பிரிந்து செல்வது ஒருபோதும் எளிதான காரியம் அல்ல. அதிலும் குறிப்பாக காதல் உறவில் இருந்து விடு பட சிலர் பிரேக்-அப் செய்கையில் பெரிய சண்டை வரும். ஏன், கைகலப்பு கூட ஆகலாம். இது போன்ற பிரிதல்கள் ஒரு போர்க்களமாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு வாழ மட்டும் அல்ல, பிரிந்து செல்லவும் முடிவு எடுக்கலாம். அதற்கான உரிமை, மனிதர்களாக பிறந்த நம் அனைவருக்குமே உள்ளது.  பிரிந்து செல்வது கடினம் என்று நாம் அனைவரும் கேள்விப்பட்டிருக்கிறோம், ஆனால் அது ஒருவருக்கு அதிர்ச்சியை தருவதாக இருக்க வேண்டியதில்லை. அமைதியான முறையில் பிரிந்து செல்ல சில வழிமுறைகள் இருக்கின்றன. அவை என்னென்ன தெரியுமா? 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

1.நேர்மையாக பேசுங்கள், நேரடியாக பேசுங்கள்:


அமைதியான காதல் பிரிவிற்கான திறவுகோல், நேர்மையான மற்றும் நேரடியான பேச்சில் இருந்து தொடங்குகிறது. அவர்களை நேரில் பார்த்து பேசுவதை தவிர்ப்பதற்குப் பதிலாக, அவர்களுடன் திறந்த உரையாடலை மேற்கொள்ளுங்கள். உங்கள் உணர்வுகள், கவலைகள் மற்றும் பிரிந்ததற்கான காரணங்களை மரியாதையுடன் வெளிப்படுத்துங்கள். குற்றம் சாட்டுவதைத் தவிர்க்கவும், நேர்மையாக இருக்கலாம், ஆனால் அந்த நேர்மை அவர்களின் மனதை புண்படுத்தும் வகையில் இருக்க கூடாது. உங்கள் சொந்த உணர்வுகளில் கவனம் செலுத்தி அவற்றை வெளிப்படுத்துங்கள். உங்கள் வார்த்தைகளை கவனமாக தேர்வு செய்யவும்.


2.சரியான இடம் மற்றும் நேரத்தை தேர்வு செய்யுங்கள்:


பிரேக்அப் உரையாடலுக்கு அமைதியான, தனிப்பட்ட இடத்தை தேர்வுசெய்யவும். பொது இடங்களில் அல்லது தொலைபேசியில் இந்த விஷயத்தை சொல்வதை தவிர்க்கவும். உங்கள் காதலரின் நேருக்கு நேர் உரையாடலுக்கு மரியாதை கொடுங்கள், அது, நீங்கள் இருவரும் கவனம் சிதறாமல் பேசவும் கேட்கவும் முடியும். அவர்கள் பேசும் வார்த்தைகளை நீங்கள் கவனித்தால், நீங்கள் பேசுவதை அவரும் கவனிப்பார். 


3.காது கொடுத்து கேளுங்கள்:


பிரேக்-அப் என்பது சம்பந்தப்பட்ட இரு தரப்பினருக்கும் கடினமானது . நிங்கள் கூறுவதை அவர் புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தால் முதலில் அவர் சொல்வதை நீங்கள் கேட்டு புரிந்து கொள்ள வேண்டும். அனுதாபத்தை வளர்த்துக்கொள்ள பயிற்சி செய்யுங்கள்.  நீங்கள் பிரேக் அப் செய்யும் நபர், அவர்களின் உணர்வுகள், கவலைகள் மற்றும் கேள்விகளை வெளிப்படுத்த அனுமதிக்கவும். அவர் பேசுகையில் குறுக்கிடுவதையோ அல்லது தற்காத்துக் கொள்வதையோ தவிர்க்கவும். அனுதாபம் என்பது புரிந்துகொள்வதற்கும் குணப்படுத்துவதற்கும் ஒரு பாலம் ஆகும். 


மேலும் படிக்க | பெண்களின் இதயத்தில் பட்டுனு இடம்பிடிக்கனுமா... ஆண்களுக்கு இந்த 5 குணங்கள் அவசியம்!


4.அமைதியாக இருங்கள்:


பிரிவு ஏற்படுகையில் நம் உணர்ச்சிகள் கட்டுகடங்காமல் ஓடிக்கொண்டிருக்கும். கோபம், சோகம் என நம்மை அறியாமல் பல உணர்வுகள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்ளும். பிரேக் அப் செய்கையில் இவை அனைத்தையும் கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். கத்துவது, தவறாக பேசுவது போன்ற விஷயங்கள் அந்த சூழ்நிலையை மிகவும் மோசமாக்கி விடும். அதனால், உங்களுக்கு எதிரில் இருப்பவரின் எல்லைகளுக்கு மரியதை கொடுங்கள். நீங்கள் செய்யும் செயல்கள் அவரை பாதிக்காமல் இருக்க வேண்டும். 


5.விலகியிருப்பது நல்லது:


பிரேக் அப் ஆன பிறகு இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளாமல் இருப்பது நல்லது. அடிக்கடி பேசிக்கொள்வதையோ, பார்த்துக்கொள்வதையோ நிறுத்திக்கொள்ள வேண்டும். இருவரும் மனதளவில் சரியாவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இருவரும் தனித்தனியே அவரவர் வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும். 


மேலும் படிக்க | இது காதலா? காமமா? ரிலேஷன்ஷிப்பில் குழப்பத்தை தவிர்க்க..சில சிம்பிள் டிப்ஸ்..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ