மத்திய அரசாங்கம் இந்தியாவில் ஒரு தனி நபர் தனது பெயரில் 9 சிம்களை வாங்கி கொள்ள முடியும். ஜியோ வந்ததில் இருந்து இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது.  இதன் காரணமாக சிம் கார்ட் வாங்குபவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால் சிம் கார்டுகளின் விற்பனையும் பல மடங்கு அதிகரித்துள்ளது. தற்போதுள்ள சூழ்நிலையில் ஒரு தனி நபர் ஒரே சமயத்தில் இரண்டு சிம்காடுகளை பயன்படுத்துகின்றனர்.  சிலர் 3 சிம்களை கூட பயன்படுத்துகின்றனர். இவ்வாறு ஒன்றுக்கும் மேற்பட்ட சிம்கார்டுகளை வைத்து இருப்பது சிம் கார்டு தொடர்பான மோசடிகளை அதிகரித்துள்ளது.  உங்கள் பெயரில் இதுவரை எத்தனை சிம் கார்டுகள் வாங்கப்பட்டுள்ளது என்பதை தெரிந்து கொள்ள முடியும். இந்திய அரசின் சஞ்சார் சாத்தி போர்ட்டலின் மூலம் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ள சிம் கார்டுகளின் எண்ணிக்கையை தெரிந்து கொள்ள முடியும்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க |  தென்மாவட்டவாசிகளுக்கு குட் நியூஸ்.. உடுப்பி, மூகாம்பிகா செல்ல IRCTC டூர் பேக்கேஜ்!


உங்கள் பெயரில் எத்தனை சிம் கார்டுகள் வாங்கப்பட்டுள்ளது?


இதனை தெரிந்து கொள்ள இணையத்தில் 'Tafcop portal' என பதிவிடவும், பிறகு 'சஞ்சார் சாதி' போர்ட்டலில் நீங்கள் தேடிய விவரங்களை தெரிந்து கொள்ள முடியும்.  அந்த பக்கத்தில் உங்கள் மொபைல் எண்ணை உள்ளிட்டு கேப்ட்சாவை உள்ளிடவும்.  பிறகு உங்களுக்கு வந்துள்ள OTPயை உள்ளிடவும்.  அதில் உங்கள் பெயரில் வாங்கப்பட்டுள்ள சிம் கார்ட் மற்றும் நம்பரை பற்றிய விவரங்களை நீங்கள் தெரிந்து கொள்ள முடியும். உங்களுக்கே தெரியாமல் உங்கள் பெயரில் வாங்கப்பட்டுள்ள அங்கீகரிக்கப்படாத சிம்களை நீங்கள் அதில் புகாரளிக்கலாம்.


அந்த பக்கத்தில் உங்கள் பெயரில் சந்தேகத்திற்குரிய எண்கள் இருந்தால், அதற்கு புகார் அளிக்கலாம். அவ்வாறு செய்தால், அந்த எண் உங்களுடையது அல்ல என்று தொலைத்தொடர்புத் துறைக்கு அறிவிக்கப்படும், அதைத் தொடர்ந்து அந்த குறிப்பிட்ட எண்ணுக்கான சேவைகளை அரசாங்கம் நிறுத்தக்கூடும்.  உங்களுக்கு இனி ஒரு குறிப்பிட்ட மொபைல் எண் தேவையில்லை என்றால், 'தேவையில்லை' என்பதை கிளிக் செய்யலாம்.  மேலும் அதில் 'தேவை' என்பதை கிளிக் செய்தால், நீங்கள் மொபைல் எண்களை பயன்படுத்துகிறீர்கள் என்பதை அரசாங்கத்திடம் தெரிவிக்கலாம்.


சிம் மோசடியை குறைக்க ஒரு நபர் 9 சிம் கார்டுகள் வரை வாங்குவதற்கு இந்திய அரசு அனுமதிக்கிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், பல்வேறு பெயர்கள் மற்றும் முகவரிகளை பயன்படுத்தி ஒரே புகைப்படத்தில் வழங்கப்பட்ட 500 சிம் கார்டுகள் உட்பட போலி அடையாளங்களைப் பயன்படுத்தி வாங்கப்பட்டதாகக் கூறப்படும் 1.8 லட்சத்திற்கும் அதிகமான சிம் கார்டுகளை அரசு தடை செய்துள்ளது.  முறையான ஆவணச் சரிபார்ப்பு இல்லாமல் 67,000 சிம்களை வழங்கிய ஒரு கடையையும் சீல் வைத்துள்ளது.  


இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அரசாங்கம் அறிமுகப்படுத்திய புதிய சிம் கார்டு விதிகள் டிசம்பர் 1 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. மொத்த சிம் கார்டுகளின் விற்பனையைத் தடை செய்தல், பிஓஎஸ் உரிமையாளர்கள், முகவர்கள் மற்றும் விநியோகஸ்தர்களின் கட்டாயப் பதிவு உள்ளிட்ட பல மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. புதிய விதிகளின்படி, புதிய சிம் கார்டுகளை வாங்குவதற்கோ அல்லது ஏற்கனவே உள்ள எண்ணில் புதிய சிம்மிற்கு விண்ணப்பிக்கவோ முறையான விவரங்கள் கட்டாயமாக இருக்கும். சிம் கார்டு எடுக்கும் நபரின் ஆதார் அட்டையில் உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் தேவையான விவரங்கள் சரிபார்க்கப்படும்.


மேலும் படிக்க | Indian Railways: ரயில் பயணிகள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ‘6’ விதிகள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ