Gas Cylinder Subsidy Update Tamil : மத்திய அரசு பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் (Pradhan Mantri Ujjwala Yojana) கீழ் எல்பிஜி கேஸ் சிலிண்டர் பயனாளிகளுக்கு மாதந்தோறும் மானியம் வழங்கி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் சிலிண்டர் எடுத்த பயனாளிகளுக்கு மாதந்தோறும் 300 ரூபாய், மற்றவர்களுக்கு 40 ரூபாயும் சிலிண்டர் உபயோகிக்கும் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளிலேயே நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. ஆனால், இந்த சிலிண்டர் மானிய தொகை பலரின் வங்கிக் கணக்குகளுக்கு வருவதில்லை என்ற புகார் இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம், எல்பிஜி சிலிண்டர் மானியம் பெறும் பயனாளிகள், உங்களின் KYC கணக்குகளை, மத்திய அரசு அண்மையில் கொடுத்த வழிக்காடுதல்படி அப்டேட் செய்திருக்க வேண்டும். ஒருவேளை அதைப் பற்றி உங்களுக்கு தெரியவில்லை என்றால், உங்களுக்கு எல்பிஜி கேஸ் சிலிண்டர் விநியோகம் செய்யும் பாரத் கேஸ், இண்டேன் கேஸ் என எதுவாக இருந்தாலும் அருகில் இருக்கும் அவர்களின் அலுவலகத்துக்கு நேரடியாக சென்று சிலிண்டர் மானியம் வராதது குறித்து தெரிவியுங்கள். அவர்கள் உங்களுக்கு ஏன் சிலிண்டர் மானியம் வரவில்லை என்ற தகவலை உடனே செக் செய்து தெரிவித்துவிடுவார்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | தீபாவளி போனஸ்.. பெண்களுக்கு இலவச சிலிண்டர் அறிவிப்பு.. உடனே விண்ணப்பிக்கவும்


இலவச எல்பிஜி கேஸ் சிலிண்டர் மானியம் வராததற்கான காரணம்?


சிலிண்டர் மானியம் (Gas Cylinder Subsidy) வாங்குவதற்கு தேவையான ஆவணங்கள் முறையாக சமர்பித்திருக்க வேண்டும். அதாவது, ஆதார் ஜெராக்ஸ், சிலிண்டர் பாஸ்புக், வங்கி சேமிப்பு கணக்கு எண் ஆகியவற்றை சிலிண்டர் விநியோகிப்பாளரிடம் கொடுத்திருக்க வேண்டும். உங்கள் ஆதார் எண் மற்றும் வங்கி கணக்கு எண் முறையாக இணைக்கப்பட்டிருக்க வேண்டும். எந்த ஆதார், வங்கி கணக்கு எண் இணைத்திருக்கிறீர்களோ, அந்த வங்கி கணக்கு எண் பாஸ்புக் ஜெராக்ஸை இலவச சிலிண்டர் மானியம் பெறுவதற்கும் கொடுக்க வேண்டும். கேஸ் சிலிண்டர் விநியோகிப்பாளர் இவை அனைத்து தகவல்களையும் அப்டேட் செய்துவிட்டால், சமந்தப்பட்ட வங்கிக்கு சென்று சிலிண்டர் மானியம் பெறுவதற்கு, ஆதார் - வங்கி சேமிப்பு கணக்கு எண் அப்டேட்டை செய்து கொடுக்குமாறு தெரிவிக்க வேண்டும். இதன்பிறகு உங்களுக்கு எல்பிஜி இலவச சிலிண்டர் மானியம் கிடைக்கும். 


எல்பிஜி கேஸ் சிலிண்டர் மானிய தொகை வரவு குறித்த தகவல்களை தெரிந்து கொள்வது எப்படி?


எல்பிஜி கேஸ் சிலிண்டர் மானிய தொகை வரவு வைக்கப்படுவதை ஆன்லைன் வழியாகவே பயனாளர்கள் தெரிந்து கொள்ள முடியும். வங்கி அல்லது ஏடிஎம்-க்கு செல்லாமலேயே, கையில் நீங்கள் ஸ்மார்ட்போன் வைத்திருந்தால் அதன் மூலம் கேஸ் சிலிண்டர் மானிய தொகை பேலன்ஸை செக் செய்து கொள்ளலாம். அதற்கு 
- உங்கள் மொபைலில் https://www.mylpg.in என்ற அதிகாரப்பூர்வ இணைய பக்கத்துக்கு செல்ல வேண்டும். அதில், மூன்றாவதாக இருக்கும் கேஸ் சிலிண்டர்கள் என்ற ஆப்சனை தேர்வு செய்து, அதில் உங்களுக்கு சிலிண்டர் விநியோகிக்கும் நிறுவனத்தின் பெயரை (Bharat Gas/ Indane Gas) தேர்வு செய்ய வேண்டும். 


- முதன்முதலாக அந்த பக்கத்துக்கு செல்கிறீர்கள் என்றால் புதிய அக்கவுண்டுக்கு கேட்கும் தகவல்களை உள்ளிட்டு, பாஸ்வேர்டு கொடுத்து Sign In செய்ய வேண்டும். சிலிண்டர் எண்ணுடன் இருக்கும் மொபைல் எண்ணை கொடுக்கவும். அதற்கு வரும் ஓடிபி கேப்ட்சாவை உள்ளிட்டு லாகின் செய்ய வேண்டும். 


- இப்போது உங்கள் டிஸ்பிளேவில் இடதுதுறத்தில்  View Cylinder Booking History / Subsidy transferred என்ற ஆப்சனை தேர்வு செய்தால், உங்களுக்கு மாதந்தோறும் வரவு வைக்கப்படும் மானிய தொகை குறித்த விவரங்களை பார்க்கலாம். உஜ்ஜூவாலா திட்ட பயனாளர் என்றால் 300 ரூபாயும், மற்ற பயனாளர் என்றால் 50 ரூபாயும் வரவு வைக்கப்பட்டிருக்கும். 


மேலும் படிக்க | LPG Cylinder Price Hike : எல்பிஜி கேஸ் சிலிண்டர் விலை உயர்வு - தமிழ்நாட்டில் விலை என்ன?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ