இந்திய தனித்துவ அடையாள ஆணையம், அதாவது UIDAI ஆதார் அட்டையில் பெயர், பாலினம் மற்றும் பிறந்த தேதியை மாற்றுவது தொடர்பான விதிகளை திருத்தியது. அதன்பிறகு ஆதார் அட்டையில் உங்கள் பெயர் மற்றும் பிறந்த தேதி மற்றும் பாலினத்தை புதுப்பிக்கலாம் என வசதி செய்யப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆனால் வாழ்க்கையில் எத்தனை முறை ஆதார் அட்டையில் பெயரை மாற்ற முடியும்? அதன் நிபந்தனைகள் என்ன தெரியுமா? இவற்றைப் பற்றிய விவரங்களை இன்று இங்கே காணலாம்.


ஆதார் அட்டையில் மீண்டும் மீண்டும் மாற்றம் செய்ய முடியாது


ஆதார் அட்டையை (Aadhaar Card) பலமுறை புதுப்பிக்கவோ, அதில் மாற்றங்களை செய்யவோ UIDAI அனுமதிப்பதில்லை என்பதை மனதில் கொள்ள வேண்டும். UIDAI அலுவலகத்தின் மெமோராண்டத்தின் படி, ஆதார் அட்டை வைத்திருப்பவர் தனது ஆதார் அட்டையில் தனது பெயரை வாழ்க்கையில் இரண்டு முறை மட்டுமே புதுப்பிக்க முடியும். பிறந்த தேதியைப் பொருத்தவரை, அதில் மாற்றம் தொடர்பான விதிகள் இன்னும் கடுமையானவை. ஆதார் அட்டையில் பிறந்த தேதியை அட்டைதாரரின் வாழ்க்கையில் ஒரு முறை மட்டுமே புதுப்பிக்க முடியும்.


இதில், ஆதார் (Aadhaar) சேர்க்கை நேரத்தில் பதிவு செய்யப்பட்ட பிறந்த தேதியை அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் (கூட்டியோ அல்லது கழித்தோ) மாற்ற அனுமதிக்கப்படுகிறது. அதே போல், ஆதார் அட்டையில் பாலினத்தையும் ஒரு முறைதான் மாற்ற முடியும்.


ALSO READ: வந்துவிட்டன IRCTC App மற்றும் புதிய வலைத்தளம்: இப்ப ticket புக் செய்வது இன்னும் easy ஆனது!!


ஆதாரில் பெயர் மாற்றத்திகான விதிமுறைகள்


உங்கள் பெயரில் சிறிய அளவு மாற்றங்கள் இருந்தால் மட்டுமே நீங்கள் ஆதார் அட்டையில் பெயரை மாற்ற முடியும். உதாரணமாக,


- பெயரில் எழுத்துப்பிழை திருத்தம் போன்றவை.


- பெயரின் வரிசையை (Sequence) மாற்ற விரும்பினால்


- குறுகிய வடிவில் (short form) உள்ள பெயரை முழு வடிவில் (full form) ஆக்குவது.


- திருமணத்திற்குப் பிறகு பெயரை மாற்ற விரும்பினால்.


ஆதார் அட்டையில் பெயர், பிறந்த தேதி மற்றும் முகவரி ஆகியவற்றை மாற்ற நீங்கள் சரிபார்க்கப்பட்ட ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். குறிப்பிடப்பட்டுள்ள முறைகளைத் தாண்டி ஆதார் அட்டையில் பெயர், பாலினம் அல்லது பிறந்த தேதியை மாற்றுவது விதிவிலக்கு கையாளுதல் செயல்முறையின் மூலம் மட்டுமே சாத்தியமாகும். அதே நேரத்தில், மொபைல் எண் அல்லது மின்னஞ்சலைப் புதுப்பிக்க எந்த வகையான ஆவணங்களும் தேவையில்லை. ஆனால் ஆதாரில் மொபைல் எண் அல்லது மின்னஞ்சலைப் புதுப்பிக்கும் முன் OTP கண்டிப்பாக தேவைப்படும்.


இப்படி புதுப்பிக்கலாம்


உங்கள் ஆதார் அட்டையில் (Aadhaar Card) பெயர், மொபைல் எண், பிறந்த தேதி, பாலினம் போன்றவை தவறாகவோ அல்லது முழுமையாக இல்லாமலோ இருந்தால், இதை நாம் எளிதாக சரிசெய்ய முடியும். ஆதார் அட்டையில் மாற்றங்களை செய்து புதுப்பிக்க, முதலில் https://uidai.gov.in/ என்ற வலைத்தளத்திற்குச் செல்லவும். இது ஆதார் அட்டைக்கான அதிகாரப்பூர்வ தளமாகும். வலைத்தளத்தைத் திறந்த பிறகு, கீழே வலது பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள 'Update Your Aadhaar Card’ டேபைக் கிளிக் செய்ய வேண்டும்.


ஆதார் அட்டையில் தகவல்களை குறிப்பிட்ட முறைதான் மாற்ற முடியும் என்பதால், முதல் முறை இவற்றை அளிக்கும்போதே கவனமாக இருப்பது நல்லது. 


ALSO READ: Jio Happy New Year Offer: மற்ற நெட்வொர்க்குகளுக்கும் இனி free, unlimited calls


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR