வயதானாலும் சருமத்தில் சுருக்கம் வராமல் இருக்க வேண்டுமா? ‘இதை’ செய்யுங்கள்
பலருக்கு முகத்தில் சுருக்கம் வந்துவிடக்கூடாது என்று கருதுவர். சுருக்கம் வராமல் தடுக்க சில வழிகள் இருக்கின்றன. அவை என்னென்ன தெரியுமா?
சுருக்கம் வருவது என்பது மிகவும் இயல்பான ஒன்று. வயதான அனைவருக்கும் சுருக்க வரும் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஆனால், ஒரு சிலர் தங்களது வாழ்வியல் முறைகளை ஹெல்தியாக வைத்துக்கொள்வது மூலம் சுருக்கம் வருவதை தள்ளிப்போடுவர். இதற்காக ஸ்பெஷலாக மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அவசியம் இல்லை.
சுருக்கம் வருவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அதிகமாக வெயிலில் சுற்றுவது, சருமத்தை ஒழுங்காக பராமரிப்பது பாேன்ற பல அதற்கு காரணமாக இருக்கலாம். சுருக்கம் வராமல் தடுப்பதற்கு பல வழிகள் இருக்கலாம். அதில் மருத்துவர்களால் அதிகம் பரிந்துரைக்கப்படும் 6 வழிகள் இதோ.
1.சிகரெட் பழக்கம்:
சிகரெட் பிடிப்பவர்களுக்கு மனதும் உடலும் பெரிதளவில் பாதிக்கப்படும் என்ற ஒரு கருத்து உள்ளது. புகைப்பழக்கம் உடையவராக நீங்கள் இருந்தால், அப்படியே அதை நிருத்திவிடுவது நல்லது. இதற்கென்று சில இன்ஹேலர்ஸ் மற்றும் பேட்சர்ஸ் உள்ளது.
2.டயட் முறை:
ஆண்டி ஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்த உணவுகளை உங்களது உணவு டயட்டில் சேர்த்துக்கொள்வது நல்லது. இது, உங்களின் சருமத்திற்கு தேவையான சத்துக்களை தருகின்றன. பெர்ரி பழ வகைகள், பீஇன்ஸ், ஆப்பிள், ஒமேகா 3 வகை உணவுகள் ஆகியவை ஆண்டி ஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்தவையாக இருக்கும்.
3.நீர்சத்து:
ஒரு நாளைக்கு நாம் 3.7 லிட்டர் தண்ணீரில் இருந்து 2.7 லிட்டர் தண்ணீர் வரை குடிக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். காலையில் எழுந்ததில் இருந்து இரவு படுக்க செல்வதற்கு சில மணி நேரம் அரை கண்டிப்பாக தண்ணீர் குடித்துக்கொண்டே இருக்க வேண்டும். சரியாக தண்ணீர் குடிக்கவில்லை என்றால் கண்டிப்பாக இளம் வயதிலேயே சுருக்கம் விழுந்து விடும். அப்படி தண்ணீர் குடிக்க விருப்பமில்லை என்றால் தேங்காய் தண்ணீர் அல்லது இளநீர் குடிக்க வேண்டும். எலுமிச்சை தண்ணீரும் குடிக்கலாம்.
மேலும் படிக்க | யூரிக் அமில பிரச்சனைக்கு உடனடி தீர்வு தரும் பொக்கிஷ பழம்
4.கிரீம்கள்:
உங்கள் சருமத்திற்கேற்ற, கெடுதல் விளைவிக்காத கிரீம்களையும், அழகுசாதனப் பொருட்களை உபயோகிக்கலாம். சரும சுருக்கத்தை வராமல் தடுக்க நம்பகரமான பிராண்டுகளை மட்டும் செலக்ட் செய்யவும். மாய்ஸ்ட்ரைசர், டோனர் போன்ற பொருட்களை உபயோகிக்கவும்.
5.வெயிலில் சருமத்தை காட்ட வேண்டாம்:
சருமத்தில் சுருக்கம் வராமல் தடுக்க நினைத்தால், வெயிலில் உங்கள் முகத்தை காட்டாமல் இருக்க வேண்டும். வெளியில் செல்வதற்கு முன்னர் கண்டிப்பாக சன்ஸ்க்ரீன் லோஷன் தடவிக்கொள்ள வேண்டும். கண்களில் கூலிங் கிளாஸ், முடிந்தால் தொப்பி அல்லது துப்பட்டா, முழு நீள கை வைத்த சட்டை ஆகியவற்றை அணிய வேண்டும். முடிந்தவரை, உங்கள் சருமத்தை வெயிலில் காண்பிக்காதீர்கள்.
6.சரியான தூக்கம்:
ஒரு மனிதர் 7 முதல் 8 மணி நேரத்திற்கு கண்டிப்பாக தூங்க வேண்டும். இது, உங்கள் உடலுக்கு தானாக டெட் சரும செல்களை சரி செய்து கொள்ள உதவும். சரியாக தூங்கவில்லை என்ற முகத்தில் சீக்கிரமாக சுருக்கம் விழலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மேலும் படிக்க | குளிர்ந்த காற்றினால் தலைவலியா ஏற்படுகிறதா? இந்த வீட்டு வைத்தியங்களை ட்ரை பண்ணுங்க!
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ