ஜன் தன் கணக்குடன் ஆதாரை இணைக்கவில்லை என்றால் 1 லட்சத்திற்கு மேல் நஷ்டம் ஏற்படலாம் தெரியுமா
ஜன் தன் கணக்கில் வாடிக்கையாளர்களுக்கு Rupay Debit Card வழங்கப்பட்டுள்ளது. இதில் ரூ .1 லட்சம் மதிப்பிலான விபத்து காப்பீடு வழங்கப்படுகிறது.
ஜன் தன் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு இது ஒரு முக்கியமான செய்தி. நீங்கள் இன்னும் உங்கள் கணக்கில் ஆதார் எண்ணை இணைக்கவில்லை என்றால், தயவுசெய்து விரைவில் அதை செய்து விடுங்கள். இல்லையெனில் நீங்கள் 1.30 லட்சம் வரையிலான பெரும் இழப்பைச் சந்திக்க நேரிடும்.
தகவல்களின்படி, இந்த கணக்கில் வாடிக்கையாளர்களுக்கு Rupay Debit Card வழங்கப்பட்டுள்ளது. இதில் ரூ .1 லட்சம் மதிப்பிலான விபத்து காப்பீடு வழங்கப்படுகிறது. ஆனால் உங்கள் கணக்கை ஆதார் உடன் இணைக்கவில்லை என்றால், இந்த நன்மை உங்களுக்கு கிடைக்காது. இதன் காரணமாக நீங்கள் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான காப்பீட்டை இழப்பீர்கள்.
இது தவிர, உங்களுக்கு ரூ .30000 மதிப்பிலான ஆக்சிடென்டல் டெத் இன்சூரன்ஸ் பாதுகாப்பும் கிடைக்கும். இது வங்கிக் கணக்கில் ஆதார் இணைக்கப்பட்ட பின்னரே கிடைக்கும்.
கணக்கை ஆதார் உடன் இணைக்க இந்த வழியில் செயல்படுங்கள்
நீங்கள் வங்கிக்குச் சென்று கணக்கை ஆதார் உடன் இணைக்கலாம்.
வங்கிக்கு உங்கள் பாஸ் புத்தகம் மற்றும் ஆதார் அட்டையின் புகைப்பட நகலை எடுத்துச் செல்ல வேண்டும்.
பல வங்கிகள் இப்போது மெசேஜ் மூலம் கணக்கை ஆதார் உடன் இணைக்கின்றன.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) வாடிக்கையாளர்கள் தங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து ‘UID <SPACE> Aadhaar Number <SPACE> Account Number’ என்று 567676 க்கு மெசேஜ் செய்ய வேண்டும். இதன் பிறகு உங்கள் வங்கி கணக்கு ஆதார் உடன் இணைக்கப்படும்.
ALSO READ: இனி ரயிலில் பயணம் செய்ய Platform ticket இருந்தால் போதும்... அதற்கான விதிமுறை என்ன?
உங்கள் ஆதாரில் (Aadhaar) உள்ள மொபைல் எண்ணும் வங்கியில் கொடுக்கப்பட்ட மொபைல் எண்ணும் வேறு வேறாக இருந்தால், இதை இணைக்க முடியாது.
இது தவிர, உங்கள் அருகிலுள்ள ATM-மில் இருந்தும் உங்கள் வங்கிக் கணக்கை ஆதார் உடன் இணைக்கலாம்.
ஆவணங்கள்
ஆதார் அட்டை (Aadhaar Card) அல்லது பாஸ்போர்ட் அல்லது ஓட்டுநர் உரிமம் அல்லது பான் கார்டு, வாக்காளர் அட்டை, NREGA வேலை அட்டை, பெயர், முகவரி மற்றும் ஆதார் எண்ணைக் கொண்ட அதாரிடீசால் வழங்கப்பட்ட கடிதம், கெஸ்டட் அதிகாரி அளித்த, அடெஸ்டட் புகைப்படத்தைக் கொண்ட அகௌண்ட் ஓப்பன் செய்யும் கடிதம்.
5 ஆயிரம் ரூபாய் பெறும் வசதி
பிரதமர் ஜன் தன் கணக்கில், வாடிக்கையாளர்களுக்கு ரூ .5000 ஓவர் டிராஃப்ட் வசதி கிடைக்கிறது. ஓவர் டிராஃப்ட் வசதியைப் பயன்படுத்த, ஆதார் கார்டை வைத்திருப்பது அவசியம். இது தவிர, PMJDY கணக்கையும் ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும். இந்த திட்டத்தின் கீழ், ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு வங்கிக் கணக்கைத் திறப்பதே பிரதமர் மோடியின் நோக்கமாக இருந்தது. ஜன் தன் யோஜனாவின் கீழ், நீங்கள் 10 வயதுக்குக் குறைவான குழந்தையின் கணக்கையும் திறக்கலாம்.
ALSO READ: Twitter-ல் trend ஆகிறது #BoycottAmazon: காரணம் என்ன தெரியுமா….
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR