ஓவர் எடையை பட்டுன்னு குறைக்க இந்த டீ இரண்டு முறை குடித்தால் போதும்
Nellikai Tea For Weight Loss: இந்த தேநீர் தயாரிக்கும் முறையை அறிவதற்கு முன், நெல்லிக்காயின் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.
Nellikai Tea For Weight Loss: உங்கள் கொழுப்பு நிறைந்த தொப்பையை குறைக்க விரும்பினால், உடற்பயிற்சி செய்யுங்கள். உடலுக்கு எவ்வித உழைப்பு இல்லாமல் வயிற்றில் உள்ள பிடிவாதமான கொழுப்பை நம்மால் கரைக்க முடியாது. இது தவிர, சில ஆயுர்வேத விஷயங்களை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலமும் உடல் எடையைக் குறைக்கலாம். குறிப்பாக நெல்லிக்காய் டீயை ஒரு நாளைக்கு இரண்டு முறை உட்கொள்வதன் மூலம் உங்களது உடல் எடையை எளிதாக குறைக்கலாம். இந்த தேநீர் தயாரிக்கும் முறையை (நெல்லிக்காய் டீ தயாரிக்கும் குறிப்புகள்) தெரிந்து கொள்வதற்கு முன், நெல்லிக்காயில் இருக்கும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.
அரை கப் நெல்லிக்காயில் (Gooseberry Health Benefits) 33 கலோரிகள், 1 கிராமுக்கு குறைவான புரதம், 1 கிராமுக்கு குறைவான கொழுப்பு, 8 கிராம் கார்போஹைட்ரேட், 3 கிராம் நார்ச்சத்து, 0 கிராம் சர்க்கரை நிறைந்துள்ளது. வைட்டமின் ஏ, வைட்டமின் பி1, வைட்டமின் சி, வைட்டமின் ஈ தவிர, நெல்லிக்காயில் கால்சியம் மற்றும் இரும்புச்சத்து போன்ற ஊட்டசத்துக்களும் நிறைந்துள்ளது. இது ஃபீனால், உணவு நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றத்தின் வளமான ஆதாரமாகக் கருதப்படுகிறது. அதனுடன் நெல்லிக்காய் வாதம், பித்தம், கபம் மூன்றையும் சமன்படுத்துகிறது. இது தோஷங்களில் பித்தத்தை அமைதிபடுத்துகிறது. நெல்லிக்காய் வெப்பம் , எண்ணெய்தன்மை மற்றும் வலுப்படுத்தும் பண்புகளால் வாதம் மற்றும் கபத்தை சமன் செய்கிறது.
மேலும் படிக்க | Facial செய்து கொண்ட 3 பெண்களுக்கு HIV தொற்று! எப்படி தெரியுமா?
நெல்லிக்காய் தண்ணீர் தயாரிக்க தேவையான பொருட்கள் - Amla Water Ingredients:
இரண்டு கப் தண்ணீர்
ஒரு தேக்கரண்டி நெல்லிக்காய் தூள்.
அரை தேக்கரண்டி இலவங்கப்பட்டை.
கருப்பு மிளகு ஒரு சிட்டிகை.
ஒரு தேக்கரண்டி தேன் அல்லது வெல்லம் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு.
இப்போது செயல்முறையை தெரிந்துக்கொள்ளுங்கள்:
ஒரு கடாயை எடுத்து அதில் தண்ணீர், உலர் நெல்லிக்காய் தூள், மிளகு மற்றும் இலவங்கப்பட்டை தூள் சேர்க்கவும். இப்போது குறைந்த தீயில் வைத்துக் கொள்ளவும். இப்போது கலவையை சிறிது நேரம் கொதிக்க விடவும், இந்த கலவை நன்றாக கொதித்ததும், கேஸை அனைத்து விடவும். இப்போது அதை ஒரு கிலாஸில் வடிகட்டுக் கொள்ளவும். இப்போது அதில் சிறுது தேன் அல்லது வெல்லம் தூள் சேர்த்துக் கொள்ளவும். இப்போது உங்கள் நெல்லிக்காய் டீ தயார். கொழுப்பை விரைவாக எரிக்க நீங்கள் ஒரு நாளைக்கு இரண்டு முறை இந்த தேநீரை குடிக்கலாம்.
நெல்லிக்காய்க்கு பதில் நெல்லிக்காய் சூரணத்தை பயன்படுத்தியும் இந்த தேநீரை தயாரிக்கலாம். இந்த நெல்லிக்காய் தேனீரை காலையில் வெறும் வயிற்றில் மற்றும் உணவு உட்கொண்ட பிறகு குடித்தால் தொப்பை கொழுப்பு மற்றும் உடல் எடையை வேகமாக குறைப்பதில் உதவி கிடைக்கும்.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | சுட்டெரிக்கும் வெயிலில் குழந்தைகளை பாதுகாக்க டிப்ஸ்! பெற்றோர் கவனத்திற்கு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ