முகத்தில் இருக்கும் கருமையான திட்டுக்கள் மற்றும் முகப்பருக்கள் முகத்தின் அழகையே கெடுப்பது போல உணர்கிறீர்களா? இதை முகத்தில் இருந்து போக்குவதற்கு பல வழிமுறைகள் இருக்கின்றன. நம் வாழ்வில் சில மாற்றங்களை ஏற்படுத்துவதால் இதை நாம் சரி செய்ய முடியும். அந்த மாற்றங்கள் என்னென்ன? கருந்திட்டுகள் முகத்தில் வருவது ஏன்? அனைத்தையும் இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முகத்தில் கருந்திட்டுகள் தோன்றுவது ஏன்..? 


முகத்தில் கருந்திட்டுகள் தோன்றுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. மரபியல், சூரிய ஒளியின் வெளிப்பாடு, ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் தோல் பிரச்சனைகள் போன்ற பல காரணிகளின் விளைவாக முகத்தில் கருந்திட்டுகள் ஏற்படலாம். இருப்பினும், ஆரோக்கியமான உணவு முறைகளை பேணுவது, உடலை சுகாதாரமான முறையில் பராமரிப்பது போன்ற வற்றால் ஒட்டுமொத்த தோல் ஆரோக்கியத்தையும் நாம் பார்த்துக்கொள்ள முடியும். இதனால் முகத்தில் கருந்திட்டுகள் வராமலும் தவிர்க்க முடியும். இதை தவிர்க்க சில உணவு முறைகள் இருக்கின்றன. அவை என்னென்ன என்பதை இங்கு பார்ப்போம். 


பழங்கள் மற்றும் காய்கறிகளை எடுத்துக்கொள்ளுதல்:


ஆண்டி ஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை எடுத்துக்கொள்வதால் முகத்தில் கருந்திட்டுகள் வராமல் தடுக்க முடியும். வைட்டமின்கள், மினரல்ஸ் நிறைந்த காய்கறி, பழங்களை எடுத்துக்கொள்வதால் உடலின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்க முடியும். அப்படி ஆரோக்கியம் நிறைந்த காய்கறிகளின் பட்டியலில் கேரட், கீரை வகைகள், பெர்ரி பழ வகைகள் ஆகியவை முக்கிய இடத்தில் உ ள்ளன. 


கொழுப்பு நிறைந்த மீன்கள்:


கொழுப்பு நிறைந்த மீன்கள் இயற்கையாகவே ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் ஈ மற்றும் பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கும். இது சரும அமைப்பை மேம்படுத்தவும், தோல் நெகிழ்ச்சி மற்றும் நீரேற்றத்தை பராமரிக்கவும் உதவுகிறது. சால்மன், ட்ரவுட் மற்றும் கானாங்கெளுத்தி போன்ற மீன்கள் தோலில் சுருக்கம் ஏற்படுவதை தடுக்க உதவும். இதனால் முகத்தில் கருந்திட்டுகள் ஏற்படாமலும் தப்பிக்கலாம். 


மேலும் படிக்க | டிசம்பர் மாதம் தான் கடைசி! இந்த வேலைகளை மறக்காம முடிச்சுருங்க!


தக்காளி:


தக்காளியில் லைகோபின் என்ற சத்து நிறைந்திருக்கிறது. இது, தோலை எப்போதும் இளமையாக வைத்திருக்க உதவும். தக்காளியில் பல நற்பண்புகள் நிறைந்துள்ளன. அவை தோல் பாதுகாப்பிற்கு உறுதியளிக்கின்றன. தக்காளியின் பயன்பாடு கருந்திட்டுகளை நீக்கவும் சருமப் பொலிவை அதிகரிக்கவும் உதவும்.


கிரீன் டீ:


கிரீன் டீயில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. குறிப்பாக கேட்டசின்கள், புற ஊதா கதிர்களால் சருமத்தில் ஏற்படும் சேதத்திலிருந்து சருமத்தைப் பாதுகாக்க உதவும். இந்த தேநீரை பருகுவது வயதானவது போன்ற தோற்றத்தை தவிர்க்கவும், இளமையான தோற்றத்திற்கும் உதவுகிறது. இதன் பயன்பாட்டால் முகத்தில் ஏற்படும் கருமையான திட்டுக்கள் பரவாமல் தவிர்க்கலாம். 


நட்ஸ் மற்றும் விதைகள்:


பாதாம், அக்ரூட் விதைகள், ஆளிவிதைகள் மற்றும் சியா விதைகள் ஆகியவை ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் ஈ மற்றும் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன, இது ஆரோக்கியமான சருமத்தை பாதுகாக்க வழிவகுக்கும். பாதாம் மற்றும் சியா விதைகளின் பயன்பாடு கூட தோல் பிரச்சினைகளை குறைக்கும் மற்றும் முக பொலிவையும் அதிகரிக்கும்.


மேலும் படிக்க | சூடான நீர் அல்லது குளிர்ந்த நீர்? முடிக்கு எந்த தண்ணீர் பயன்படுத்துவது நல்லது?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ