இளம் நடிகைக்கு டார்ச்சர் கொடுக்கும் உட்ச காமெடி நடிகர்: புலம்பும் தயாரிப்பாளர்

வயதானாலும் தன்னுடைய கிசுகிசு விளையாட்டை விடாமல் வைத்திருக்கிறாராம் அந்த காமெடி நடிகர். இளம் நடிகைக்கு போன் போட்டு டார்ச்சர் கொடுக்கிறாராம். 

 

1 /5

காமெடியானாக அறிமுகமாகி திரையில் ஹீரோவாகவும் நடித்துவிட்ட அவர், இப்போதெல்லாம் பெயருக்கு படங்களில் கமிட்டாகிக் கொண்டிருக்கிறாராம். அவருக்கு ஏற்கனவே பணம் காசெல்லாம் ஒரு பொருட்டே இல்லை என்ற அளவுக்கு இருப்பதால், தேடி வருபவர்களை அப்படியே அமுக்கும் வேலையை செய்து கொண்டிருக்கிறார். நீயா தேடி வந்த, என்னோட செட்டில்மென்டுக்கு ஒத்துப்போ என்ற பாணியிலேயே எல்லோரையும் டீல் செய்கிறாராம்.   

2 /5

வேற வழியில்லாமல் கமிட் செய்த தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர்களுக்கு எல்லாம் பெரும் தலைவலியாக இருக்கும் அவர், ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு இஷ்டத்துக்கு வருகிறாராம். சரி அப்படியாவது வருகிறாரே என இருந்த படக்குழுவுக்கு, அடுத்த அதிர்ச்சியை கொடுத்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிக்க வந்த இளம் நடிக்கைக்கு ரூட் போட்டுக் கொண்டிருக்கிறாராம்.   

3 /5

போன் நம்பர் வாங்கி அடிக்கடி பேசும் அவர், உனக்கு நிறைய வாய்ப்பு வாங்கி தருகிறேன்.. ஒன்னும் பிரச்சனை இல்லை என இரவு நேரங்களில் பேச்சுக் கொடுக்கிறாராம். இதனை புரிந்து கொண்ட இளம் நடிகை அவரை கடிந்து கொள்ளவும் முடியாமல், வெளியில் சொல்லவும் முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறாராம்.   

4 /5

இந்த டார்ச்சர் தொடர்ந்தால் அடுத்தகட்ட நடவடிக்கை எடுத்துவிட வேண்டியது தான் என்பதிலும் தீர்க்கமாக அந்த இளம் நடிகை இருக்கிறாராம். ஆனால், ஏற்கனவே பல பிரச்சனைகள் சினிமா வட்டாரத்தில் இதுபோல் எழுந்து புஷ்வானமாகிவிட்டதால், நம்முடைய அடுத்தகட்ட வளர்ச்சி இல்லாமலே போயிடுமே என்ற கவலையிலும் இருக்கிறாராம்.  

5 /5

மூத்த காமெடி நடிகருக்கு இதெல்லாம் தெரியாமல் இல்லை. தன் அனுபவத்தில் எத்தனையோ பிரச்சனைகளை திருவிளையாடல்களை பார்த்துவிட்டதால் அதற்கேற்ப உஷாராக மூவ் செய்கிறாராம். எப்போது இந்த பிரச்சனை பூதாகரமாக வெடிக்கப்போகுதோ? என உற்றுப்பார்த்துக் கொண்டிருக்கிறது சினிமா வட்டாரம்.