நம்மில் பலருக்கு நீண்ட ஆயுளுடன், நோய் நொடி இன்றி வாழ வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் தற்போது உள்ள காலக்கட்டத்தில் 30-40 வயதில் உள்ளவர்களுக்கே மாராடைப்பு வருகிறது. இதற்கு காரணம், நமது வாழ்வியல் மாற்றங்கள் என கூறப்படுகிறது. இந்த பயத்தையெல்லாம் விடுத்து நாம் பல வருடங்கள் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என்றால் சில விஷயங்களை பின்பற்ற வேண்டி உள்ளது. அவை என்னென்ன விஷயங்கள் தெரியுமா? 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

1.தாவர உணவுகள்:


100 வயது வரை வாழ்ந்தவர்களை வைத்து சமீபத்தில் ஒரு மருத்துவ ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அவர்கள் உட்கொண்ட உணவுகளில் 90 சதவிகித உணவுகள் தாவர வகைகளை சார்ந்ததாக உள்ளன. இவர்கள் கறி, இறைச்சி வகை உணவுகளையும் உட்கொள்கின்றனர். ஆனால், மாதத்திற்கு ஐந்து அல்லது ஆறு முறை மட்டுமே அவர்கள் அதை சாப்பிடுகின்றனர். 


இவர்கள் முழு தானிய வகைகளான கார்ன், அரிசி, உருளைக்கிழங்கு, பீன்ஸ், நட்ஸ் வகைகளை ஸ்நாக்ஸாக உட்கொள்கின்றனர். ஒரு நாளைக்கு கண்டிப்பாக 6 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும், 


2.தூக்கம்:


தூக்கம் மனிதனின் வாழ்வில் மிகவும் முக்கியம். நீங்கள் 8 மணி நேரம் தூங்காதவர் என்றால், கண்டிப்பாக 8 மணி நேரம் தூங்க முயற்சி செய்ய வேண்டும். 


தூக்கம் வரவழைப்பதற்கான டிப்ஸ்:


>இருளான அல்லது வெளிச்சம் மிகவும் குறைவாக உள்ள அறையில் தூங்க வேண்டும். 


>மிதமான வெப்பம் அல்லது மிதமான குளிர்ச்சி உள்ள அறையில் தூங்க வேண்டும். 


>தூங்க செல்கையில் டிவி, போன் பார்ப்பதை தவிர்ப்போம். 


>தூங்க போவதற்கு முன்பு அதிகம் சாப்பிட்டு தூங்க வேண்டாம். 


மேலும் படிக்க | பச்சை மிளகாயை நீண்ட காலத்திற்கு புதியதாக வைத்திருக்க டிப்ஸ்!


3.வாழ்வின் நோக்கத்தை கண்டுபிடியுங்கள்:


“நம் வாழ்க்கை எதை நோக்கி போய்கொண்டிருக்கிறது..” எனும் காமெடி டைலாக்கை வடிவேலுவின் வாயால் கேட்டிருப்போம். ஆனால், இந்த கேள்வியை நாம் அனைவரும் தினம் தினம் கேட்டுக்கொள்ள வேண்டுமாம். வாழ்வை, தன் மனதிற்குள் ஒரு நோக்கத்தை வைத்துக்கொண்டு வாழ்ந்து கொண்டிருப்பவர் நீண்ட நாட்கள் உயிர் வாழ்வதாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. 


நம்மில் பலர் வாழ்வில் பிடித்த விஷயங்களை செய்து கொண்டு, அதை நோக்கமாக கொண்டு வாழ்ந்து கொண்டிருப்போம். அப்படி நோக்கத்தை இன்னும் கண்டுபிடிக்காதோர் உங்களுக்கு என்ன பிடிக்கும் என்ன பிடிக்காது என்பதை கண்டுபிடிக்க முயற்சி செய்ய வேண்டும். இது போல நோக்கத்தை நோக்கி ஒடினால், கண்டிப்பாக நமக்கு வாழ்வியல் பாடங்களும் பல கிடைக்கும் என கூறப்படுகிறது. 


4.ஒரே இடத்தில் உட்கார வேண்டாம்:


100 வயதிற்கு மேல் வாழ்பவர்கள், பெரிதாக உடற்பயிற்சி எதுவும் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இவர்கள், தினசரி வாழ்வியல் நடவடிக்கைகளே நடப்பதாக இருக்குமாம். உடலுக்கு வேலை கொடுப்பதாக இருக்குமாம். 100 வயது வரை வாழும் பலர், பெரிதாக எந்த சாதனங்களின் முன்பும் அமராமல், தன்னுடைய வேலைகளை தானாகவே செய்து கொள்வராம். இது, இவர்களை தினசரி சுறுசுறுப்பாக செயல்பட உதவுகிறது. 


5.சரியான மனிதர்கள்:


நாம் எப்படிப்பட்ட மனிதர் என்பதை நம் நண்பர்களை வைத்து எடை போட்டு விடலாம் என்று கூறுவர். நண்பர்கள் மட்டுமல்ல, நம்மை சுற்றி இருப்பவர்களும் நம் வாழ்வில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகின்றனர். நம்மை சுற்றி, நல்ல மனிதர்களையும், நல்ல எண்ணங்களை நமக்குள் விதைக்கும் மனிதர்களையும் அருகில் வைத்துக்கொண்டாலே கண்டிப்பாக நமது வாழ்நாளும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. இவர்களுடன் இணைந்து நமக்கு பிடித்த வேலைகளை செய்வதால் மூளையில் உள்ள மகிழ்ச்சி ஹார்மோன்கள் நன்றாக செயல்படுமாம். இதனாலும் ஆயுள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 


மேலும் படிக்க | நாம் தெரியாமல் செய்யும் இந்த தவறுகள் சருமத்தை பாதிக்கும்! ஜாக்கிரதை!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ