தன்னம்பிக்யை வளர்க்க வேண்டுமா? ‘இதை’ செய்யுங்கள் போதும்!
சிலர் தன்னம்பிக்கையே இல்லாமல் இருப்பர். அவர்கள், மன ரீதியாக தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்வது எப்படி? இதோ டிப்ஸ்!
ஒரு சிலருக்கு தன்னம்பிக்கை என்பது தானாகவே வளரும். அதற்கு அவர்கள் வளரும் வாழ்வியல் சூழல்களும், அவர்களை சுற்றியிருக்கும் மனிதர்களும் காரணமாக இருக்கலாம். ஆனால், ஒரு சிலருக்கு அப்படிப்பட்ட பாசிட்வான சூழல் அமையாது. இதனால் அவர்களுக்குள் தன்னம்பிக்கையும் வளராமல் இருக்கலாம். அப்படி, தனக்கு தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என நினைப்பவர்கள் கண்டிப்பாக சில டிப்ஸை பின்பற்றுங்கள்.
அனைவருமே தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளலாம்..
நம்பிக்கை என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்கு வழங்கப்படும் பரிசு அல்ல. இது நாம் அனைவருக்குள்ளும் வளர்க்கக்கூடிய திறமையாகும். நம்மில் சிலர் தன்னம்பிக்கையின்மை மற்றும் குறைந்த சுயமரியாதை உணர்வுடன் வளர்ந்திருப்போம். இது, பெரும்பாலான சமயங்களில் நமது குழந்தைப்பருவத்துடன் தொடர்புடையதாக இருக்கும். சிறுவயதில் ஏற்பட்ட காயங்களை அகற்ற, மருத்துவ ஆலோசனைகள் ஒரு தீர்வு என்றாலும் நம்மை நாமே பெரிதாக வளர்த்துக்கொள்வதும் அதற்கான ஒரு சிறிய முயற்சிதான். அதனால், அனைவருமே தன்னம்பிக்கையை வளர்த்து கொள்ளலாம் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
வார்த்தை ப்ரயோகம்:
தன்னம்பிக்கையோடு உணர்வதற்கு நீங்கள், உங்களது வார்த்தைகளை நம்பிக்கையோடு உபயோகிக்க வேண்டும். ‘எனக்கு தெரியவில்லை, என்னால் முடியாது..’ போன்ற வார்த்தைகளை உபயோகப்படுத்துவதை நிறுத்திவிடுங்கள். மாறாக, ‘எனக்கு தெரியும், என்னால் முடியும்’ போன்ற வார்த்தைகளை உபயோகியுங்கள். நீங்கள் உங்களுடன் பேசிக்கொள்ளும் போதும் சரி, வெளியில் பிறரிடம் பேசும் போதும் சரி நம்பிக்கையோடு பேசுவதை நீங்கள் கடைப்பிடிக்க வேண்டும்.
உங்களை பற்றி உங்களுக்குள் இருக்கும் சிந்தனைகள்..
நாமே நமது பெரிய விமர்சகர் என்பது மிகப்பெரிய உண்மை. எனவே, உங்களைப்பற்றி உங்களுக்குள் இருக்கும் எண்ணங்கள் நேர்மறையானதாக இருக்க வேண்டும். எப்போது, எந்த மாதிரியான எதிர்மறை எண்ணங்கள் தோன்றும் போதும் அதற்கு ஏற்ற பாசிடிவ் வார்த்தைகளை உங்கள் மனங்களில் விதையுங்கள். உங்களுக்குள் நீங்கள் பலமாக நினைப்பது, உங்களது திறமை, இதற்கு முன்னர் நீங்கள் பெற்ற வெற்றிகள் ஆகியவற்றை பற்றிய எண்ணங்களை வளர்த்துக்கொள்ளுங்கள். இதனால், உங்களுக்குள் உங்கள் மீதே இருக்கும் சந்தேகங்களை மனதில் இருந்து அகற்றலாம்.
மேலும் படிக்க | பற்கள் ரொம்ப மஞ்சள் மஞ்சளா இருக்கா.. இந்த ஆயுர்வேத வைத்தியம் ட்ரை பண்ணுங்க
சமூக வலைதளங்களில் இருந்து ப்ரேக்..
சமூக ஊடகங்கள் பிறருடன் இணைவதற்கான நல்ல வாய்ப்பு என்றாலும் அது சுய சந்தேகத்திற்கு வழிவகுக்கும். சமூக வலைதளங்களில் பலர் அவர்களின் வாழ்க்கையை பற்றி பதிவிடுவர். பலர், பிறரை அவர்களுடன் ஒப்பிட்டு இருக்கும் மகிழ்ச்சியையும் இழந்து விடுவர். எனவே, உங்களது தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள கண்டிப்பாக சமூக வலைதளங்களில் இருந்து ப்ரேக் எடுத்துக்கொள்வது நல்லது.
உடை, நடை பாவனை..
கேமரா முன்னர் நடிப்பதற்கு மட்டுமல்ல, பிறர் மதிக்கும் வகையில் வாழ்வதற்கே நாம் நமது உடை, நடை, பாவனை ஆகியவற்றை தன்னம்பிக்கை மிக்கதாக மாற்ற வேண்டும். உங்களுக்கு பிடித்த, உங்களை சக்தி வாய்ந்தவராக காண்பித்து கொள்ளும் ஆடைகளை அணியுங்கள். இது, உங்களுக்கான உங்களின் சுய மரியாதையையும் வளர்த்து விடும். உள்ளிருந்தும், வெளியிருந்தும் உங்களுக்கு தன்னம்பிக்கையை அளிக்கும் சக்தி, நீங்கள் அணியும் ஆடைகளுக்கு உண்டு. மேலும், நீங்கள் அமரும் போது உங்களது தோரணை ஆகியவற்றையும் பார்த்துக்கொள்ள வேண்டும். உங்கள் உடல் மொழியும் உங்களை எப்படிப்பட்டவர் என காண்பிப்பதில் சிறந்த பங்காற்றும்.
மேலும் படிக்க | தூங்காமல் இருந்தால் புற்றுநோய் வருமா? அதிர்ச்சி தரும் ஆய்வு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ