குளிர்காலத்தில் வீட்டை கதகதப்பாக வைத்துக்கொள்வது எப்படி? ஈசி டிப்ஸ்!
Keep Your House Warm During Winter Season : குளிரால் டைல்ஸ் தரை ஜில்லுன்னு இருக்கா? ‘இதை’ செய்தால் வீட்டை கதகதப்பாக வைக்கலாம்..
Keep Your House Warm During Winter Season : கடந்த 3 நாட்களாக, “இது சென்னையா, இல்லை ஊட்டியா?” என நம்மை கேள்வி கேட்க வைக்கிறது, மெட்ராஸின் வானிலை. தமிழகத்தில், நவம்பர்-டிசம்பர் மாதங்களில், பல சமயங்களில் சமாளிக்க முடியாத அளவிற்கு குளிராக இருக்கும். இதனால், பச்சை தண்ணீரில் குளிப்பதற்கு, சாதாரண தண்ணீரை குடிப்பதற்கு பயமாக இருக்கும். முன்னர், பலரது இல்லங்களிலும், கட்டான் தரை இருந்தது. இப்போது, டைல்ஸ் தரைதான் பெரும்பாலான இல்லங்களை ஆக்கிரமித்து இருக்கிறது. இந்த தரைகள் பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும், வெளியில் மழையும் குளிரும் மாறி மாறி அடிக்கும் போது, காலை தரையில் வைக்கும் போதே, ஜில்லென்று தலைவரை ஏறும். இந்த குளிரை சமாளிக்க, நம்மிடம் கையில் சில டிப்ஸ் இருக்கிறது. அவை என்ன தெரியுமா?
வீட்டில் இருக்கும் கதவுகளை அடைத்தல்:
முதலில், உங்கள் வீட்டில் வெளியில் இருந்து வரும் காற்று புகும் இடங்களை அடைக்க வேண்டும். கதவுகள் மற்றும் ஜன்னல்கள் எப்போதும் பூட்டியே இருந்தாலும், அந்த கதவுகளின் இண்டு இடுக்குகள் மற்றும் ஓட்டைகள் மூலமாகவும் காற்று வீட்டுக்குள் புகும். எனவே, இந்த ஓட்டைகளை மூடுவது முடிந்தளவிற்கு நல்லது.
வெளியில் இருந்து வரும் குளிர் உங்களை தாக்காமல் இருக்க வேண்டும் என்றால், முதலில் ஒரு திக்கான துணியை ஸ்க்ரீன் துணியாக உபயோகிக்க வேண்டும். உங்கள் வீட்டு தரைகளும் ஜில்லென்று இருப்பதற்கு காரணம், வெளியிலிருந்து வரும் காற்றுதான். எனவே, கம்பளிகள், கோணி பைகள், மேஜை விரிப்புகள் ஏதேனும் இருந்தால் அவற்றை வைத்து தரையை மூட வேண்டும்.
LED லைட்கள்:
குளிர் காலத்தில், LED Lights-ஐ வீடு முழுவதும் உபயோகிப்பது நல்லது. இது, ஒரு வகையான மிதமான சூடு இருக்கும் சூழலை உங்கள் இல்லத்தில் உருவாக்கும். அதனுடன் சேர்த்து மெழுகுவர்த்திகளையும் நீங்கள் ஏற்றி வைக்கலாம். இதுவும், உங்கள் வீட்டில் இருப்பவர்களும் நீங்களும் சூடாக உணர உதவும்.
சுத்தம் செய்வது:
தினமும் வீட்டை சுத்தம் செய்வது அவசியமான ஒன்று. இதில் சிலர், தங்கள் இல்லங்களை தினம் தோறும் தண்ணீர் வைத்து மாப் போட்டு துடைப்பதை வழக்கமாக கொண்டிருப்பர். ஆனால், மிகவும் குளிராக இருக்கும் நாட்களில் இப்படி டைல்ஸ் தரையில் தண்ணீர் வைத்து சுத்தம் செய்வதால் கண்டிப்பாக மீண்டும் தரை, ஜில்லென்றுதான் ஆகும். எனவே, அந்த நாட்களில் மட்டும் அவற்றை தவிர்க்க வேண்டும். தண்ணீர் படாத துடைப்பக்கட்டை, Vaccum Cleaner-ஐ வைத்து, வீட்டை சுத்தம் செய்யலாம். ஏதேனும் ஒரு இடம் மிகவும் அழுக்காக இருப்பது போல தோன்றினால், அந்த இடத்தில் மட்டும் தண்ணீர் வைத்து துடைக்கலாம்.
மேலும் படிக்க | மக்கள் முன்னெச்சரிக்கையாக மழைக் காலங்களில் செய்யவேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை !
நீங்கள் குளிரில் என்ன செய்ய வேண்டும்?
முழு கால்-கை ஆடைகளை அணியுங்கள், அதற்கு மேல் hoodie, sweater உள்ளிட்டவைகளை போட்டுக்கொள்ளலாம்.
தண்ணீரில் குளிக்கும் நேரம், தண்ணீர் குடிக்கும் நேரம், கழிவரையை உபயோகிக்கும் நேரம் தவிர பிற நேரங்களில் தண்ணீரில் கை வைக்காமல் இருங்கள்.
டீ, காபி, எலுமிச்சை டீ, ப்ளாக் காஃபி என ஏதேனும் குடிக்கலாம். எதுவும் இல்லை என்றால், சூடான தண்ணீரை பருகலாம்.
கைகளில் க்ளவுஸ், காலுறைகளை பயன்படுத்தலாம்.
காதுகளை மஃப்லர் உதவியுடன் மூடி வைக்கவும்.
குளிரூட்டப்பட்ட உணவுகளை தவிர்க்கவும்.
மேலும் படிக்க | மழை காலத்தில் ஸ்மார்போனை பாதுகாக்க... செய்ய வேண்டியதும்... செய்யக் கூடாததும்..!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ