How to Identify Pure Ghee | நெய் என்றாலே சுத்தம் என்ற காலம் எல்லாம் மலையேறிவிட்டது. சுத்தமான நெய் என்ற பெயரில் இப்போது கலப்பட நெய் விற்பனை செய்யப்படுகிறது. தீபாவளி இனிப்புகளிலும் கூட கலப்பட நெய் பயன்படுத்தப்படுவது அதிர்ச்சியான உணமை. பல இடங்களில் தயாரிக்கப்படும் இனிப்புகளில் கலப்பட நெய்யைக் கொண்டு சுகாதாரமற்ற முறையில் இனிப்புகளை தயாரித்து விற்கின்றனர். இதனால் வாடிக்கையாளர்கள் கவனமாக இருப்பது நல்லது. தயாரிக்கப்பட்ட இனிப்புகளில் பயன்படுத்தபட்ட நெய் கலப்படமா? அல்லது சுத்தமான நெய்யா? என்பதை கண்டுபிடிக்க முடியாது. ஆனால், கடைகளில் விற்பனை செய்யும் நெய் சுத்தமனாதா?, கலப்படமானதா? என்பதை கண்டுபிடித்துவிடலாம். நெய் சுத்தமானதா? கலப்படமானதா என்பதை கண்டுபிடிக்க பல வழிகள் இருகிறது என்றாலும் ஒருசில எளிய முறைகளை இங்கே தெரிந்து கொள்வோம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சுத்தமான நெய் கண்டுபிடிக்கும் வழிமுறை : 


நெய்யில் விலங்கு கொழுப்புகள், தாவர எண்ணெய், வனஸ்பதிகள் கலப்படம் செய்யப்படுகின்றன. சில இடங்களில் முழுமையான விலங்கு கொழுப்பால் உருவாக்கப்பட்ட நெய்யை கூட விற்பனை செய்யப்படுவதும் உண்டு. சுத்தமான நெய் என்றால் உள்ளங்கையில் வைத்த சிறிது நேரத்தில் துளியளவு உருகிவிடும். அடுத்ததாக கடாயில் வைத்து நெய்யை சூடு படுத்தவும். சிறிது நேரத்தில் நெய் பிரவுன் கலரில் மாறினால் அந்த நெய் சுத்தமானது. அதுவே மஞ்சள் நிறத்தில் இருந்தால் அல்லது உருகுவதற்கு கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டால் அந்த நெய் கலப்படமானது என்பதை அறிக. இருப்பினும் இதில் சரியான முடிவுகள் கிடைக்குமா என்பதும் சந்தேகமே.


மேலும் படிக்க | தீபாவளிக்கு கண்டிப்பாக செய்ய வேண்டிய 3 பூஜைகள்... மறக்காமல் செய்தால் ஐஸ்வர்யம் அதிகரிக்கும்


நெய் கலப்படத்தை கண்டுபிடிக்கும் மற்ற வழிமுறைகள்


இதுதவிர இன்னும் சில வழிமுறைகள் இருக்கின்றன. நெய்யில் உருளைக் கிழங்கு கலந்திருந்தால், அந்த நெய்யுடன் அயோடின் சொலீஷனை சேர்க்கவும். உடனே நீலநிறமாக மாறினால் அந்த நெய் கலப்படம். இதுவே தாவர எண்ணய் சேர்க்கப்பட்டிருந்தால் கண்ணாடி குடுவையில் சிறு துளி நெய்யை விட்டு அதனுடன் சர்க்கரையை சேர்த்து குலுக்கவும். சிவப்பு நிறம் தோன்றினால் அந்த நெய் கலப்படமானது. நெய்யில் தேங்காய் எண்ணெய்யும் கலக்கப்படுகிறது. அப்படியான நெய்யை சிறிது நேரம் பிரிட்ஜில் வதைத்தால் எண்ணெய் பிரிந்து காணப்படும். இதேபோல் ஒரு பாத்திரத்தில் நெய்யை விட்டு ஹைட்ரோ குளோரிக் அமிலம், உப்பு சேர்த்து சூடுபடுத்தும்போதும் சிவப்பு நிறம் வந்தால் அந்த நெய்யில் கலப்படம் செய்யப்பட்டிருக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள். 


மேலும் படிக்க | தீபாவளி இனிப்பு, காரம் தரமில்லையா? இப்போதே இந்த நம்பருக்கு புகார் அனுப்புங்கள்!


இதில் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால் நெய் பற்றி நன்கு அறிந்தவர்கள், உணவுப் பாதுகாப்புத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு கலப்பட நெய்யை எளிமையாக கண்டுபிடித்துவிடுவார்கள். அதனால், உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் அவர்களை அணுகும்போது தீர்க்கமான முடிவுகள் கிடைக்கும். அதனடிப்படையில் கலப்பட நெய் குறித்து முடிவெடுங்கள். 


நெய்யில் கலப்படத்தை கண்டுபிடித்தால் உணவுப் பாதுகாப்புத்துறையில் உடனே புகார் அளிக்கவும். சந்தேகம் இருந்தாலே உணவு பாதுகாப்புத்துறையிடம் எடுத்துக்கூறி விளக்கமும் பெற்றுக் கொள்ளலாம். தீபாவளி நேரத்தில் உணவுப் பொருள் கலப்படம் குறித்து புகார் அளிக்க 9444042322 என்ற வாடஸ்அப் எண்ணை உணவுப் பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ளது. 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ