இந்தியாவில் கடந்த வாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி 5ஜி சேவைகளை அறிமுகப்படுத்தியதை தொடர்ந்து அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் அதன் 5ஜி சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு படிப்படியாக வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது.  சமீபத்தில் ஏர்டெல் நிறுவனம் அதன் 5ஜி சேவைகளை முதற்கட்டமாக டெல்லி, வாரணாசி, நாக்பூர், பெங்களூர், ஹைதராபாத், மும்பை, சென்னை மற்றும் சிலிகுரி உள்ளிட்ட 8 நகரங்களில் வழங்கவிருப்பதாக அறிவித்திருந்தது மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் 5ஜி சேவையானது மார்ச் 2024க்குள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் கிடைத்துவிடும் என்றும் தெரிவித்தது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | அசத்தும் இந்திய ரயில்வே; வாட்ஸ்அப்பில் PNR, ரயிலின் நிலை அறிந்து கொள்ளும் வசதி!



5ஜி ஸ்மார்ட்போன்களில் 4ஜி சிம் இயங்கும், அதேசமயம் 5ஜி-யின் உயர்தர சேவையை நீங்கள் அனுபவிக்க விரும்பினால் 5ஜி ஸ்மார்ட்போனில் 5ஜி சிம் கார்டு வைத்திருக்க வேண்டியது அவசியமானதாகும்.  இருப்பினும் 5ஜி ஸ்மார்ட்போனில் போடப்பட்டுள்ள 4ஜி சிம் உங்களுக்கு சிறந்த திறனை தரும்.
திரைப்படங்களை ஸ்ட்ரீம் செய்ய அல்லது கேம்களை அதிவேக இணையத்துடன் விளையாட விரும்புவர்களுக்கு கண்டிப்பாக 5ஜி சேவை தேவைப்படும்.  5ஜி சேவையை இயக்க புதிய சிம் தேவையில்லை, ஆனால் 5ஜி சேவை நீங்கள் பெற வேண்டுமானால் உங்கள் இடத்தில் 5ஜி ஆதரவு இருக்க வேண்டும் மற்றும் உங்களிடம் 5ஜி ஸ்மார்ட்போன் இருக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.இப்போது ஸ்மார்ட்போனில் 5ஜி நெட்வொர்க் சேவையை எவ்வாறு செயல்படுத்தலாம் என்பதை பற்றி இங்கே பார்க்கலாம்.


1) உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள செட்டிங்ஸ் மெனுவிற்குச் செல்லவும்.


2) கனெக்ஷன் அல்லது மொபைல் நெட்வொர்க் என்கிற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.


3) நெட்வொர்க் மோடை டேப் செய்து 5ஜி/4ஜி/3ஜி/2ஜி என்கிற ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும்.


4) இப்போது ஸ்மார்ட்போன் திரையின் வலது பக்கத்தின் மேலே 5ஜி நெட்வொர்க் மோடை பார்க்க ஹோம் ஸ்க்ரீனுக்கு சென்று பார்க்கலாம்.


மேலும் படிக்க | உங்கள் பாஸ்வேர்டை திருடும் 400 ஆஃப்கள் - பேஸ்புக் விடுத்த எச்சரிக்கை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ