இந்தியாவின் முதல் உலக பணக்காரர், முகேஷ் அம்பானியை விட 50 மடங்கு சொத்து - யார் இவர்?

Indian billionaires : இந்தியாவில் இருந்த முதல் உலகப் பணக்காரரும், முகேஷ் அம்பானியை காட்டிலும் உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 25% கட்டுப்பாட்டில் வைத்திருந்தவருமான ஹைதராபாத் நிஜாம் பற்றி உங்களுக்கு தெரியுமா?. 

Written by - S.Karthikeyan | Last Updated : Sep 20, 2024, 06:43 AM IST
  • இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்
  • முகேஷ் அம்பானியைவிட 50 மடங்கு சொத்து
  • உலக ஜிடிபியில் 25 விழுக்காடு வளம் வைத்திருந்தார்
இந்தியாவின் முதல் உலக பணக்காரர், முகேஷ் அம்பானியை விட 50 மடங்கு சொத்து - யார் இவர்? title=

ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரராகக் கருதப்படும் முகேஷ் அம்பானி உட்பட பல பில்லியனர்கள் இன்று இந்தியாவில் இருக்கின்றனர். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் தலைவரும் மிகப்பெரிய பங்குதாரருமான அம்பானியின் நிகர மதிப்பு சுமார் ரூ.11,460 கோடிகள் (சுமார் $116.6 பில்லியன்). இவரே இந்தியா மட்டுமல்ல, ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரராகவும் இருக்கிறார். உலக பணக்காரர்கள் வரிசையிலும் முகேஷ் அம்பானி முன்னணியில் உள்ளார். ஆனாலும் வரலாற்றை புரட்டிப் பார்த்தால் இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரராக முகேஷ் அம்பானி இல்லை. முகேஷ் அம்பானியைவிட 50 மடங்கு சொத்து அதிகம் வைத்திருந்தவர் இந்தியாவில் இருந்திருக்கிறார். அவர் வேறு யாருமல்ல, ஹைதராபாத்தின் கடைசி நிஜாம் மிர் ஒஸ்மான் அலி கான் தான். 

மேலும் படிக்க | இரவில் தனியாக பயணிக்கும் பெண்களுக்கு டிப்ஸ்! ஆபத்து வந்தால் என்ன செய்ய வேண்டும்?

சில ஆண்டுகளுக்கு முன்பு நிஜாம் மிர் ஒஸ்மான் அலி கான் சொத்து மதிப்பை மதிப்பிட்டபோது உத்தேசமாக 230 பில்லியன் டாலர்கள் என மதிப்பிடப்பட்டது. இந்த மதிப்பே அவரை உலக பணக்காரர் வரிசையில் இடம்பெற்றிருக்க வேண்டியவர் என்பதற்கு சான்றானது. சரி, இவர் தான் இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரா? என்று பார்த்தால் அவரும் இல்லை. இவரை விடவும் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துகளை வைத்திருந்தவர் இந்தியாவில் இருந்திருக்கிறார். அவர் யார்? என்று பார்த்தால் முகலாய பேரரசை வழிநடத்திய அக்பர் தான். 

1542 முதல் 1605 வரை ஆட்சி செய்த அக்பர், "கணக்கிட முடியாதது" என்று கருதும் அளவுக்கு மிகப் பெரிய செல்வத்தை வைத்திருந்ததாக வரலாற்று அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். அண்மைக்கால ஆராய்ச்சிகள் எல்லாம் அக்பரின் மகத்தான செல்வத்தைப் பற்றிய தகவல்களை தந்து கொண்டே இருக்கின்றன. Aberdeen Asia மற்றும் Money.com போன்ற அறிக்கைகள் அக்பரின் பேரரசு அவரது ஆட்சியின் போது உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 25 சதவீதத்தைக் கட்டுப்படுத்தியதாகக் கூறுகின்றன. செழுமைக்கு பெயர் பெற்ற எலிசபெதன் காலத்தில் பிரிட்டிஷ் முடியாட்சியின் செல்வத்துடன் இந்த அளவிலான செல்வம் பெரும்பாலும் ஒப்பிடப்படுகிறது.

மூன்றாவது மற்றும் மிகப்பெரிய முகலாய பேரரசர்களில் ஒருவரான அக்பர், குறிப்பிடத்தக்க வகையில் செழிப்பான ஒரு வம்சத்தை வழிநடத்தினார். அவரது ஆட்சியானது தெற்காசியாவின் ஏறக்குறைய 90 சதவிகிதம் வரை பரந்து விரிந்து இருந்தது. அக்பர் காலத்தில் தான் முகலாயப் பேரரசு, உலகப் பொருளாதாரத்தில் ஒரு மேலாதிக்க சக்தியாக இருந்தது. அக்பரின் அரசவையின் செல்வமும் ஆடம்பரமும் அந்தக் காலகட்டத்தில் ஐரோப்பா மன்னர் ஆட்சிக்கு ஈடு இணையற்றதாக இருந்ததாக பொருளாதார வரலாற்றாசிரியர் அங்கஸ் மேடிசன் குறிப்பிடுகிறார். அக்பரின் திறமையான நிதி உத்திகள், சீரான வரி மற்றும் சுங்க அமைப்புகள் ஆகியவை, அவரின் இந்த செல்வத்திற்கு காரணம் என்றும் சுட்டிக்காட்டப்படுள்ளது.

கி.பி 1600 இல், அக்பரின் ஆண்டு வருமானம் அமெரிக்கன் டாலரில் 17.5 மில்லியன் என மதிப்பிடப்பட்டது. பணவீக்கத்திற்கு ஏற்ப, சில மதிப்பீடுகள் அக்பரின் இன்றைய சொத்து அமெரிக்க டாலரில் 21 டிரில்லியனுக்கும் அதிகமாக இருக்கலாம் என்று கூறுகின்றன. இருப்பினும், பெரும்பாலான வரலாற்றாசிரியர்கள் அக்பரின் உண்மையான நிகர மதிப்பு ஆகியவற்றை துல்லியமாக கணக்கிட முடியில்லை என்பதையும் ஒப்புக்கொள்கிறார்கள்.

மேலும் படிக்க | வெளியூருக்கு பயணம் செய்யும் முன் இந்த மாதிரியான உணவுகளை எடுத்து கொள்ளுங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

 

Trending News