காதலி/ காதலன் வேண்டுமா? அப்போ கருப்பு நிற ஆடை அணியுங்கள்!

சிவப்பு நிற ஆடைகளை அணிவதைக் காட்டிலும், கருப்பு நிற ஆடை அணிவதால் காதல் உறவை பலுப்படுத்தலாம் என ஓர் ஆராய்சி நிறுபித்துள்ளது!

Mukesh M முகேஷ் | Updated: Apr 27, 2018, 01:32 PM IST
காதலி/ காதலன் வேண்டுமா? அப்போ கருப்பு நிற ஆடை அணியுங்கள்!
Representational Image

சிவப்பு நிற ஆடைகளை அணிவதைக் காட்டிலும், கருப்பு நிற ஆடை அணிவதால் காதல் உறவை பலுப்படுத்தலாம் என ஓர் ஆராய்சி நிறுபித்துள்ளது!

காதல் நோயில் விழும் இளசுகள் முதலில் செய்யும் காரியம், சிவப்பு நிறத்தில் இதயம் வரைந்து அதில் அம்பினை விடுவது தான். ஆனால் இந்த சிவப்பு நிறம் உங்கள் காதல் பாலத்தில் விரிசல் ஏற்படுத்தும் என்றால் நம்ப முடிகிறது?

பிரிட்டன் பல்கலை கழகத்தைச் சேர்ந்த ராபின் காமுரே என்பர் இதுதொடர்பான ஆராய்ச்சியினை மேற்கொண்டு வருகின்றார். இந்த ஆராய்சி தெரிவிப்பதாவது... தன் மனதிற்கு பிடித்தவர்களை பார்க்கச் செல்லும் போது கருமை நிறத்தில் ஆடை அணிந்தால் பிரியத்தினை கூட்டும் எனவும், அதே வேலையில் சிவப்பு நிற ஆடையினை அணிந்துச் சென்றால் அது சாதரண ஈர்ப்பினை மட்டுமே உண்டாக்கும் என தெரிவிக்கின்றது.

சுமார் 546 பேரின் முதல் காதல் சந்திப்பினை குறித்து ஆராய்ந்த ராபின் இந்த ஆய்வின் அறிக்கையினை சமர்பித்துள்ளார். இவரது ஆய்வின் முடிவு குறிப்பிடுவதாவது, சிவப்பு நிறத்தால் ஏற்படும் ஈர்ப்பின் ஆயுட்காலம் மிக்குறைவு எனவும் கருமை நிறத்தால் ஏற்படும் ப்ரியத்தின் ஆயுட்காலம் அதிகம் எனவும் தெரிவிக்கின்றது.

கருமை என்னும் பட்சத்தில் ஆடைகள் மட்டும் இன்றி அவர்கள் அணியும் காலணி, கையில் வைத்திருக்கும் பைகள், அணிந்திருக்கும் கடிகாரம் என பார்க்கும் இடத்தில் எல்லாம் கருமை இருக்கும் சந்திப்பு வலுவடையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.