ஆஸ்துமா போன்ற நுரையீரல் பிரச்சனைகளில் இருந்து நம்மை காத்துக்கொள்ள சில வழிமுறைகளை இந்த பதிவு நமக்கு எடுத்துரைக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெல்லி-NCR-ல் மாசுபாட்டின் தாக்கத்தை கருத்தில் கொண்டு உச்சநீதிமன்றத்தின் குழு பொது சுகாதார அவசரநிலையை அமுல் படுத்தியுள்ளது. அதன் பின்னர் டெல்லி NCR-ல் நவம்பர் 5 வரை கட்டுமான நடவடிக்கைகள் தடை செய்யப்பட்டுள்ளன. 


மாசு அளவு அதிகரித்ததால் டெல்லியில் உள்ள அனைத்து பள்ளிகளும் நவம்பர் 5-ஆம் தேதி வரை மூடப்படும் என்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். டெல்லி-NCR-ல் மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ள காற்று மாசு தற்போது 907 AQI-ல் கடுமையான வடிவத்தில் உள்ளது. இந்த காரணத்திற்காக, இங்கு வாழும் மக்கள் கடுமையான நோய்களால் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். குறிப்பாக ஆஸ்துமா போன்ற நுரையீரல் பிரச்சனையில் பாதிக்க வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.


மாசுபாட்டில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளவும், ஆஸ்துமா போன்ற நுரையீரல் பிரச்சனைகளில் இருந்து நம்மை காத்துக்கொள்ளவும் சில வழிமுறைகளை நாம் கீழே கொடுத்துள்ளொம்.


  • ஆஸ்துமா போன்ற நுரையீரல் நோய் உள்ளவர்கள் எல்லா நேரங்களிலும் தங்கள் இன்ஹேலர்களை அவர்களுடன் வைத்திருக்க வேண்டும், அதை தவறாமல் பயன்படுத்த வேண்டும்.

  • நுரையீரலை சேதப்படுத்தும் சிறிய நுண் துகள்களைத் தவிர்க்க முகமூடியை அணிவது அவசியம்.

  • உங்கள் கண்களைப் பாதுகாக்க, எப்போதும் சன்கிளாசஸ் அல்லது பெரிய பிரேம் கிளாஸை அணியுங்கள், இது உங்கள் கண்களுக்கு எந்த சேதத்தையும் ஏற்படுத்தாமல் பாதுகாக்கும்.

  • ஒப்பனையில் ஆர்வம் கொண்டவர்கள் உயர்தர ஒப்பனை பொருட்களை பயன்படுத்துதல் நல்லது, என்றபோதிலும் கண்களைச் சுற்றியுள்ள தோலில் ஒப்பனை பயன்படுத்த வேண்டாம். அலங்கார பொருட்களை பயன்படுத்துவது கண்களுக்கு தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களின் அபாயத்தை அதிகரிக்கிறது.

  • உங்கள் கண் இமைகளை எல்லா நேரங்களிலும் சிமிட்டிக்கொண்டு இருங்கள், ஏனெனில் இது கண் தொற்றுநோயைத் தவிர்க்க உதவும். மடிக்கணினி அல்லது மொபைலைப் பார்க்கும்போது பெரும்பாலான மக்கள் தங்கள் கண் இமைகளை சிமிட்டுவது இல்லை. எனவே கணினியில் வேலை பார்ப்பவர்கள் தங்கள் கண்களை பாதுகாத்தல் அவசியம் ஆகும்.

  • வீட்டில் இருக்கும் போது கண்களுக்கு கூலிங் பேக்கைப் பயன்படுத்துங்கள். இது உங்கள் கண்களுக்கு தேவையான நிவாரணத்தை அளிக்கும்.