உங்கள் கணக்கில் LPG Gas மானியம் எவ்வளவு டெபாசிட் செய்யப்பட்டுள்ளது எப்படி அறிவது?
வீட்டில் இருந்த படியே உங்கள் கணக்கில் எல்பிஜி கேஸ் மானியம் எவ்வளவு டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்பதை நீங்கள் தெரிந்துக்கொள்ளலாம். எப்படி தெரிந்துக்கொள்வது என்பதுக் குறித்து அறிந்து கொள்ளுங்கள்.
LPG, Subsidy: எல்பிஜி எரிவாயு சிலிண்டர்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மத்திய அரசு மானியம் வழங்கி வருகிறது. அதாவது ஒரு ஆண்டுக்கு 14.2 கிலோ எடைக்கொண்ட 12 சிலிண்டர்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது. அதே நேரத்தில், அதிக எண்ணிக்கையிலான சிலிண்டர்களை வாங்கினால் அதற்கு மானியம் கிடையாது. வாடிக்கையாளர் சந்தை விலையில் அந்த சிலிண்டர்களை வாங்க வேண்டியிருக்கும்.
எல்பிஜி (Liquefied Petroleum Gas) எரிவாயு மீதான மானியம் குறித்து வாடிக்கையாளர்களின் மனதில் பெரும்பாலும் பலவிதமான கேள்விகள் உள்ளன. அதில் முக்கியமானது, தங்கள் கணக்கில் எவ்வளவு மானியத் தொகை டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. அதை அறிந்து கொள்வதற்கான வழி என்ன? என வாடிக்கையாளர்களின் மனதில் ஒரு கேள்வி எழுகிறது.
உங்கள் வங்கிக் கணக்கில் (Bank Account) எவ்வளவு மானியப் பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்பதை வாடிக்கையாளர்கள் எளிதாக அறிந்து கொள்ளலாம். அதற்கான வழிமுறைகளை இங்கே காண்போம்.
ALSO READ | LPG Gas Booking Subsidy : வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் Cashback அறிவிப்பு!
1. முதலில் Mylpg.in என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
2. உங்கள் சிலிண்டர் நிறுவனத்தின் (ஹெச்பி (HP Gas), பாரத் கேஸ் (Bharath Gas) மற்றும் இண்டேன் (Indane)) பெயரை கிளிக் செய்க.
3. மெனுவுக்குச் செல்வதற்கு முன்னால் உங்களுக்கு முன் ஒரு புதிய இடைமுகம் திறக்கப்படும்
4. உங்கள் 17 இலக்க எல்பிஜி ஐடியை (LPG ID) உள்ளிடவும்
5. எல்பிஜி ஐடி தெரியவில்லை என்றால், "உங்கள் எல்பிஜி ஐடியை அறிய இங்கே கிளிக் செய்க" (Click here to know your LPG ID) என்பதைக் கிளிக் செய்க
6. எரிவாயு நிறுவனம், எல்பிஜி நுகர்வோர் ஐடி (Consumer ID), மாநில மற்றும் விநியோகஸ்தரின் பெயரில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிடவும்
7. கேப்ட்சாவை (Captcha) உள்ளிடவும்
8. செயல்முறை (Process) என்பதைக் கிளிக் செய்க
9. புதிய பக்கத்தில் நீங்கள் எல்பிஜி ஐடியைக் காண்பீர்கள்.
10. இப்போது "சிலிண்டர் முன்பதிவு வரலாறு அல்லது மானிய பரிமாற்றத்தைக் காண்க" (See cylinder booking history or subsidy transfer) என்பதைக் கிளிக் செய்க
11. இப்போது நீங்கள் மானியத் தொகையைக் (Subsidy Amount) காண்பீர்கள்.
ALSO READ | LPG Cylinder முன்பதிவு செய்ய 5 எளிய வழிகள் உள்ளன: செயல்முறை இதுதான்!!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR