தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்வது எப்படி..? சிம்பிள் டிப்ஸ் இதோ..!
வாழ்க்கையின் மிக முக்கிய தேவையாக கருதப்படும் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்வது எப்படி? எளிய டிப்ஸ் இதோ.
வாழ்வில் சாதிக்க மட்டுமல்ல, வாழ்வதற்கே தன்னம்பிக்கை என்பது அத்தியாவசிய தேவையாக பார்க்கப்படுகிறது. வாழ்வில் வெற்றிப்பெற்றவர்கள் பலர் கூறுவது, “தன்னம்பிக்கையை அனைவரும் வளர்த்துக்கொள்ளுங்கள்..” என்பதுதான். நம்மில் பலருக்கு தன்னம்பிக்கை இல்லாமல் வாழ்வில் பல வாய்ப்புகளை இழந்திருப்போம். இதை தவிர்க்க நமக்குள் நாமே தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்வது எப்படி?
நிதர்சனத்தை ஏற்றுக்கொள்ளுதல்:
சமயங்களில் நம் வாழ்வில் அறிந்தோ அறியாமலோ, நம்மால் அல்லது நம்மை சுற்று இருப்பவர்களால் எதிர்பாராத நிகழ்வுகள் நடக்கும். அவை நமக்கு பிடிக்காத விஷயங்களாக இருக்கலாம். அது நடந்துவிட்டால், அதைப்பற்றி நினைத்துக்கொண்டே இருந்தால், ஒன்றும் மாறப்போவது இல்லை என்பதை தெரிந்து கொள்ளுங்கள். ஒரு பிரச்சனையில் சிக்கிக்கொண்டால் அதிலிருந்து வெளிவர வழியை யோசிக்க வேண்டுமே தவிர அதிலியே மாட்டிக்கொள்ள கூடாது. அடுத்த நிலை என்ன? என்ற சிந்தனை எல்லா சூழ்நிலைகளிலும் நமக்கு இருக்க வேண்டும்.
ஒரு விஷயம் நம் கையில் இல்லை என்றால், “அது நம் கையில் இல்லை..” என்ற நிதர்சனத்தை புரிந்து கொண்டு “எது நடக்கிறதோ அது நடக்கட்டும்” என்ற போக்கில் விட்டு விட வேண்டும்.
உடல் மொழி:
நாம் ஒரு இடத்தில் எப்படி நடந்து கொள்கிறோம் என்பதை பொறுத்தும் நமது தன்னம்பிக்கை வளர ஆரம்பிக்கும். குறிப்பாக வேலை செய்யும் இடங்களில் நீங்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள உங்களது உடல் மொழி மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. அமர்வது, கை குலுக்குவது போன்றவை உடல் மொழியில் அடங்கும். உதாரணத்திற்கு, அமரும் போது கூன் போட்டு அமர்வதை தவிர்க்கலாம். வேலை செய்யும் ஒருவரை கண்ணோடு கண் பார்த்தால் அவரை புறக்கணிக்காமல் சிறிதாக புன்னகைக்கலாம். இது, தேவையற்ற பயத்தை தடுக்க உதவும். “நான் சிரித்து அந்த நபர் சிரிக்கவில்லை என்றால் என்ன செய்வது..?” என்ற கேள்வி உங்கள் மனதி எழுவது புரிகிறது. அப்படி ஏதும் நடந்தால் சிரிக்காமல் போவது அவரது விருப்பம். அடுத்த முறை அவர் பக்கம் பார்ப்பதையே தவிர்க்கலாம்.
சில மாற்றங்களை மேற்கொள்ளலாம்:
அனைத்து இடங்களிலும் நாம் நாமாகவே இருக்க முடியாது. பல விதமான நபர்களுடன் பழகும் போதுதான் நமக்குள் சில மாற்றங்கள் எழும். அதனால், உங்களது கம்ஃபர்ட் சோனில் இருந்து வெளியில் வந்துவிட்டு தயங்கும் விஷயங்களை செய்ய வேண்டும். 4 பேர் முன்னிலையில் பேச பயந்தால் உங்களை பற்றிய எதையும் அவர்கள் தெரிந்து கொள்ள முடியாமல் போவர். அதனால், ஒரு முறை முயற்சி செய்து பேச தோன்றுவதை பேசிவிட வேண்டும். இது, அடுத்த முறை பேசுகையில் கண்டிப்பாக உங்கள் தைரியத்தை வளர்க்கும்.
மேலும் படிக்க | இதை மட்டும் செஞ்சீங்கனா உங்களுக்கு பண சுதந்திரம் கிடைச்சிரும்
உங்களை பற்றிய புரிதல்:
பிறர் நம்மை பற்றி என்ன நினைப்பார்களோ? என்ற கேள்வி உங்கள் மனதில் எழும் முன்னர் உங்களை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை தெளிவாக சிந்தியுங்கள். “எனக்கு இது வராது..என்னால் இதை செய்ய முடியாது..”போன்ற வாக்கியங்கள், நமக்கு நாமே போட்டுக்கொள்ளும் முட்டுக்கட்டைகள். இதனால், நம்மால் புதிய விஷயங்களை தேர்வு செய்ய முடியாமல் போகிறது. அதனால், நம்மை பற்றிய பாசிடிவான புரிதல் நமக்குள் இருக்க வேண்டும். மண்டைக்குள் ஆயிரம் பேச்சு ஓடிக்கொண்டிருக்கும். அவற்றில் நம்மை பற்றி நாமே கூறிக்கொள்ளும் நல்ல விஷயங்களை மட்டும் மீண்டும் மீண்டும் ஓடவிட்டுக்கொண்டே இருக்க வேண்டும்.
தோல்விக்களை பார்த்து பயம் வேண்டாம்:
வெற்றி மட்டுமே வாழ்க்கை அல்ல என்பது பலரும் அறிந்த உண்மை. வெற்றி வாழ்வின் ஒரு அங்கமாக பார்க்கப்படுவது போல, தோல்வியையும் ஒரு அங்கமாக கருத வேண்டும். இதை செய்தால் இப்படி ஆகி விடுமோ, அதை செய்தால் அப்படி ஆகி விடுமோ போன்ற பயங்களை விட்டொழித்து கண்டிப்பாக நீங்கள் மனதில் வைத்திருக்கும் அந்த விஷயத்தை செய்து பாருங்கள். அது உங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பத்தையே ஏற்படுத்தலாம். ஒரு முயற்சியை மேற்க்கொள்ளாமலேயே வாழ்க்கை முழுவதும் அதை பற்றி எண்ணிக்கொண்டிருக்காமல் அதை செய்து பார்த்து விடலாமே!
மேலும் படிக்க | அனுஷ்காவின் பளபள தேகத்திற்கு இதுதான் காரணமா..? வெளியானது ஸ்கின் கேர் சீக்ரட்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ