நமக்கு தேவையான பொருளை வாங்க ஷாப்பிங் செய்யும்போது, நாம் குறிப்பிட்ட பொருட்களை மட்டும் வாங்குவதில்லை கூடுதலாக மற்ற பொருட்களையும் வாங்குகிறோம்.  உணவு, உடை அல்லது கேட்ஜெட் போன்ற பல பொருட்களை வாங்க நாம் ஷாப்பிங் செய்யும்பொழுது நம்முடைய மனநிலையை மாற்றும் விதமாக விற்பனையாளர்கள் சில யுக்திகளை பயன்படுத்தி நாம் வாங்க நினைக்கும் பொருட்கள் மட்டுமல்லாது கூடுதலாக வேறு பொருளையும் வாங்கும் நிலைக்கு நம்மை தள்ளிவிவிடுகிறார்கள்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ரேஷன் கடைகளில் வாங்குபவர்களுக்கு புது ரூல்ஸ், இதுதான் புதிய விதிமுறை


ஒரு கடையில் நீங்கள் ஷாப்பிங் செய்யும்பொழுது குறிப்பிட்ட இடத்தில் வைக்கப்பட்டிருக்கும் ஒரு பொருள் மறுமுறை அதே இடத்தில் இருக்காது.  உதாரணமாக ஒரு டாய்லெட் பேப்பரோ அல்லது தக்காளி கெட்ச்அப் போன்றவற்றை கண்டுபிடிக்க நீங்கள் சிரமப்படலாம்.   ஒரு கடையில் உள்ள பொருட்களின் இருப்பிடத்தை மாற்றுவதற்கு உண்மையான காரணம் என்னவென்றால் நமக்குத் தேவையான அல்லது விரும்பும் பொருட்களைத் தேடி அலையும்போது அங்கு அடுக்கப்பட்டுள்ள வெவ்வேறு விதமான பொருட்களை பார்த்து அதன்பால் ஈர்க்கப்படுகிறோம்.  இவ்வாறு கடைகளில் அதிக நேரம் செலவழிக்கும் போது நமது கூடைகளில் கூடுதலான பொருட்கள் நிரம்பி நமது பணப்பையை பதம் பார்த்துவிடுகிறது.



ஷாப்பிங் செய்வதில் 50 சதவீதத்தினர் ஆசையால் பொருட்களை வாங்குகின்றனர் என்றனர் 87 சதவீதத்தினர் விற்பனையாளர்களால் தூண்டப்படுகிறார்கள் என்று கூறப்படுகிறது.  ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் போன்ற தள்ளுபடிகளை விற்பனையாளர்கள் வழங்குவதன் மூலம் வாடிக்கையாளர்கள் அதனை வாங்க முற்படுகின்றனர்.  இந்த வகையான பொருட்களை வாங்கும்போது பணத்தை சேமிப்பதாக நினைக்கிறோமோ தவிர அந்த பொருள் நமக்கு உண்மையில் தேவைப்படுகிறதா என்பதை நாம் நினைப்பதில்லை.  இந்த யுக்தியை பயன்படுத்தி விற்பனையாளர்கள் நமது மனநிலையை மாற்றிவிடுகின்றனர்.


பொருள்களை தொகுப்பாக விற்பது என்பது விற்பனையாளர்களின் மற்றொரு யுக்தியாகும், மளிகை கடைகளில் சில பொருட்கள் தொகுப்பாக விற்கப்படுகிறது, உணவகங்களில் சில வகை உணவுகள் காம்போ ஆஃபரில் விற்கப்படுகிறது.  இது தள்ளுபடியை வழங்குவதாக பார்க்கப்படுகிறது, ஆனால் இது விற்பனையாளர்களுக்கு லாபத்தை தான் ஈட்டுகிறது.  இதுபோன்ற பல்வேறு யுக்திகளை பயன்படுத்துவது விற்பனையாளர்களின் லாபத்தை அதிகரிக்க உதவும் அதே வேளையில் அது வாடிக்கையாளர்களுக்கு பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது.



விற்பனையாளர்கள் தூண்டுதலின் பேரில் வாடிக்கையாளர்கள் அதிகப்படியான பொருட்களை வாங்கும்போது அவர்களுக்கு பண இழப்பு ஏற்பட்டு விடுகிறது.  இதன் காரணமாக அவர்களுக்கு மனசோர்வு, கவலை, குற்ற உணர்ச்சி போன்றவை ஏற்படுகிறது.  ஷாப்பிங் செய்யும்போது நாம் விழிப்புடனும், சுய கட்டுப்பாட்டுடனும்  இருக்க வேண்டும், என்ன பொருட்களை வாங்க வேண்டும் என்று ஒரு பட்டியலை தயார் செய்து வைத்துக்கொண்டு அதிலுள்ள பொருளை மட்டும் வாங்க முற்படுங்கள், இது சேமிக்க உதவுவதோடு வீண் பண இழப்பை குறைக்கும்.


மேலும் படிக்க | குழந்தைகளிடம் வாசிப்பை மேம்படுத்த 18 எளிய வழிகள்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR