ரேஷன் கார்டு அப்ளை பண்ணா இனி உடனே கிடைக்கும்.! நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்
புதிதாக ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு உடனடியாக ரேஷன் கார்டு அச்சிட்டு வழங்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.
தமிழகம் முழுவதும் நியாயவிலைக் கடைகள் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் மலிவு விலையில் கொடுக்கப்படுகின்றன. இலவச அரிசி மட்டுமல்லாது எண்ணெய், பருப்பு, கோதுமை, தீப்பெட்டி உள்ளிட்ட மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்கு ரேஷன் கார்டு அவசியம் இத்துடன் அரசின் நலத்திட்டங்கள் பெறுவதற்கும் ரேஷன் கார்டு முக்கிய ஆவணமாக இருக்கிறது. பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் மகளிர் உரிமைத் தொகை வாங்க வேண்டும் என்றால் ரேஷன் கார்டு கட்டாயம் வைத்திருக்க வேண்டும்
ரேஷன் கார்டு விண்ணப்பம்
புதிதாக திருமணமானவர்கள் பலர் இன்னும் ரேஷன் கார்டு விண்ணப்பித்து வாங்கவில்லை. ஏற்கனவே இருக்கும் ரேஷன் கார்டில் உங்களின் பெயரை நீக்கிவிட்டு புதுமண தம்பதிகள் தங்களுக்கு புதிய ரேஷன் கார்டு வாங்கிக் கொள்ளலாம். இதுதவிர்த்து புதிய ரேஷன் கார்டு விண்ணப்பிப்பவர்களுக்கு காலதாமதம் ஆவதாக புகார்களும் இருக்கின்றன. புதிய ரேஷன் கார்டு கிடைக்க மூன்று மாதங்கள் முதல் 6 மாதங்கள் வரை விண்ணப்பதாரர்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. இந்த பிரச்சனைகளை போக்க மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும் படிக்க | ஆதார் - வாக்காளர் அடையாள அட்டை இணைப்பு: இனிப்பான செய்தி கொடுத்த மத்திய அரசு
திருப்பூரில் ரேஷன் கார்டு
இந்த சிக்கலை போக்க இப்போது திருப்பூர் மாவட்டத்திலேயே ரேஷன் கார்டு அச்சிடப்பட்டு உரிய பயனாளிகளுக்கு உடனடியாக கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியரின் ஒப்புதலின்பேரில் நடைபெறும் இந்த பணிகளில் புதிய விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் முறையாக பரிசீலிக்கப்பட்டு மாவட்ட ஆட்சியரின் ஒப்புதலுடன் புதிய ரேஷன் கார்டு வழங்கப்படுகிறது. கடந்த 2 வாரங்காள நிலுவையில் இருந்த ரேஷன் கார்டு விண்ணப்பங்கள் மும்முரமாக குடிமைப் பொருள் அதிகாரிகள் பரிசீலித்து உரிய பயனாளிகளுக்கு ரேஷன் கார்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இனி திருப்பூர் மாவட்டத்தில் வெறும் 15 நாட்களில் புதிய ரேஷன் கார்டு கிடைத்துவிடும்.
ரேஷன் கார்டு பெற கண்டிஷன்
திருமணமாகி ஒரே வீட்டில் வசிக்கும் விண்ணப்பதாரர்கள் புதிய கார்டுக்கு விண்ணபிக்க கூடாது என்றும், ஏற்கனவே இருக்கும் கார்டில் தங்களின் பெயரை சேர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுறள்ளனர். ரேஷன் கார்டு பெற விண்ணபிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு கேஸ் இணைப்பு எண் அவசியம். இதன் மூலம் உரிய பயனாளிகளை கண்டறிய முடியும் என திருப்பூர் குடிமைப் பொருள் வழங்கல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க | உங்கள் ஆதாரை வெரிபை பண்ணிட்டீங்களா? இல்லைனா உடனே பண்ணிடுங்க!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ