புளிப்பாக இருக்கும் புளியை எவ்வளவு சாப்பிடலாம்? பக்க விளைவுகள் என்ன?
Tamarind Side Effects : புளிப்பாக இருக்கும் புளியை ஒரு நாளைக்கு எத்தனை கிராம் சாப்பிட வேண்டும், அதன் பக்க விளைவுகள் என்ன என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
புளிப்பாக புளிக்கும் புளியின் பெயரை கேட்டாலே சிலருக்கு நாவில் எச்சில் ஊறும். சிலருக்கு உடம்பு முழுவதும் கூசும். ஏனென்றால் புளிப்பு சுவை சிலருக்கு கூச்சத்தையும் கொடுக்கும். அதனை அப்படியே சாப்பிடுவது பலருக்கும் பிடிக்கும். மரத்தில் காய்த்த உடனே பிஞ்சு, காய் மற்றும் பழுத்த புளி என ஒவ்வொரு நிலையிலும் அதன் சுவை மாறி சாப்பிடுவதற்கும் சூப்பராக இருக்கும். அந்த புளியை குழம்புக்கும் பயன்படுத்துவது தமிழ்நாட்டில் சமையலில் பிரதானம். குழம்பு கெட்டு போகாமல் இருக்க வேண்டும் என்பதற்காக புளியை குழம்பில் சேர்ப்பார்கள். தெரு உணவுகளில் வைக்கப்படும் குழம்புகளில் புளி இல்லாத குழம்பே இருக்காது. புளிக்குழம்பு என்றே தனியாகவும் வைக்கும் நடைமுறையும் உண்டு. இதுதவிர கத்தரிக்காய் புளிக்குழம்பு, சுண்டக்காய் புளிக்குழம்பு என இதில் பல வகைகளும் இருக்கின்றன. மதிய உணவு எந்த ஹோட்டலுக்கு சென்றாலும் புளிக்குழம்பு நிச்சயம் இருக்கும்.
அத்தகைய சிறப்பு வாய்ந்த புளியில் டார்டாரிக் அமிலம், அசிட்டிக் அமிலம், சுசினிக் அமிலம், பெக்டின், டானின்கள், ஆல்கலாய்டு, ஃபிளாவனாய்டுகள், கிளைகோசைடுகள் உள்ளன. இதனால் ஒரு நாளைக்கு 10 கிராம் புளியை உட்கொள்வது பாதுகாப்பானது என்று ஊட்டச்சத்து நிபுணர் நிகில் வாட்ஸ் கூறுகிறார். இந்த சுவைக்கு நீங்கள் அடிமையாகி அதிக புளியை சாப்பிட்டால், பல வகையான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரிக்கிறார்.
மேலும் படிக்க | LDL கொலஸ்ட்ராலை குறைக்க உதவும் புரதச்சத்து நிறைந்த உணவுகள்
புளியை அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்
1. பல் பிரச்சனைகள்
அதிக புளிப்பு அல்லது அமிலம் நம் பற்களுக்கு நல்லதல்ல, நீங்கள் புளியை அதிகமாக உட்கொண்டால் அது பற்களின் கட்டமைப்பை சேதப்படுத்தும். இது தவிர, பற்சிப்பி சேதமடையலாம் மற்றும் பற்கள் கூட பலவீனமாகிவிடும். புளி சாப்பிட்டாலே சிலருக்கு பல் கூச்சம் ஏற்படுவதை நீங்கள் பார்த்திருக்க வாய்ப்புகள் உண்டு. புளி என்றாலே பல் கூச்சம் ஏற்படும் அலர்ஜியும் சிலருக்கு இருக்கிறது. இப்படியானவர்கள் புளியை சாப்பிடமாட்டார்கள். பல் பிரச்சனை வர வேண்டாம் என நினைத்தால் அதிக புளி சாப்பிட வேண்டாம்.
2. வயிற்று பிரச்சனை
புளியில் டேனின்கள் உள்ளிட்ட பல சேர்மங்கள் உள்ளன, அவை ஜீரணிக்க சற்று கடினமாக இருக்கும். இதை அதிக அளவில் சாப்பிட்டால் வயிற்றில் உள்ள இரைப்பைக் குழாயில் அமிலத்தின் அளவு அதிகரிக்கும். இது வாய்வு, அமில ரிஃப்ளக்ஸ் மற்றும் பிற வயிற்று பிரச்சனைகளை ஏற்படுத்தும். செரிமான பிரச்சனை இருப்பவர்கள் புளி அதிகம் சேர்த்துக் கொள்வதை தவிர்க்கலாம். குடல் பிரச்சனை இருப்பவர்களும் புளி சேர்த்த குழம்புகளை தவிர்க்கலாம்.
3. குறைந்த இரத்த சர்க்கரை
புளியை அதிகமாக சாப்பிடுவது உங்கள் உடலில் இரத்தச் சர்க்கரைக் குறைவை ஏற்படுத்தும், இதன் காரணமாக தலைச்சுற்றல் மற்றும் பலவீனம் ஏற்படுவது பொதுவானது. ஏற்கனவே மருந்துகளை உட்கொள்பவர்கள் புளி சாப்பிட்டால் குளுக்கோஸ் அளவைக் குறைக்கும் என்பதால் இதனை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
4. கர்ப்ப காலத்தில் தவிர்க்கவும்
புளியை உட்கொள்வது கர்ப்பிணிகளுக்கும் நல்லதல்ல, ஏனெனில் இதை அதிகமாக சாப்பிடுவதால் உடலில் வெப்பம் அதிகரிக்கிறது, இது வயிற்றில் வளரும் குழந்தைகளை பாதிக்கிறது. இது தவிர தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் புளி சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும். இதுதவிர சூடு பிரச்சனை இருப்பவர்களும் அதிகம் புளி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். தோல் பிரச்சனை இருப்பவர்களும் புளி எடுத்துக் கொள்வதை தவிர்க்கலாம். மற்ற பிரச்சனை இருப்பவர்கள் புளி சாப்பிடலாமா வேண்டாமா என்பதை மருத்துவரிடம் ஆலோசனை செய்து முடிவெடுக்கவும்.
மேலும் படிக்க | ஜிம் வேண்டாம், டயட் வேண்டாம்: சட்டுனு எடை குறைக்க இதை பண்ணுங்க போதும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ