How To Become A Celebrity : முன்னர், சினிமாவில் நடிப்பவர்கள், டிவியில் தெரிபவர்கள்தான் பிரபலமாவர் என்ற நிலை இருந்தது. ஆனால், அந்த நிலை இந்த டிஜிட்டல் யுகத்தில் எப்போதோ உடைந்து விட்டது. அப்படி, நீங்களும் ஒரு பெரிய செலிப்ரிட்டி ஆக வேண்டும் என்று நினைத்து கொண்டிருக்கும் ஆளா? நீங்கள் சில விஷயங்களைத்தான் செய்ய வேண்டி இருக்கிறது. அது குறித்து இங்கு பார்ப்போம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உங்கள் கனவு என்ன?


உங்களுக்கு பிடித்தது எது? எந்த விஷயத்தை நினைத்தால் உங்கள் மனம்  “இதை செய்தே ஆக வேண்டும்” என்று தோன்றுகிறதோ அந்த விஷயத்தை நோக்கி ஓடுங்கள். அது நடிப்பாக இருக்கலாம், பாடல், எழுதுதல், எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். எனவே, எது உங்களை ஊக்கப்படுத்தும் உங்களது திறமையாக இருக்கிறதோ அதை கண்டுபிடியுங்கள்.


திறன் வளர்த்தல்:


உங்களுக்கு பிடித்த திறனை வளர்த்துக்கொள்ள நேரத்தையும் பணத்தையும் செலவு செய்யுங்கள். அது குறித்த பயிற்சி வகுப்புகளுக்கு செல்வது, தினமும் பயிற்சி செய்வது, நீங்கள் முடித்த வேலைகள் குறித்து பிறரிடம் பேசுவது  போன்ற விஷயங்களை செய்யுங்கள்.


விளம்பரப்படுத்துதல்:


உங்களை நீங்களே பிரபலப்படுத்திக்கொள்ளவில்லை என்றால், வேறு யார் உங்களை பிரபலப்படுத்துவார்? எனவே, உங்களுக்கான பிராண்டை நீங்களே உருவாக்கி கொள்வது மிகவும் அவசியம் ஆகும். ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் மூலமாக உங்கள் திறமைகளையும் உங்களையும் நீங்கள் வளர்த்துக்கொள்ளுதல் வேண்டும். 


உயர்த்தர பொருள்:


நீங்கள் வளர்த்துக்கொள்ளும் திறனால், ஒரு நல்ல பொருளை அல்லது கண்டண்டை உருவாக்குதல் வேண்டும். இது போன்று நீங்கள் செய்யும் போது, உங்களை பிரபலப்படுத்தும் வாய்ப்புகள் பன்மடங்காக திறக்கும். 


சமூக வலைதளங்கள்:


உங்களிடம் இருக்கும், இன்ஸ்டாகிராம், யூடியூப், ட்விட்டர் எக்ஸ் உள்ளிட்ட அனைத்து தளங்களையும் சரியாக உபயோகப்படுத்திக்கொள்ளுங்கள். இது உங்களை புதிதாக உருவாக்க உதவும். 


நெட்வர்க்கிங்:


உங்களுக்கு, ஒரு விஷயத்தில் சாதிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தால், அதில் கைதேர்ந்து இருக்கும் நபர்களிடமும், அது குறித்து முழுமையாக தெரிந்த நபர்களிடமும் தொடர்பு வைத்து கொள்ளுங்கள். அப்போதுதான், நீங்கள் அதிகமாக வளர முடியும். 


மேலும் படிக்க | வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமா? இந்த குறிப்புகளை தெரிந்து கொள்ளுங்கள்!


நம்பகத்தன்மை:


நீங்கள் உருவாக்கும் விஷயங்களை நீங்கள் மட்டும் வைத்துக்கொள்ள போவதில்லை. இதை நான்கு பேர் பார்த்தாலும் பேசினாலும்தான் உங்கள் பொருளும், நீங்களும் பிரபலமாக முடியும். எனவே, நீங்கள் உருவாக்குவது நம்பகத்தன்மை வாய்ந்ததாகவும், பிறரை ஏமாற்றாததாகவுமிருக்க வேண்டும்.


உங்கள் நேயர்களுடன் தொடர்பு:


உங்களுக்கு பிடித்த விஷயங்களை நீங்கள் செய்ய ஆரம்பிக்கும் போது, உங்களுக்கான ஒரு ரசிகர் கூட்டம், அல்லது உங்கள் வேலையை பிடித்த ஒரு கூட்டம் உருவாகும். இப்படி உருவாகும் போது அவர்கள் உங்களை தொடர்பு கொள்ள முயற்சித்தால் நீங்கள் அவர்களுக்கு பதில் கூற வேண்டும். இது, உங்களுக்கு பெரும் ஆதரவாகவும் பின்னாளில் மாறலாம். 


தகவல்களை புதுப்பித்துக்கொள்ளுதல்:


நீங்கள் சாதிக்க நினைக்கும் துறையில், என்ன இப்போது ட்ரெண்டிங்கில் இருக்கிறது, எது புதிது, எது பழையது என்பதை கற்றுக்க்கொள்ள வேண்டும். நீங்கள் அனைத்தையும் தெரிந்து வைத்திருக்கும் ஆளாக இருந்தால் உலகம் உங்கள் கையில். 


மேலும் படிக்க | எந்த விவாதத்தையும் எளிதில் வெல்லலாம்! ஈசியான டிப்ஸ்...


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ