வாகனம் ஓட்டும் அனைவரும் கட்டாயம் லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால், போக்குவரத்து போலீஸால் அபராதம் விதிக்கப்படுவதில் இருந்து தப்பிக்க முடியாது. பொதுவெளியில் எங்கு சென்றாலும் வாகன ஓட்டிகள் லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும் என்பது விதி. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ரயில் பயணத்தில் செய்யும் ‘இந்த’ தவறுக்கு 6 மாத சிறை தண்டனை விதிக்கப்படலாம்!


ஆனால், லைசென்ஸ் இல்லாமலும் நீங்கள் சாலையில் வாகனங்களை ஓட்டலாம். போக்குவரத்து காவல்துறையினர் உங்களை தடுத்து நிறுத்தினால் அவர்களிடம் அபராதம் செலுத்தாமல் தப்பிக்கல்லாம். ஏனென்றால், அதற்கு அரசாங்கமே ஒரு அருமையான வழிமுறையை கொடுத்துள்ளது. இதற்கு முன்பு நீங்கள் காவல்துறையிடம் அபராதம் கட்டிய அனுபவம் இருந்தாலும், இனிவரும் காலங்களில் இந்த நடைமுறையை பின்பற்றி அபராதத்தில் இருந்து தப்பித்துக் கொள்ளுங்கள்



அது என்ன அம்சம் என்னவென்றால், உங்களின் ஓட்டுநர் உரிமத்தை அரசாங்கத்தின் டிஜி லாக்கரில் சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு சேமித்து வைத்திருப்பவர்கள் சாலையில் ஓட்டுநர் உரிமத்தின் நகல்களை எடுத்துச் செல்ல வேண்டிய அவசியமில்லை. மத்திய அரசின் செயலியான டிஜி லாக்கரில் லைசென்ஸூடன், பிற ஆவணங்களையும் சேமித்து வைத்துக் கொள்ளலாம். இதில் நீங்கள் சேமித்து வைத்தபிறகு போக்குவரத்து காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டால், அதனை ஆதாரமாக காட்டலாம். 



டிஜிட்டல் வடிவில் ஆவணங்கள் இருந்தாலும் செல்லுபடியாகும் என மத்திய அரசு அறிவித்திருக்கிறது. அதனால், உங்கள் ஸ்மார்ட்போனில் டிஜி லாக்கரை டவுன்லோடு செய்து ஆவணங்களை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள். எந்த நேரத்தில் எங்கு வேண்டுமானாலும் உடனடியாக இதனை ஆதாரமாக காட்டிக் கொள்ளலாம். இதனால், போக்குவரத்து விதிமீறலுக்கான அபராதம் உங்களுக்கு விதிக்கப்படாது. 


மேலும் படிக்க | ரயில் பயணிகளின் கவனத்திற்கு! அசுத்தம் செய்தால் சிறை செல்ல நேரிடும்..!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR