பூச்சிகளிடம் எப்போதும் கவனமாகவே இருக்க வேண்டும். வீட்டில் எவ்வளவு பத்திரமான இடத்தில் முக்கியமான ஆவணங்களை வைத்தாலும் அந்த இடத்தை தேடிபோய் ஆவணங்களை சேதப்படுத்திவிடும். அதில் முக்கியமானது கரையான்கள். ரூபாய் நோட்டுகள், புதிய பத்திரங்கள் எல்லாம் கரையான்களுக்கு மிகவும் பிடிக்கும். புதிய ஆவணங்களில் இருந்து வரும் வாசம் கரையான்களை எங்கு இருந்தாலும் இழுத்து வந்துவிடும். பின்னர், அந்த ஆவணங்களை கரையான்கள் நொறுக்குத் தீனிகளாக்கிக் கொள்ளும். நீங்கள் மட்டும் உஷாராக இல்லையென்றால் கரையான்களால் மிகப்பெரிய விலை கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவீர்கள். கோடிகணக்கான ரூபாயை நீங்கள் வைத்திருந்தாலும் கரையான்களுக்கு எல்லாம் அதன் மதிப்பு தெரியாது. அவற்றைப் பொறுத்துவரை தங்களுக்கு கிடைத்த இலவச பிரியாணி என நினைத்து புகுந்து விளையாடிவிடும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சரி, பணத்தை பின்னர் எங்கு தான் வைப்பது என யோசிக்கிறீர்களா?. லாக்கரில் வைத்தால் கூட கரையான்களிடமிருந்து பாதுகாப்பில்லை என்றால் என்ன செய்வது என நினைக்கிறீர்களா?. அதுக்கு ஒரு வழி இருக்கிறது. அதனை பின்பற்றி நீங்கள் ரூபாய் தாள்கள் மற்றும் ஆவணங்களை எல்லாம் வைத்தால் எந்த பூச்சிகள் வந்தாலும் உங்கள் ஆவணங்களை எல்லாம் ஒன்றும் செய்ய முடியாது. 


கரையான்களிடம் இருந்து ரூபாய் தாள்களை பாதுகாக்கும் வழிமுறை :


1. பிளாஸ்டிக் அல்லது காற்று புகாத பையில் வைக்கவும்


காற்று புகாத பை அல்லது பிளாஸ்டிக் கொள்கலனில் பணத்தை வைப்பதே எளிதான மற்றும் மிகவும் பயனுள்ள வழி. கரையான்களால் பிளாஸ்டிக்கை கடிக்க முடியாது, எனவே உங்கள் பணம் இறுக்கமாக மூடப்பட்ட பிளாஸ்டிக் கொள்கலனில் இருந்தால், அது பாதுகாப்பாக இருக்கும். காற்றுப் புகாத பையில் வைப்பதன் மூலம், ஈரம் பணத்திற்குச் செல்லாது, இது கரையான்கள் வளரும் வாய்ப்புகளை குறைக்கிறது.


மேலும் படிக்க | தீபாவளிக்கு சிம்பிளான 3 ஸ்வீட்!! சமையல் தெரியாவிட்டாலும் ட்ரை பண்ணலாம்..


2. ஈரப்பதத்திலிருந்து பாதுகாக்கவும்


ஈரமான இடங்களில் கரையான்கள் வேகமாகப் பரவுகின்றன. எனவே, நீங்கள் பணத்தை வைத்திருக்கும் இடம் உலர்ந்ததா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். லாக்கரில் ஈரப்பதம் இருந்தால், முதலில் அந்த பகுதி வறண்டு இருப்பதை உறுதி செய்யவும். இது தவிர, நீங்கள் பணத்தை வைத்திருக்கும் இடத்தை தவறாமல் சுத்தம் செய்து, அங்கு ஈரப்பதம் சேராமல் பார்த்துக் கொள்ளவும்.


3. வேப்ப இலை


வேம்பு இயற்கையாகவே பூச்சிகளை விரட்டும் தன்மை கொண்டது. காசு வைக்கும் இடத்தில் வேப்ப இலைகளை வைத்தால் கரையான்கள் வராமல் இருக்கும். வேப்ப இலைகளின் நறுமணம் மற்றும் அதன் ரசாயன கலவைகள் கரையான்களை விரட்ட உதவுகிறது. வேப்ப இலைகளை அவ்வப்போது மாற்றிக்கொண்டே இருங்கள்,


4. கற்பூரத்தைப் பயன்படுத்துங்கள்


கரையான்களை விரட்ட கற்பூரம் ஒரு சிறந்த வழியாகும். பணத்தை வைத்திருக்கும் கொள்கலன் அல்லது அலமாரியில் சில கற்பூரத்தை வைக்கவும். அதன் கடுமையான வாசனையால் கரையான்கள் அங்கு வராது. இது தவிர, இந்த முறை முற்றிலும் சிக்கனமானது, எனவே எந்த இரசாயன பக்க விளைவுகளும் இல்லாமல் உங்கள் பணத்தை பாதுகாப்பாக வைத்திருக்க முடியும்.


5. பூச்சி மருந்து


உங்கள் வீட்டில் கரையான் பிரச்சனை தீவிரமாக இருந்தால், பூச்சி கட்டுப்பாடு நிபுணரின் உதவியை நாட வேண்டும். அவர்கள் உங்கள் வீட்டைச் சரிபார்த்து, உங்கள் பணம் மற்றும் பிற ஆவணங்கள் பாதுகாப்பாக இருக்க உரிய நடவடிக்கை எடுப்பார்கள்.


மேலும் படிக்க | லக்ஷ்மி நாராயண யோகம் வந்தாச்சு! .... மேஷம், மிதுனம், கும்பம், மீன ராசிகளுக்கு மெகா ஜாக்பாட்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ