உடற்பயிற்சியே இல்லாமல் உடல் எடையை குறைக்கனுமா? அப்போ இந்த 2 இலைகள் போதும்
Weight Loss Tips : உடல் எடையைக் குறைக்க இயற்கையான பொருட்களைப் பயன்படுத்துவது நல்லது. உடல் எடையை விரைவாகக் குறைக்க நீங்கள் உட்கொள்ளக்கூடிய 2 இயற்கையான விஷயங்களைப் பற்றி இன்று நாங்கள் உங்களுக்கு கூறப்போகிறோம்.
உடல் எடையை குறைக்கும் டிப்ஸ்: இன்றைய காலக்கட்டத்தில், தவறான உணவுப் பழக்கம் மற்றும் மாறிவரும் வாழ்க்கை முறையால், மக்களின் உடல் எடை வேகமாக அதிகரித்து வருகிறது. அதைக் குறைக்க மக்கள் பலவற்றைப் பயன்படுத்துகின்றனர். சிலர் மருந்து சாப்பிடுகிறார்கள், சிலர் இரவும் பகலும் உடற்பயிற்சி செய்வதன் மூலம் தங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க முயற்சி செய்கிறார்கள், இருப்பினும் உடல் எடை குறைவதில்லை.
நீங்களும் உடல் எடையை குறைக்க (Weight Loss Tips) விரும்பி, அதை குறைக்க முடியவில்லை என்றால், இயற்கையான பொருட்களைப் பயன்படுத்தி உடல் எடையை குறைப்பது நல்லது. இன்று நாம் இரண்டு இயற்கையான விஷயங்களைப் பற்றி தான் காணப் போகிறோம், அவற்றை உட்கொள்வதன் மூலம் சில நாட்களில் உங்கள் எடையைக் கட்டுப்படுத்தலாம்.
இந்த இரண்டு இலைகள் கறிவேப்பிலை (Curry Leaves) மற்றும் ஓமம் ஆகும். இவை இரண்டையும் உட்கொள்வதன் மூலம், எடையை விரைவில் கட்டுப்படுத்தலாம். இப்போது இதன் நுகர்வு முறை மற்றும் அதன் பயன்களை தெரிந்து கொள்வோம்:
இப்படி உட்கொள்ளுங்கள்:
2 கிளாஸ் தண்ணீர்
8-10 கறிவேப்பிலை
ஓமவள்ளி இலைகள் (Celery Leaves)
1 தேக்கரண்டி முழு கொத்தமல்லி
1 தேக்கரண்டி சீரகம்
ஏலக்காய் தூள் ஒரு சிட்டிகை
1 சிறிய துண்டு இஞ்சி
1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு
மேலும் படிக்க | Raw Milk: பால் குடித்தால் உடல் எடை அதிகரிக்குமா? பதில் இதோ!
செயல்முறை:
இந்த இரண்டு இலைகளையும் அப்படியே உட்கொண்டால் நல்லது, அப்படி முடியாவிட்டால் இந்த இலைகளை பானம் செய்தும் குடிக்கலாம். பானத்தை தயாரிக்க, முதலில் நீங்கள் அதில் சூடான தண்ணீரை கொதிக்க வைக்க வேண்டும். அதன் பிறகு, இந்த தண்ணீரில் அனைத்து பொருட்களையும் போட்டு நன்கு கொதிக்க வைக்கவும். முழுவதுமாக நிறம் மாறி நன்கு கொதித்து தண்ணீர் பாதியாக குறைந்த பிறகு அந்த நீரை வடிகட்டி ஒரு கப்பில் எடுத்துக்கொள்ளவும், இப்போது அதனுடன் சிறுது எலுமிச்சை சாறு சேர்த்து இந்த தண்ணீரை பருகினால் அதன் பலனை சில நாட்களில் பார்க்கலாம்.
கறிவேப்பிலை மற்றும் ஓமவள்ளி இலையின் நன்மைகளை அறிந்துக்கொள்ளுங்கள்:
கறிவேப்பிலை ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி, வைட்டமின் பி2, கால்சியம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. இதன் நுகர்வு தோல் உள்ளிட்ட பல நோய்களை குணப்படுத்த உதவுகிறது. இதில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது. இரத்தக் குறைபாட்டைப் போக்கவும் உதவுகிறது.
அதே நேரத்தில், ஓமவள்ளி இலைகள் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. ஓமவள்ளி சாறு ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. செரிமானம் தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் இதை உட்கொள்வதன் மூலம் குணப்படுத்த முடியும். இதில் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன, அவை நன்மை பயக்கும்.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | Weight Loss Diet: எலுமிச்சை நீரை வெறும் வயிற்றில் குடித்தால் என்ன என்ன நன்மைகள்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ