`நான் அழகாக, ஆரோக்கியமாக இருக்க காரணம்` நயன்தாரா சொன்ன லைப்ஸ்டைல் சீக்ரெட்
Nayanthara : சினிமா துறையில் இவ்வளவு நாள் பேரும் புகழோடு இருப்பதற்கு என்னோட லைப்ஸ்டைலே காரணம் என லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தெரிவித்துள்ளார்.
Nayanthara Lifestyle : தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக 20 ஆண்டுகள் கழித்தும் வலம் வருபவர் நயன்தாரா. லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்கள் அன்போடு அழைப்பதற்கு ஏற்ப, தான் ஏற்கும் ஒவ்வொரு கதாபாத்திரக்கும் நியாயம் செய்யும் வகையில் அவருடைய நடிப்பும், ஸ்டைலும் இருக்கும். எல்லா நடிகைகளும் ஸ்டார் நடிகர்களுடன் போட்டி போட்டுக் கொண்டிருக்க, இவர் மட்டும் தனி ரூட்டில் இப்போது திரைத்துறைக்கு வந்திருக்கும் இளம் நடிகர்களோடு ஜோடி சேருவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். இதனையே தன்னுடைய சினிமா வெற்றிக்கான ஒரு மந்திரமாகவும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா.
சினிமாவுக்கு எப்படி இப்படியொரு மந்திரத்தை நயன்தாரா வைத்திருக்கிறாரோ, அதேபோல் தன்னுடைய அழகு மற்றும் ஆரோக்கியத்துக்கும் ஒரு மந்திரத்தை 20 ஆண்டுகளாக பின்பற்றி வருகிறார். அதனால் தான், இவரோடு சினிமா துறைக்கு வந்த பல நடிகைகள் மார்கெட் இல்லாமல் வெளியேறிவிட்ட நிலையில், இன்றும் அழகாக, பிட்டாக இருந்து ஹீரோயினாக நடித்துக் கொண்டிருக்கிறார். லேடி சூப்பர் ஸ்டாரின் அந்த லைப்ஸ்டைல் மந்திரம் தான் என்ன? என பல ஆண்டுகளாக பலரும் கேட்டுக் கொண்டிருந்த நிலையில், ஒருவழியாக அவராகவே முதன்முறையாக தன்னுடைய லைப்ஸ்டைல் சீக்ரெட்டை பகிரந்து கொண்டிருக்கிறார்.
மேலும் படிக்க | பட்ஜெட் 2024: நிர்மலா சீதாராமன் கல்வித் தகுதி என்ன? நிதியமைச்சரானது எப்படி?
லைப்ஸ்டைல் குறித்து நயன்தாரா பேசும்போது, " சினிமா துறையில் இவ்வளவு ஆண்டுகள் இருக்க வேண்டும் என்றால், குறிப்பாக என்னைப் போன்ற ஒரு நடிகையாக இருக்க வேண்டும் என்றால், கட்டாயம் உணவில் கவனம் செலுத்தியே ஆக வேண்டும். ஏனென்றால், என்னுடைய உடல் அமைப்பு, பொலிவு எல்லாமே மிக முக்கியம். எந்த ரோல் என்றாலும் அதற்கு என்னை உடனடியாக தயார்படுத்திக் கொள்ளும் வகையில் ரெடியாக இருக்க வேண்டும். அதற்கு முக்கியம் தொடர்ச்சியாக உணவு மற்றும் லைப்ஸ்டைல் விஷயங்களில் அன்றாடம் கவனம் செலுத்த வேண்டும். ஏதோ ஒருநாளில் எல்லாம் எதையும் மாற்றிவிட முடியாது அல்லவா?" என கூறியுள்ளார்.
தொடர்ந்து லைப்ஸ்டைல் குறித்து பேசிய நயன்தாரா, " முதலில் எவ்வளவு கலோரிகளை எடுத்துக் கொள்கிறேன் என கணக்கிட்டு சாப்பிட்டு வந்தேன். அதன் பிறகு தான் எவ்வளவு சத்தான உணவை உண்ணுகிறோம் என்பதில் கவனம் செலுத்த வேண்டும் என புரிந்து கொண்டேன். அதனால், வெரைட்டியான உணவுகளை சமச்சீரான முறையில் எடுத்துக் கொள்கிறேன். அவை வீட்டில் சமைத்ததாகவும் இருக்க வேண்டும், ஊட்டச்சத்துகள் நிறைந்ததாகவும் இருக்க வேண்டும் என்பது தான் என்னோட சீக்ரெட். உடலை ஆரோக்கியமாக வைத்திருந்தால் தானே மகிழ்ச்சியாக இருக்க முடியும். அதனால் என்னை ஆரோக்கியமாக வைத்துக் கொண்டு மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன்." என தெரிவித்துள்ளார். மேலும், என்னோட டையட்டில் ஜங்க் புட்களுக்கு இடமில்லை, அதனை முற்றிலும் சாப்பிடுவதை நிறுத்திவிட்டேன் என்றும் நயன்தாரா கூறியுள்ளார்.
மேலும் படிக்க | பட்ஜெட் விலையில் கேரளாவை சுற்றிப் பாருங்க... 8 சுற்றுலா தலங்களை உடனே நோட் பண்ணுங்க
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ