குட்டையாக, அதாவது உயரம் குறைவாக உங்கள் குழந்தைகள் இருக்கிறார்களே என்ற கவலை இருக்கிறதா?, நீங்கள் கவலைப்பட வேண்டாம். இயற்கையாகவே குழந்தைகளின் உயரத்தை அதிகரிக்கக்கூடிய வழிகள் இருக்கின்றன. உயரம் குறைவாக இருப்பதால் எல்லோரும் இழிவாக பார்க்கிறார்களே என்ற கவலை இனி உங்களுக்கு வேண்டாம். இந்த வழிமுறைகளை பயன்படுத்தி உங்கள் குழந்தையின் உயரத்தை அதிகரிக்க முயற்சி செய்யுங்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குழந்தை ஒரு வயதுக்குப் பிறகு வளரத் தொடங்கி படிப்படியாக 18 வயது வரை வளருவார்கள். அதன்பிறகு குழந்தைகளின் வளர்ச்சி நின்றுவிடும். ஆனால் எளிய வாழ்க்கை  மாற்றங்களை செய்யும்போது குழந்தைகளின் உயரத்தை இயல்பாகவே அதிகரிக்கலாம். நாம் உண்ணும் உணவு உயரம் உட்பட நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது. அதேபோல், நமது வாழ்க்கை முறையும் நமது உயரத்தை பாதிக்கிறது. குழந்தைகள் உயரமாக வளரவில்லை என்றாலும், சரியான ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் உதவியுடன் உங்கள் உயரத்தை சிறிது அதிகரிக்கலாம்.


மேலும் படிக்க | தொப்பை கொழுப்பு கரைய, உடல் பருமன் உடனே குறைய.... காலையில் இதை செய்தால் போதும்


மருத்துவர் ராகுலின் கூற்றுப்படி, கால்சியம், வைட்டமின் டி மற்றும் புரதம் கொண்ட சீரான உணவு மற்றும் வழக்கமான உடற்பயிற்சி உங்கள் உயரத்தையும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் என்கிறார். ஒருவர் பருவமடைந்தவுடன் அவரது உயரம் வளர்வது நின்றுவிடும் என நம்பப்படுகிறது. இது உண்மை, உங்கள் எலும்புகள், குறிப்பாக உங்கள் வளர்ச்சித் தட்டுகள் காரணமாக 18 வயதிற்குப் பிறகு உங்கள் உயரம் அதிகரிப்பதை நிறுத்துகிறது. உயரத்தை அதிகரிக்க கால்சியம் உட்கொள்ளலை அதிகரிக்கவும். எலும்புகளை வலுப்படுத்த கால்சியம் மிகவும் முக்கியமானது. 


எலும்புகளை வலுப்படுத்துவது மட்டுமின்றி, ஒரு நபர் உயரமாக இருக்கவும் உதவுகிறது. அதன் ஊட்டச்சத்துக்காக, பால், பச்சை காய்கறிகள் மற்றும் பால் பொருட்களை உணவில் சேர்க்கவும். மேலும், எலும்புகளை வலுப்படுத்த கால்சியத்தை சரியாக உறிஞ்சுவதற்கு வைட்டமின் டி மிகவும் முக்கியமானது. வைட்டமின் டி குறைபாட்டை சூரிய ஒளியில் படுவதன் மூலம் குணப்படுத்தலாம். தினமும் காலை வெயிலில் 15-20 நிமிடங்கள் உட்காரவும். மேலும், மீன், முட்டை மற்றும் முழு தானியங்களை சாப்பிடுங்கள். தசை வளர்ச்சிக்கு புரதம் மிகவும் முக்கியமானது. அதற்கு, இறைச்சி, பீன்ஸ், பருப்பு வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இது உங்கள் உயரத்தை அதிகரிக்க உதவும். இவற்றுடன் உடற்பயிற்சி செய்யும்போது உயரம் அதிகரிக்கும். 


மேலும் படிக்க | கெட்ட கொழுப்பை ஒட்ட விரட்ட.. டயட்டிலும் வாழ்விலும் இந்த மாற்றங்களை செய்தால் போதும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ