இந்திய ரயில்வே நாட்டின் 'life line' என்றும் அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் இந்திய இரயில்வே ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு லட்சக்கணக்கான பயணிகளை ஏற்றிச் செல்கிறது. நம்மில் ரயில் பயணம் செய்யாதவர்களை பார்ப்பது மிகவும் அரிது. ரயிலில் பயணம் செய்யும்போது, 1989ம் ஆண்டின் ரயில்வே சட்டம் விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியுமா? அவ்வாறு செய்யத் தவறினால் அபராதம் அல்லது தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
போதைப்பொருளுக்கு தடை
சிலர் ரயில் பயணத்தின்போது சிகரெட், மது போன்ற போதைப்பொருட்களை உட்கொள்கிறார்கள், ஆனால் ரயில் பயணத்தில் அவற்றின் பயன்பாடு முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது. ரயிலில் பயணிக்கும்போது எந்த ஒரு பயணியும் போதைப் பொருட்களை உட்கொள்ள இந்திய ரயில்வே அனுமதிப்பதில்லை. ரயில் பயணத்தின் போது போதைப் பொருட்களை உட்கொள்வது தண்டனைக்குரிய குற்றமாகும். இந்திய ரயில்வேயின் ரயில்வே சட்டம், 1989 சட்டத்தின் பிரிவு 145-ன் கீழ், ஒரு பயணிக்கு 500 ரூபாய் வரை அபராதம் அல்லது 6 மாதங்கள் வரை சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
மேலும் படிக்க | ரயில் பயணிகளின் கவனத்திற்கு! அசுத்தம் செய்தால் சிறை செல்ல நேரிடும்..!!
குப்பையை பரப்புவதற்கு அபராதம் விதித்தல்
ரயிலில் பயணிக்கும் போது அனைவரும் குப்பையை பரப்பாமல், தூய்மையாக பராமரிக்க ஒத்துழைக்க வேண்டும். ரயில்வே என்பது ஒவ்வொரு நாட்டவரின் சொத்து, எனவே ரயில் மற்றும் ரயில் நிலையங்களை சுத்தமாகவும் அழகாகவும் வைத்திருக்க ஒவ்வொரு இந்தியனும் ஒத்துழைக்க வேண்டும். ரயில் பயணிகள் ரயில் நிலையம் மற்றும் ரயிலில் குப்பையை போடக் கூடாது. குப்பைகளை எப்போதும் குப்பைத் தொட்டியில் வீச வேண்டும். இந்திய ரயில்வே சட்டம், 1989 சட்டத்தின் பிரிவு 198-ன் கீழ், ரயில்வே வளாகத்திலோ அல்லது ரயிலிலோ அசுத்தம் செய்தால், 500 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.
மேலும் படிக்க | Indian Railways: 5 இலக்க ரயில் எண்ணில் புதைந்துள்ள தகவல்கள்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR