கொரோனா நெருக்கடிக்கு மத்தியில், PAN Card செய்யும் விதிமுறையை இன்னும் எளிதாக்குவதற்கான விதிகளை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இப்போது ஆன்லைன் விண்ணப்பத்திலேயே PAN எண் வெளியிடப்படும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதற்கு 10 நிமிடங்கள் மட்டுமே எடுக்கும். ஒரே கிளிக்கில் PAN எண் உங்களுக்கு வழங்கப்படும். PAN எண்ணைப் பெற ஆதார் மட்டுமே தேவைப்படும். ஆதார் எண் மற்றும் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் உள்ளவர்களுக்கு உடனடியாக PAN எண் வழங்கப்படும். மொபைல் OTP மூலம் விண்ணப்பம் சரிபார்க்கப்படும்.


ரியல் டைம் வசதி


PAN அட்டையை உருவாக்க காகிதமற்ற மற்றும் நிகழ்நேர அடிப்படையிலான வசதி உள்ளது. இதற்கு e- PAN என்று பெயர். இந்த வசதி மூலம் PAN கார்டு வழங்க சில நிமிடங்களே ஆகும் என்று வருமான வரித் துறை தெரிவித்துள்ளது. இது மின்னணு PAN ஆகும். அதன் வெளியீட்டில் எந்தவிதமான கட்டணமும் இருக்காது. உங்கள் PAN அட்டை முற்றிலும் இலவசமாக உருவாக்கப்படும்.


ALSO READ: Aadhaar Card download செய்ய வேறெதுவும் வெண்டாம், உங்கள் முகம் மட்டும் போதும்!!


இதற்கு யார் விண்ணப்பிக்க முடியும்?


இப்போது ஆதார் எண் (Aadhaar Number) உள்ளவர்கள் வருமான வரித் துறை வலைத்தளத்தைப் பார்வையிட்டு e-PAN-க்கு விண்ணப்பிக்கலாம். விரைவில், அவர்களுக்கு PAN எண் ஒதுக்கப்படும். இந்த ஒதுக்கீடு நிகழ் நேர அடிப்படையில் இருக்கும். மின் PAN-க்கு நீங்கள் ஆதார் அடிப்படையிலான KYC செயல்முறையை முடிக்க வேண்டும். KYC முடிந்தவுடன், விண்ணப்பதாரருக்கு PAN PDF வடிவத்தில் வழங்கப்படும்.


e-PAN செய்வது எப்படி?


முதலில், வருமான வரித் துறையின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான incometaxindiaefiling.gov.in-க்கு செல்லுங்கள். இங்கே ஆதார் செக்ஷனில் ‘Instant PAN’ என்பதைக் கிளிக் செய்யவும். ஒரு புதிய பக்கம் திறக்கும். இங்கே நீங்கள் "Get New PAN”என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். மற்றொரு புதிய பக்கம் திறக்கும். ஆதார் விவரங்களை இங்கே நிரப்ப வேண்டும். கேப்ட்சா குறியீட்டை உள்ளிட வேண்டும்.


OTP அவசியம்


உங்கள் மொபைலுடன் ஆதார் இணைக்கப்பட்டிருப்பது இதற்கு முக்கியமாகும். அப்போதுதான் நீங்கள் OTP ஐ உருவாக்க முடியும். இந்த OTP –ஐ பிறகு இங்கே உள்ளிட வேண்டும். ஆதார் விவரங்கள் சரிபார்க்கப்பட வேண்டும். PAN அட்டைக்கான மின்னஞ்சல் ஐடியை உள்ளிடவும். ஆதாரின் e-KYC தரவு e- PAN-க்கு மாற்றப்படும். செயல்முறை முடிந்ததும், PDF வடிவத்தில் e- PAN கிடைக்கும். அதைப் பதிவிறக்க ஆதார் எண்ணை உள்ளிட வேண்டும்.


PAN அட்டை எங்கே பயன்படுத்தப்படுகிறது?


PAN அட்டை நிதி பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. வங்கி கணக்கைத் திறந்து கடன் வாங்க PAN தேவை. பொதுவாக தபால் அலுவலகம் மூலம் PAN கார்டு உருவாக்கப்பட்டு அது உங்கள் வீடு வந்து சேர 15 நாட்கள் முதல் ஒரு மாதம் வரை ஆகும். ஆனால், இப்போது விண்ணப்பதாரர் உடனடியாக தனது PAN எண்ணைப் பெற முடியும். PAN அட்டையில் 10 இலக்க எண் உள்ளது. 


ALSO READ: உங்க PAN card original-லா fake-கா? எதுக்கும் இப்படி ஒரு முறை check செஞ்சிடுங்க…


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR