ரேஷன் கடைகளில் வாங்குபவர்களுக்கு புது ரூல்ஸ், இதுதான் புதிய விதிமுறை

Standards for Ration Card: ரேஷன் கார்டு பயனாளிகளுக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது. இலவச ரேஷன் காலத்தை அரசு நீட்டித்துள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 11, 2022, 10:34 AM IST
  • ரேஷன் முறையின் தரத்தில் மாற்றம் வரவுள்ளது
  • அரசாங்கத்தின் புதிய விதிகளை அறிந்து கொள்ளுங்கள்
  • 80 கோடி மக்கள் பயன் பெறுகின்றனர்
ரேஷன் கடைகளில் வாங்குபவர்களுக்கு புது ரூல்ஸ், இதுதான் புதிய விதிமுறை title=

ரேஷன் கார்டு பயனாளிகளுக்கு ஒரு முக்கிய செய்தி. இலவச ரேஷன் காலத்தை அரசு நீட்டித்துள்ளது. இந்நிலையில், ரேஷன் கார்டு விதிகளில் உணவு மற்றும் பொது விநியோகத் துறை மாற்றம் செய்து வருகிறது. அரசு ரேஷன் கடைகளில் ரேஷன் பேறும் தகுதியுடையவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட தரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, இது தொடர்பாக மாநில அரசுகளுடன் பல சுற்றுக் கூட்டங்களும் நடத்தப்பட்டுள்ளன. புதிய விதியில் என்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது என்பதை பார்ப்போம்.

யாருக்கு பலன்
உணவு மற்றும் பொது விநியோகத் துறையின் கூற்றுப்படி, தற்போது நாடு முழுவதும் 80 கோடி மக்கள் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை (ரேஷன் கார்டு) பயன்படுத்தி வருகின்றனர். அவர்களில் பொருளாதார ரீதியாக வளமான பலர் உள்ளனர். இதைக் கருத்தில் கொண்டு பொது விநியோக அமைச்சகம் தரநிலைகளில் மாற்றங்களைச் செய்ய உள்ளது. உண்மையில், தற்போது புதிய தரநிலை முற்றிலும் வெளிப்படையானதாக மாற்றப்படும், இதனால் எந்த குழப்பமும் ஏற்படாது என்றே கூறலாம்.

மேலும் படிக்க | ரேஷன் அட்டை பயனாளிகளுக்கு முக்கிய செய்தி: மிகப்பெரிய அறிவிப்பை வெளியிட்டது அரசு 

மாற்றங்களுக்கான காரணம் என்ன
இதுகுறித்து, உணவு மற்றும் பொது வினியோகத் துறை கூறியதாவது., தரநிலை மாற்றம் தொடர்பாக மாநிலங்களவையில் கூட்டம் நடத்தப்படுகிறது. மாநிலங்கள் அளித்த பரிந்துரைகளை இணைத்து புதிய தரநிலைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த தரநிலைகள் விரைவில் இறுதி செய்யப்படும். புதிய தரநிலை அமலுக்கு வந்த பிறகு தகுதியுடையவர்கள் மட்டுமே பயன்பெறுவார்கள், தகுதியில்லாதவர்கள் பயன்பெற முடியாது. தேவைப்படுபவர்களை கருத்தில் கொண்டு இந்த மாற்றம் செய்யப்படுகிறது.

ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம்
உணவு மற்றும் பொது விநியோகத் துறையின் கூற்றுப்படி, இதுவரை 32 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 'ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம்' செயல்படுத்தப்பட்டுள்ளது. என்எஃப்எஸ்ஏ இன் கீழ் வரும் கோடிக்கணக்கான பயனாளிகள் அதாவது 86 சதவீத மக்கள் இந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். ஒவ்வொரு மாதமும் சுமார் 1.5 கோடி பேர் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் சென்றாலும் இதன் பலன்களைப் பெறுகின்றனர்.

மேலும் படிக்க | ரேஷன் கார்டில் புதிய உறுப்பினர் பெயரை சேர்ப்பது எப்படி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News