ஒரு பெண்ணுடன் முதல் முறை சாட் செய்வது அந்த பெண்ணுடன் முதல் முறை டேட்டிங் செய்வதற்கு சமம் ஆகும்.  ஒரு பெண்ணிடம் முதல்முறை பேசுகையிலே நம் மீது நல்ல எண்ணம் வரும்படி செய்யவேண்டும் அப்படி இல்லாவிட்டால் நீங்கள் அந்த பெண்ணின் பிளாக் ஆப்ஷனில் தான் இருக்க முடியும்.  ஆரம்பமே அமர்க்களமாக அமைந்தால் தான் முடிவும் நன்றாக அமையும் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.  இப்போது ஒரு பெண்ணை மெசேஜிலேயே கவர்வது எப்படி என்று பார்ப்போம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

1) ஒரு பெண்ணை கவர வேண்டும் என நினைப்பவர்கள் முதலில் பேசும்போது அந்த பெண்ணை முழுமையாக பேசவிடுங்கள்.  நீங்களே உங்களை பற்றி பேசிக்கொண்டிருந்தால் நீங்கள் தற்பெருமை பேசுபவர்கள் என அந்த பெண் நினைக்கக்கூடும் மற்றும் உங்கள் பேச்சில் அவர் அதிக ஈடுபாடு காட்டவும் மாட்டார்.  அதனால் அந்த பெண்ணை முழுமையாக பேசவிடுங்கள், அந்த பெண்ணே வந்து உங்களை பற்றி கேட்கும்படி செய்யுங்கள்.


மேலும் படிக்க | விரைவில் திருமணம் செய்யபோகிறீர்களா? பட்ஜெட் செலவில் திருமணம் செய்ய டிப்ஸ்!


2) ஒரு பெண்ணிடம் நீங்கள் மெசேஜ் செய்யும்போது நீங்கள் ரசித்த விஷயங்களை பற்றி பேசாமல் அந்த பெண்ணுக்கு விருப்பமான டிவி நிகழ்ச்சிகள் அல்லது அந்த பெண் சம்மந்தப்பட்ட வேடிக்கையான நிகழ்ச்சிகளை பற்றி பேச தொடங்குங்கள்.  அந்த பெண்ணுக்கு எந்த மாதிரியான விஷயங்கள் எல்லாம் பிடிக்கும் என்பதை பற்றி கேட்டறிந்து கொள்ளுங்கள் மற்றும் அந்த பெண் சுற்றி பார்க்க விரும்பினால் அந்த பெண்ணிடம் நீங்கள் சென்ற இடங்களை பற்றி பேசாதீர்கள்.  மாறாக எதிர்காலத்தில் நீங்கள் அந்த பெண்ணுடன் பயணிக்க விரும்பும் இடங்களை பற்றி பேசுங்கள்.  இது உங்கள் மீது அந்த பெண்ணுக்கு ஒரு நல்ல அபிப்ராயத்தை உருவாக்கும்.


3) முதல் சாட்டிங்கிலேயே உங்களுக்கு பிடித்த பெண்ணை கவர்வதற்கான முக்கியமான வழி பொறுமையாக இருப்பதுதான்.  பொறுமையுடன் கையாள்வது பெண்களுக்கு மிகவும் பிடிக்கும், பெண் பேசி முடிக்கும் வரை பொறுமையாக காத்திருங்கள்.


4) பெரும்பாலான ஆண்கள் செய்யும் முக்கியமான தவறு தனக்கு பிடித்த பெண்ணிடம் ஆரம்பத்தில் தன்னை பற்றி பெருமையாக சொல்லிக்கொள்வது.  தன் மீது அந்த பெண்ணிற்கு ஈர்ப்பு வர வேண்டும் என்பதற்காக ஆண்கள் ஆரம்பத்தில் சொல்லும் சில பொய்கள் பிற்காலத்தில் பெரிய பிரச்சனையை உருவாக்கிவிடும்.  பொய் சொல்வது பொதுவாக உறவில் சிக்கலை ஏற்படுத்தும் அதனால் முடிந்தவரை உறவில் நேர்மையாக இருக்க முயற்சி செய்யுங்கள்.


5) ஒரு பெண்ணிடம் உங்களை தனித்துவமாக காட்டி கொள்ளுங்கள்.  மற்றவர்களை போல உங்களுடைய வேலை, சொத்து போன்றவற்றை பற்றி பெண்களிடம் பேசாதீர்கள்.  மாறாக தொழில்களில் புதுவிதமான முறைகளை எப்படி கையாள்வது போன்ற ஆக்கபூர்வமான விஷயங்களை பேசுகிறீர்கள் என்றால் அந்த பெண்ணுக்கு உங்கள் மீது ஒரு உயர்ந்த எண்ணம் உருவாகும்.


மேலும் படிக்க | பிரியாணி வெறியில் இருக்கும் இந்தியா... நிமிஷத்துக்கு இத்தனையா - அதிகம் ஆர்டர் போட்ட உணவுகள் என்னென்ன?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ