அஞ்சல் அலுவலகம் பிபிஎஃப், சுகன்யா சம்ரித்தி போன்ற பல்வேறு வகையான சிறுசேமிப்பு திட்டங்களில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு புதிய வசதியை தொடங்கியுள்ளது.  அஞ்சல் அலுவலகம் அறிமுகப்படுத்தியுள்ள இந்த புதிய வசதியின் மூலமாக நீங்கள் தொடங்கியுள்ள கணக்கை பற்றிய முழுமையான தகவலை நீங்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் பெற்றுக்கொள்ளலாம்.  அதாவது சிறுசேமிப்பு திட்டங்களுக்கு இ-பாஸ்புக் அம்சம் தொடங்கப்பட்டு இருக்கிறது, இனிமேல் வாடிக்கையாளர்கள் நெட் பேங்கிங் மற்றும் மொபைல் பேங்கிங் போன்ற இதர சேவைகளை செயல்படுத்த வேண்டிய தேவையில்லை என்று கூறப்பட்டுள்ளது.  அஞ்சல் அலுவலகம் அறிமுகப்படுத்தியுள்ள இந்த இ-பாஸ்புக் அம்சத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் அவர்களின் பிபிஎஃப், சுகன்யா சம்ரித்தி போன்ற எந்தவொரு கணக்குகளின் இருப்புத்தொகையையும் வீட்டிலிருந்தபடியே நொடிப்பொழுதில் சரிபார்த்து கொள்ள முடியும்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | சம்பளம் பத்தலையா? வீட்டிலிருந்தே கூடுதல் வருமானம் பெற 6 வழிகள்!


இதுகுறித்து கடந்த 12ம் தேதியன்று அஞ்சல் துறை வெளியிட்ட அறிவிப்பில், 'மக்களுக்கு எளிமையான முறையில் வசதிகளை செய்து தரவும், செயல்முறையை எளிதாக்குவதையும் நோக்கமாகக் கொண்டு இந்த வசதியை தொடங்க முடிவு செய்துள்ளோம்' என்று தெரிவித்துள்ளது.  எந்த நேரத்திலும் மக்கள் இந்த அம்சத்தை பயன்படுத்தி அவர்களது கணக்கின் இருப்பை சரிபார்த்து கொள்ளலாம், மேலும் இந்த சேவைக்கு கட்டணம் எதுவும் செலுத்த வேண்டிய தேவையில்லை.  இ-பாஸ்புக் வசதியைப் பெற உங்கள் கணக்குடன் மொபைல் எண்ணை இணைக்க வேண்டும்.  மேலும் பிபிஎஃப், சுகன்யா சம்ரித்தி போன்ற கணக்குகளோடு நீங்கள் கட்டாயமாக உங்களது மொபைல் எண்ணை இணைந்திருக்க வேண்டும், மொபைல் எண்ணை இணைக்கவில்லை என்றால் பிழை ஏற்படும்.  அஞ்சல் அலுவலகத்திற்கு சென்றும் கூட நீங்கள் உங்கள் கணக்குகளுடன் மொபைல் நம்பரை இணைத்துக்கொள்ளலாம்.  இப்போது பிபிஎஃப், சுகன்யா சம்ரித்தி போன்ற கணக்குகளின் இருப்பை சரிபார்ப்பது எப்படி என்று இங்கு காண்போம்.


- அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.indiapost.gov.in அல்லது www.ippbonline.com என்ற தளத்திற்கு செல்ல வேண்டும்.


- அந்த தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள இ-பாஸ்புக் என்கிற இணைப்பை கிளிக் செய்ய வேண்டும்.


- அதன் பின்னர் https://posbseva.ippbonline.com/indiapost/signin என்கிற நேரடி இணைப்பை கிளிக் செய்யவும்


- பிறகு மொபைல் எண் மற்றும் கேப்ட்சாவை உள்ளிட்டு லாக் இன் செய்யவேண்டும்.


- இப்போது உங்கள் மொபைலுக்கு வந்துள்ள ஓடிபி-ஐ பதிவிட்டு, இ-பாஸ்புக்கைத் தேர்வு செய்ய வேண்டும்.


- பிறகு பிளான் டைப்பை தேர்வுசெய்து கணக்கு எண், ரிஜிஸ்டர் செய்யப்பட்ட மொபைல் எண் மற்றும் கேப்ட்சா ஆகியவற்றை உள்ளிட்டு, வெரிஃபைக்கு ஓடிபி-ஐ உள்ளிடவும்,


- இப்போது இருப்பு சரிபார்ப்பு, மினி ஸ்டேட்மென்ட், முழு ஸ்டேட்மென்ட் போன்ற ஏதேனும் ஒரு ஆப்ஷனை தேர்ந்தெடுக்க வேண்டும்.


- இறுதியாக நீங்கல் எந்த ஆப்ஷனை தேர்வு செய்தீர்களோ அதன் முழு விவவரங்கள் திரையில் காட்டப்படும்.


மேலும் படிக்க | ஊழியர்களுக்கு பயன் அளிக்கும் எல்ஐசி-யின் இந்த ஓய்வூதிய திட்டத்தை பற்றி தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ