மிகப்பெரிய ஓய்வூதிய உயர்வு விரைவில்: 65 வயது முதல் 5%, 10%, 15% கூடுதல் ஓய்வூதியம்... எப்போது?

Central Government Pensioners: வயது அடிப்படையிலான ஓய்வூதியத்தை 65 வயதிலிருந்து உயர்த்துவது தொடர்பாக அளிக்கப்பட்ட பரிந்துரையின் மீது அரசாங்கம் ஏதேனும் நடவடிக்கை எடுத்ததா இல்லையா என்ற கேள்வி குழுவின் சார்பில் முக்கியமாக வைக்கப்பட்டது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 2, 2025, 01:55 PM IST
  • வயது அடிப்படையிலான ஓய்வூதிய உயர்வு.
  • ஓய்வூதியதாரர்களின் நலனுக்காக நாடாளுமன்ற குழுவின் பரிந்துரைகள்.
  • தற்போதைய ஓய்வூதிய முறை எப்படி உள்ளது?
மிகப்பெரிய ஓய்வூதிய உயர்வு விரைவில்: 65 வயது முதல் 5%, 10%, 15% கூடுதல் ஓய்வூதியம்... எப்போது? title=

Central Government Pensioners: ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு முக்கிய செய்தி கிடைத்துள்ளது. மத்திய அரசு பணிகளிலிருந்து ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்களின் நலன்களை பாதுகாக்க மத்திய அரசு பல வித நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகின்றது. இதில் ஏற்படும் குறைபாடுகளை போக்கவும் உடனடி நடவடிக்கைகள் எடுக்கபப்டுகின்றன. 

Parliamentary Committee : நாடாளுமன்றக் குழுவின் கோரிக்கை

ஓய்வூதியதாரர்களின் குறைகளைத் தீர்ப்பதில் தாமதம் ஏற்படுவது குறித்து நாடாளுமன்றக் குழு சமீபத்தில் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளது. இதனுடன் குறைகளின் முக்கிய பகுதிகளைக் கண்டறிந்து அமைப்பை மேம்படுத்த சமூக தணிக்கை குழுவை அமைக்குமாறு மத்திய அரசுக்கு நாடாளுமன்றக் குழு கோரிக்கை விடுத்துள்ளது.

Age Based Pension Hike: வயது அடிப்படையிலான ஓய்வூதிய உயர்வு

வயது அடிப்படையிலான ஓய்வூதியத்தை 65 வயதிலிருந்து உயர்த்துவது தொடர்பாக அளிக்கப்பட்ட பரிந்துரையின் மீது அரசாங்கம் ஏதேனும் நடவடிக்கை எடுத்ததா இல்லையா என்ற கேள்வி குழுவின் சார்பில் முக்கியமாக வைக்கப்பட்டது. இந்த விவகாரத்தை அரசு கிடப்பில் போட்டுள்ளதாக கமிட்டி கண்டறிந்தது. இவ்வாறான நிலையில் நாடாளுமன்றக் குழு இதற்கான காரணத்தை அரசாங்கத்திடம் கேட்டு மீள்பரிசீலனை செய்யுமாறு கோரியுள்ளது.

Pension Hike: ஓய்வூதியக் குழு அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது

வயது அடிப்படையில் கூடுதல் ஓய்வூதிய அதிகரிப்பு உள்ளிட்ட ஓய்வூதியர் அமைப்புகளின் கோரிக்கைகளை பரிசீலிக்குமாறு குழு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. வயது வாரியாக ஓய்வூதிய அதிகரிப்பை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. பரிந்துரைகப்பட்ட ஓய்வூதிய உயர்வு விவரம் இதோ:

- 65 வயதில் 5%
- 70 வயதில் 10%
- 75 வயதில் 15%
- 80 வயதில் 20%

அரசின் முன் வைக்கபப்ட்டுள்ள முக்கிய பரிந்துரைகள்

குழு பின்வரும் பரிந்துரைகளை அரசங்கத்திடம் சமர்ப்பித்துள்ளது.

குறைகளைத் தீர்ப்பதில் பொறுப்பு

ஓய்வூதியம் பெறுவோரின் புகார்களை விரைவாகவும், சரியான வழியிலும், தரமாகவும் தீர்க்க பொறுப்புக்கூறல் முறை அமல்படுத்தப்பட வேண்டும்.

சமூக தணிக்கை குழு உருவாக்கம்

குறைகளின் முக்கிய பகுதிகளை கண்டறிந்து தீர்க்க சமூக தணிக்கை குழுக்கள் உருவாக்கப்பட வேண்டும்.

ஓய்வூதிய உயர்வு பரிசீலனை

ஓய்வூதியர்களுக்கு வயது அடிப்படையில் கூடுதல் ஓய்வூதிய உயர்வை அமல்படுத்த வேண்டும்.

Additional Pension: தற்போதைய ஓய்வூதிய முறை எப்படி உள்ளது?

தற்போது மத்திய அரசு ஓய்வூதியம் பெறுபவர்கள் பின்வருமாறு வயது அடிப்படையிலான கூடுதல் ஓய்வூதியத்தைப் பெறுவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

- 80 வயதில் 20%
- 85 வயதில் 30%
- 90 வயதில் 40%
- 95 வயதில் 50%
- 100 ஆண்டுகளில் 100%

தற்போதைய விதியின்படி, 80 வயதுக்குப் பிறகு ஓய்வூதியம் 20% உயர்த்தப்படுகிறது. இது சரியான அளவு அல்ல. 65 வயது முதல் 75 வயது வரை அதிக பணம் தேவைப்படுகிறது. ஆனால் அதை விடுத்து 80 வயதிற்குப் பிறகு ஓய்வூதியத்தை அதிகரிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை.

Pension System: ஓய்வூதியதாரர்களின் நலனுக்காக நாடாளுமன்ற குழுவின் பரிந்துரைகள்

- சமூகத்தில் ஏற்படும் மாற்றத்தின் விளைவுகள்

நியூக்கிளியர் குடும்பங்கள், அதாவது கணவன், மனைவி, குழந்தைகள் மட்டும் உள்ள குடும்பங்கள் அதிகரித்து வரும் போக்கு மற்றும் சமூக மற்றும் புவியியல் இயக்க மாறுபாடுகள் ஆகியவை முதியோருக்கான கவனிப்பில் குறைவுக்கு வழிவகுத்துள்ளன என்று குழு குறிப்பிட்டது.

- 2050க்குள் முதியோர் எண்ணிக்கை

மதிப்பீடுகளின்படி, 60 வயதுக்கு மேற்பட்டவர்களின் மக்கள்தொகை விகிதம் 2050 இல் கணிசமாக அதிகரிக்கும் என தரவுகள் தெரிவிக்கின்றன.

- வலுவான ஓய்வூதிய அமைப்பு தேவை

மாறிவரும் சமூகச் சூழலில், முதியோர்கள் சுயசார்புடையவர்களாக மாற, வலுவான ஓய்வூதியத் திட்டம் தேவை.

- CPENGRAMS போர்டல்

CPENGRAMS என்பது மையப்படுத்தப்பட்ட இணைய அடிப்படையிலான ஓய்வூதிய குறைகளை நிவர்த்தி செய்யும் அமைப்பு. இதன் மூலம், ஓய்வூதியம் பெறுவோர் தங்களது புகார்களை ஆன்லைன் மூலமாகவோ, ஓய்வூதியர் அமைப்புகள் மூலமாகவோ அல்லது தபால் மூலமாகவோ தெரிவிக்கலாம்.

குழுவின் பரிந்துரைகள்

நாடாளுமன்ற குழு கொடுத்துள்ள பரிந்துரையை முன்னுரிமை அடிப்படையில் அமல்படுத்த நிதி அமைச்சகத்திடம் குழு கேட்டுக் கொண்டுள்ளது. ஓய்வூதியம் பெறுவோரின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு பார்த்தால், சமூகத்தில் முதியோர்களின் நிலையை மேம்படுத்துவதற்கான ஒரு முக்கியமான படியாக இந்தப் பரிந்துரை அமையும் என்று கூறினால் அது மிகையாகாது.

மேலும் படிக்க | PPF, SSY, SCSS... சிறுசேமிப்பு திட்ட வட்டி விகிதங்களை அறிவித்தது அரசு: அதிக வட்டி கிடைக்குமா?

மேலும் படிக்க | அரசு ஊழியர்களுக்கு டபுள் ஜாக்பாட்: அகவிலைப்படி உயர்வுடன் 18 மாத அரியர் தொகையும் வருது

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News