How To Reuse Rice Rinsed Water : ஊற வைத்த அரிசி நீரை அப்படியே சிங்கில் கொட்டுபவரா நீங்கள்? இப்படி ஒரு அற்புதமான விஷயத்த நாம் கீழே ஊற்றி வீணடிக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. நாம் பல சமயங்களில் வடித்த நீரை வைத்து ‘இதை செய்யலாம், அதை செய்யலாம்’ என கேள்வி பட்டிருப்போம். ஆனால், அரிசி வேவதற்காக நாம் அதனை தண்ணீரில் ஊற வைப்போம் அல்லவா? அதை வைத்து கூட நாம் சில மேஜிக்குகளை செய்யலாம். அதில் இருக்கும் இயற்கை சக்திகள் நமக்கு பலவிதமான நன்மை பயக்க கூடியது. என்ன செய்ய வேண்டும் தெரியுமா? 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமையல் பொருள்:


ஊற வைத்த அரிசி நீரை, நாம் சமையலுக்கு கூட பயன்படுத்தலாம். பருப்பு வகைகளை செய்யும் போது, அதில் சிரிதளவு இனிப்புச்சுவை தேவை என்றால் இதை பயன்படுத்திக்கொள்ளலாம். பருப்புகளை வேக வைப்பதற்கு சாதாரண நீரை ஊற்றுவதற்கு பதிலாக, அரிசி நீரை உபயோகிக்கலாம். இது, உங்களுக்கு நல்ல புரதச்சத்தை கொடுக்கும் நீராகவும் இருக்கும். 


முகத்திற்காக டோனர்:


அரிசி ஊற வைத்த நீரை வைத்து முகத்திற்கான டோனரை செய்யலாம். இது, முகத்தில் உள்ள துளைகள் மூடுவதற்கும், முகம் வீங்கியது போல இருப்பதையும் குறைக்கும். இதில் இருக்கும் ஆண்டி ஆக்ஸிடண்ட் சத்துகள், முகப்பொலிவை கூட்டி, சருமத்தை பளபளப்பாக்க உதவுமாம். இந்த நீரில் வெறும் பஞ்சை வைத்து நன்றாக நீரில் தோய்த்து அதை முகம் முழுவதும் தேய்க்கலாம். இயற்கை பொலிவிற்கான சீக்ரெட்டாக விளங்கும் இந்த பொக்கிஷத்தை, மிஸ் பண்ணிடாதீங்க! 


கூந்தலுக்கு பயன்படுத்தலாம்!!


அரிசி ஊற வைத்த நீரை உங்கள் ஹேர்கேர் ரொட்டீனிலும் சேர்த்துக்கொள்ளலாம். நன்கு தலைக்கு தேய்த்து குளித்த பின்பு, கடைசியாக இந்த நீரை தலையில் ஊற்றி அலச வேண்டும். இது, உங்கள் கூந்தலை பளபளப்பாக மாற்றுவதோடு, மென்மையாகவும் மாற்றுகிறது. இதில் இருக்கும் வைட்டமின் மற்றும் மினர்ல் சத்துக்களால், முடி உடைதல் மற்றும் காய்ந்து போகுதல் ஆகியவை தவிர்க்கப்படும். அது மட்டுமன்றி, இது மெலிந்த கூந்தலுக்கு இயற்கை மருந்தாக இருப்பதால் பிற்காலத்தில் கூட முடிக்கு எந்தவித பாதிப்பும் வராமல் இருக்கும். 


மேலும் படிக்க | பிரிண்ட் செய்யப்பட்ட டி-ஷர்ட்டை அயர்ன் செய்வது எப்படி தெரியுமா?


காய்கறிகளுக்கு..


உடலுக்கு நல்ல சத்து கிடைக்க வேண்டும் என்பதற்காக பலர் நம் இல்லங்களில் காய்கறிகளை வேக வைத்து சாப்பிடுவோம். அப்போது, தண்ணீரை ஊற்றுவதற்கு பதிலாக, அரிசி நீரை ஊற்றி வேக வைக்கலாம். இது, உங்கள் காய்கறிகளுக்கு பிரத்யேகமான சுவையை அளிப்பதோடு, நல்ல ஊட்டச்சத்தையும் வழங்குகிறது. ப்ரக்கோலி, கேரட், பச்சை பீன்ஸ் உள்ளிட்டவற்றை அரிசி நீரில் வேக வைத்து சாப்பிடுவதால் நல்ல சுவையும் ஆரோக்கியமும் கிட்டும்.


சூப்:


சுத்தமான அரிசி ஊற வைத்த நீரை நாம் சூப் செய்ய கூட பயன்படுத்தலாம். இதில் இருக்கும் ஸ்டார்ச் மற்றும் மினரல் சத்துகள் ஆண்டி ஆக்ஸிடண்ட்ஸை கூட்டி, சுவையை அதிகரிக்கும். இதை, குழம்புக்காக கூட உபயோகிக்கலாம். 


மேலும் படிக்க | உடன் வேலை பார்ப்பவரை காதலிப்பதால் ஏற்படும் 5 பிரச்சனைகள்!


 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ