"நரகத்தில் பார்க்காத கனலை கூட பெண்ணின் கோபத்தில் பார்க்க முடியும்..” என்று கூறுவர். இது ஒரு வகையில் உண்மைதான். பெண்களை விட ஆண்களுக்கு அதிக கோபம் வரும் என்று கூறுவர். ஆனால், பெண்களுடன் நெருக்கமாக பழகிப்பார்த்த ஆண்களுக்கு தெரியும், பெண்களுக்கும் அடிக்கடி கோபம் வரும் என்று. இது நட்பு, குடும்பம் போன்ற உறவுகளிலேயே நிகழ்வது சகஜம். அப்படியிருக்கையில் காதல் உறவில் இது போன்ற கோப தாபங்கள் வராமல் இருக்குமா என்ன? அப்படி உங்கள் மீது உங்கள் காதலி கோபமாக இருந்தால் அவரை எப்படி சமாதானம் செய்வது? இதோ சில சிறந்த வழிகள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

1.இதுதான் பிரச்சனை என்பதை தீர்மானித்து விடாதீர்கள்:


பெரும்பாலான ஆண்களால் ஒரு பெண் என்ன உணருகிறாள், அவளுக்கு என்ன பிரச்சனை என்பதை யூகிக்க தெரியாது. “நான் யூகிக்கிறேன்” என்ற பெயரில் எதையாவது பேசி சிலர் நன்றாக வாங்கிக்கட்டி கொள்வர். அவர்கள் “இந்த விஷயத்திற்காகத்தான் அவள் கோபமாக இருப்பாள்..” என்று நினைக்கும் விஷயமும் தவறானதாகவே இருக்கும். அதனால் அவர் ஏன் கோபமாக இருக்கிறார் என்பதை பெரும்பாலும் யூகிக்காமல் இருப்பது நல்லது. ஆனால், அவர் கோபமாக இருப்பதை கண்டுக்கொள்ளாமல் இருக்காதீர்கள், என்ன பிரச்சனை என்பதை கேளுங்கள். பேச விருப்பமில்லை என்று கூறினால், “சரி, நான் இங்கேதான் இருக்கிறேன். எப்போது வேண்டுமானாலும் நீ என்னிடம் வந்து எந்த விஷயத்தையும் தெரிவிக்கலாம்..” என்பதை அவரிடம் கூறிவிடுங்கள். 


மேலும் படிக்க | ‘இந்த’ 5 ராசிக்காரர்களுக்கு அழகும் அறிவும் அதிகமாக இருக்குமாம்!


2. தவறை ஒப்புக்கொள்ளுங்கள்:


உங்கள் காதலி உங்கள் மீது கோபமாக இருக்கிறார் என்றால், அது உங்கள் மீதான தவறாக இருக்க பல வாய்ப்புகள் இருக்கிறது. அதனால், உங்கள் மீது தவறு இருக்கிறது என்று தெரிந்தால் அதை மறுத்து பேசாமல் ஒப்புக்கொள்வது சிறந்தது. இந்த பிரச்சனையை எப்படி சரி செய்யலாம் என்று யோசியுங்கள். உங்கள் நடத்தை அல்லது நீங்கள் கோபமாக பேசிய ஏதாவது ஒரு விஷயம் அவரை உங்கள் மீது கோபம் கொள்ள செய்திருக்கலாம். அப்படியிருந்தால் “இனி இதை திருத்திக்கொள்கிறேன்” என்று கூறுங்கள். அதன் படி நடக்கவும் செய்யுங்கள். 


3.கட்டிப்பிடி வைத்தியம்:


பேசி தீர்த்த பின் கண்டிப்பாக அவர்களது கோபம் கொஞ்சமாவது குறையும். அதன் பிறகு அவரை கட்டிப்பிடியுங்கள். கட்டிப்பிடி வைத்தியத்தால் பல மன நல பிரச்சனைகளே குணமாகின்றன. காதல் சண்டை குணமாகாதா என்ன? கட்டிப்பிடிப்பது கோபமாக இருக்கும் காதலியை சாந்தப்படுத்தவும் உதவும். 


4. அவர்களுக்கான நேரத்தை அவர்களிடம் கொடுங்கள்:


பெண்களுக்கு அவர்களின் உணர்ச்சிகளுடன் இருக்க சிறிது நேரம் தேவைப்படும். என்ன பேசியும் உங்களுக்கும் உங்கள் காதலிக்குமான பிரச்சனை தீரவில்லை என்றால் அவரை அப்படியே சிறிது நேரம் விடுவது நல்லது. இது உங்களுக்குள் இருக்கும் மன முதிர்ச்சியை காண்பிக்கும். மேலும், உங்கள் காதலிக்கு நீங்கள் அவரது உணர்வுகளுக்கும் மதிப்பு கொடுக்கிறீர்கள் என்பதை உணர்த்தும். இதனால் உங்கள் காதலியின் அதிக கோபம், கொஞ்சமாக குறையும். 


5. அவருக்காக ஏதாவது செய்யுங்கள்..


கோபமாக இருக்கும் காதலிக்கு பரிசு பொருட்கள் தர வேண்டும் என்பது அவசியம் இல்லை. அதை பெண்கள் அதிகம் விரும்பவும் மாட்டார்கள். அதனால், அவர் மீது நீங்கள் வைத்திருக்கும் காதலை வெளிப்படுத்தும் வகையில் ஏதேனும் ஒரு விஷயத்தை செய்யுங்கள். அவருக்கு பிடித்த இடத்திற்கு அவரை அழைத்து செல்வது. அவருக்கு பிடித்த விஷயங்களை அவருக்காக செய்வது போன்றவற்றை பயன்படுத்திக்கொள்ளுங்கள். உதாரணத்திற்கு அவருக்கு குறிப்பிட்ட ஒரு உணவு பிடிக்கும் என்றால் அதை சமைத்து தரலாம். அவருக்கு கடற்கரை பிடிக்கும் என்றால் அங்கு அவரை அழைத்து செல்லலாம். இது போன்ற காதலை வெளிப்படுத்தும் செயல்களை பெண்கள் என்றுமே மறக்க மாட்டார்கள். 


மேலும் படிக்க | ரயில் ஒரு கிலோ மீட்டருக்கு எவ்வளவு மைலேஜ் தரும் என்று தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ