எந்தவொரு நிதி பரிவர்த்தனைக்கும், பான் அட்டை (PAN Card) வைத்திருப்பது மிக முக்கியம். பான் கார்டின் பத்து இலக்கங்கள் மூலம், வங்கிக் கணக்கைத் திறப்பது, சொத்து வாங்குவது அல்லது விற்பது, கார் வாங்குவது அல்லது விற்பது, ஐ.டி.ஆர் தாக்கல் செய்வது, 2 லட்சம் ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள நகைகளை வாங்குவது போன்ற பல விஷயங்களை நீங்கள் எளிதாக செய்யலாம். ஆனால் இப்போதெல்லாம் போலி PAN Card பற்றிய பல வழக்குகள் வருகின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் ஏதேனும் பரிவர்த்தனை செய்வதற்கு முன், உங்கள் PAN Card –டும் போலியானதா அல்லது சரியானதா என்பதை அறிந்து கொள்வது அவசியம். சரியான PAN Card-ஐ எவ்வாறு அடையாளம் காண்பது என்பதை இப்போது பார்க்கலாம்.


ஐடி துறை PAN Card-ஐ வெளியிடுகிறது


இந்த 10 இலக்க அடையாள எண் வருமான வரித் துறையால் (Income Tax Department) வழங்கப்படுகிறது. இது நிரந்தர கணக்கு எண் (Permanent Account Number) என்று அழைக்கப்படுகிறது. PAN Card என்பது நமது அடையாளத்தின் முக்கியமான ஆவணம். குறிப்பாக நிதி விஷயங்களில் இது ஒரு பெரிய பங்கைக் கொண்டுள்ளது.


உங்கள் PAN- ஐ நீங்கள் இந்த வழிகளில் அடையாளம் காணலாம்


• முதலில், நீங்கள் வருமான வரித் துறையின் E-Filing போர்ட்டலுக்குச் செல்ல வேண்டும்.


• இங்கே, மேல் பக்கத்தில், ‘Verify your PAN Details’ என்ற இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டும்.


• இதற்குப் பிறகு, பயனர்கள் PAN Card விவரங்களை நிரப்ப வேண்டும்.


• இதில், PAN எண், PAN Card வைத்திருப்பவரின் முழு பெயர், பிறந்த தேதி போன்ற தகவல்கள் வழங்கப்பட்டிருக்கும்.


• இதில் சரியான தகவலை நிரப்பிய பிறகு, நிரப்பப்பட்ட தகவல்கள் உங்கள் PAN Card –டுடன் பொருந்துகிறதா இல்லையா என்ற செய்தி போர்ட்டலில் வரும்.


• இந்த வழியில் நீங்கள் எளிதாக PAN Card-ன் உண்மைத்தன்மையை அறியலாம்.


ALSO READ: உங்கள் PIN-ஐ இந்த எளிய வழிகளில் மாற்றலாம், சைபர் மோசடியிலிருந்து தப்பிக்கலாம்!!


போலி வழக்குகள் அதிகரித்து வருகின்றன


நாட்டில் லாக்டௌனுக்குப் பின்னர், பலர் போலி PAN Card-களைப் பயன்படுத்தி மோசடி செய்து வருகிறார்கள். இந்த நிலையில், உங்கள் PAN Card சரியானதா என்பதை அறிந்து கொள்வது மிக முக்கியம். நாட்டில் வருமான வரித்துறை வழங்கிய PAN Card-ஐ சரிபார்ப்பதும் மிக முக்கியம்.


உங்களிடம் இன்னும் PAN Card இல்லை என்றால், அதை நிமிடங்களில் உருவாக்கிக் கொள்ளும் வசதியை அரசாங்கம் தொடங்கியுள்ளது. இதற்காக, நீங்கள் வருமான வரி வலைத்தளத்திற்கு செல்ல வேண்டும். இதுவரை PAN Card இல்லாதவர்களுக்காக இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது.  E PAN –க்கு நீங்கள் உங்கள் ஆதார் அட்டை எண்ணை வழங்க வேண்டும். அதில் இருந்து OTP உருவாக்கப்படும். சில நிமிடங்களில் E PAN உங்களுக்கு கிடைத்துவிடும். 


ALSO READ: Aadhar Card-ல் இந்த 5 விஷயங்களை update செய்ய எந்த ஆவணமும் தேவை இல்லை!!