மின் கட்டணத்தை பாதியாக குறைக்க பலே ஐடியா - இதை மட்டும் செய்யுங்க..!
Electricity tips : மாத மின் கட்டணம் உங்களுக்கு தலைவலியாக இருக்கிறது என்றால் அதனை பாதியாக குறைப்பது எப்படி? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்
கோடைக்காலம் முடிந்துவிட்டாலும் சிலரது வீடுகளில் மின் கட்டணம் இன்னும் அதிகமாகவே வருவதாக புலம்புகின்றனர். இதனால், மின் கட்டணத்தை பாதியாக குறைப்பது எப்படி என்பது குறித்து பார்க்கலாம். பிரிட்ஜ், வாசிங் மெஷிங் குறைவாக உபயோகிப்பவர்களுக்கு கூட சர்வ சாதாரணமாக ஆயிரம் ரூபாய் முதல் 6 ஆயிரம் ரூபாய் வரை மின் கட்டணம் வருவதாக தெரிவிக்கின்றனர். இதனை எப்படி சமாளிப்பது என்று புலம்பிக் கொண்டிருக்கிறீர்கள் என்றால், நீங்கள் இந்த வழிமுறைகளை எல்லாம் பின்பற்றுங்கள்.
வீட்டில் மின்சார உபயோகத்தை குறைப்பது எப்படி?
* பிரிட்ஜ், வாசிங் மெஷின் மூலம் சிலருக்கு அதிகப்படியான மின்கட்டணம் வரலாம். அதனால், பிரிட்ஜ் உபயோகத்தின்போது அதிக பவர் பயன்படுத்தாதவாறு, மெக்கானிக்குகளை கேட்டு சில அட்ஜெஸ்ட்மென்டுகளை செய்யுங்கள். அடிக்கடி பிரிட்ஜை ஓபன் செய்து மூடுவதை தவிர்க்கவும்.
* வாஷிங் மெஷின் அதிகமாக பயன்படுத்துகிறீர்கள் என்றால், துணிகளை நீங்களே ஊற வைத்து துவப்பதற்கு மட்டும் அதனை பயன்படுத்துங்கள். பின்னர், துணிகளை நீங்களே எடுத்து அலசி, தண்ணீரை உலர்த்தி காயவைக்கவும். அலசுவதற்கும், துணிகளை டிரை செய்வதற்கும் வாஷிங் மெஷினை பயன்படுத்தினால் மின்சாரம் அதிகம் செலவாகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
மேலும் படிக்க | இந்தியாவின் முதல் உலக பணக்காரர், முகேஷ் அம்பானியை விட 50 மடங்கு சொத்து - யார் இவர்?
* ஒரே நேரத்தில் அதிக துணிகளை வாஷிங் மெஷினுக்கு துணித்து அதிக லோடு கொடுக்காமல், குறைவான துணிகளை போட்டு துணிகளை துவைத்து எடுக்கவும்.
* உங்கள் வீட்டில் ஏசி பயன்படுத்துகிறீர்கள் என்றால், முழு நாளும் அதனை பயன்படுத்தாமல் சிறிய இடைவெளி விட்டு அதனை உபயோகிக்கலாம். ஸ்டெப்லைசர் சுவிட்ச் உபயோகம் நேரம் தவிர மற்ற நேரங்களில் அணைத்து வைக்கலாம்.
* வாட்டர் ஹீட்டர் இருக்கிறது என்றால் தேவையான அளவுக்கு தண்ணீரை சூடு செய்ய மட்டும் பயன்படுத்துங்கள். கூடுதலாக தண்ணீரை சூடாக்கிவிட்டு அதனை கீழே ஊற்றுவது அல்லது அதனை உபயோகிக்காமல் இருப்பது எல்லாம் மின்சாரத்தை வீணாக்கும் செயல் ஆகும். சோலார் மூலம் வாட்டர் ஹீட்டர் உபயோகிப்பது இன்னும் சிறந்தது.
* தினமும் அயர்ன் பாக்ஸை பயன்படுத்துவதை தவிர்த்து வாரம் ஒருநாளில் துணிகளை மொத்தமாக இஸ்திரி போட்டு வைத்துக் கொள்வது மின்சாரத்தை சேமிக்கும் வழிகளில் ஒன்று.
* வீட்டில் என்ன பல்புகள் இருக்கிறது என பாருங்கள். அதிகமாக குண்டு பல்புகள் இருக்கிறது என்றால் அதற்கு பதிலாக எல்இடி, சிஎப்எல் பல்புகளை பயன்படுத்தலாம். கலர் விளக்குகள் இருந்தால் அதனை உபயோகிப்பதை தவிர்க்கவும்.
* இண்டக்சன் அடுப்புகள் இருந்தால் அதனை தவிர்த்து கேஸ் அடுப்புகளை பயன்படுத்துவது அதிகப்படியான உங்களின் மின்சார உபயோகத்தை தவிர்க்கும். உங்கள் வீட்டில் உபயோகிக்கும் அனைத்து மின் பொருட்களையும் கவனித்து, அதனை பயன்பாட்டை எப்படியெல்லாம் குறைக்க முடியுமோ, அப்படி குறைக்கவும்.
மேலும் படிக்க | நைட் ஷிப்ட்டில் வேலை பார்ப்பதால் ஆண்மை குறையுமா? என்னங்க சொல்றீங்க..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ