித துண்டுகளை பயன்படுத்துவது நல்லது.


> சுவாச சுரப்புகளைக் கொண்டிருக்க, நோயாளிக்கு ஒரு மருத்துவ முகமூடியை வழங்க வேண்டும் மற்றும் அதை தினமும் மாற்ற வேண்டும்.


> பராமரிப்பாளர்கள் வாய் மற்றும் மூக்கை மறைக்கும் மருத்துவ முகமூடியை அணிய வேண்டும்.


> நோயாளியின் அதே அறையில் இருக்கும்போது, ​​அவருக்கு சேவை செய்யும் போது முகமூடிகளைத் தொடக்கூடாது


> பயனபடுத்திய முகமூடிகள் அல்லது கையுறைகளை மீண்டும் பயன்படுத்த வேண்டாம்.


> மூடிய குப்பைத்தொட்டியில் முகமூடியை கவனமாக அப்புறப்படுத்துவது முக்கியம்.


> நோயாளியின் அறையில் அடிக்கடி தொடும் மேற்பரப்புகளை தினசரி சுத்தமாகவும், அந்த இடத்தில் கிருமிநாசினி பயன்படுத்த வேண்டும்.


> ஒவ்வொரு நாளும் ஒரு முறையாவது குளியலறை மற்றும் கழிப்பறை மேற்பரப்புகளை சுத்தம் செய்து கிருமி நீக்கம் செய்யுங்கள்.


> வழக்கமான சலவை சோப்பு மற்றும் தண்ணீரைப் பயன்படுத்தி நோயாளியின் உடைகள், படுக்கை துணி மற்றும் குளியல் மற்றும் கை துண்டுகளை சுத்தம் செய்யுங்கள் அல்லது வாஷிங்மசின் மூலம் 60-90'C இல் துவைக்க வேண்டும். 


> நோயாளிக்கு பயன்படுத்தபப்டும் டூத்பிரஸ், சிகரெட், உணவுகள், பானங்கள், துண்டுகள், படுக்கை துணி போன்ற அசுத்தமான பொருட்களை வீட்டின் மற்ற பகுதிக்கு கொண்டு செல்வதை தவிர்க்கவும்.


> நோயாளிகள் வீட்டு தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுவதற்கு, குறைந்தது 24 மணிநேர இடைவெளியில் சேகரிக்கப்பட்ட மாதிரிகளிலிருந்து பி.சி.ஆர் (PCR) பரிசோதனையைப் பயன்படுத்தி இரண்டு முறை எதிர்மறையை (Negative) சோதிக்க வேண்டும்.