வாழ்க்கைதுணையின் வேலை பறிபோனதா... நீங்கள் செய்ய வேண்டியவை..!!
கோவிட்-19 தொற்றுநோய்க்குப் பிறகு பல நிறுவனங்களில் தொடர்ச்சியான பணிநீக்கங்கள் குறித்த செய்திகளை கேட்ட வண்ணம் இருக்கிறோம். இதனால் பலர் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.
கோவிட்-19 தொற்றுநோய்க்குப் பிறகு பல நிறுவனங்களில் தொடர்ச்சியான பணிநீக்கங்கள் குறித்த செய்திகளை கேட்ட வண்ணம் இருக்கிறோம். இதனால் பலர் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். குடும்பப் பொறுப்புகளும், கைவசம் இருக்கும் வேலை பறி போன நிலையில், மனிதனை கவலையின் இருளில் தள்ளுகிறது. பல சமயங்களில் இதுபோன்ற சூழ்நிலைகளில் தற்கொலை செய்து கொள்ள கூட முடிவு செய்கிறார்கள்.
அத்தகைய சூழ்நிலையில், ஒரு வாழ்க்கை துணையின் ஆதரவு மிகவும் முக்கியமானது. அத்தகைய சூழ்நிலையில், உங்கள் துணையும் திடீரென வேலையை இழந்திருந்தால், அவர் சந்திக்கும் பிரச்சனைகளைப் பற்றி கவலைப்படாமல், இந்த 5 வழிகளில் அவரது தைரியத்தை அதிகரிக்க முயற்சி செய்யுங்கள்.
கருத்து ஏதும் கூறாமல் அவர் கூறுவதை கேளுங்கள்
நீங்கள் இன்பத்திலும் துன்பத்திலும் அவருடன் இருப்பதை உங்கள் துணைக்கு உறுதிபடுத்துங்கள். கோபம், விரக்தி அல்லது சோகம் எதுவாக இருந்தாலும் அவர்கள் தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்த அனுமதியுங்கள். எந்தக் கருத்தையும் கூறாமல் அவர்கள் கூறுவதை கேட்டு ஆதரவை தெரிவிக்கவும்.
இணைந்து முன்னேற ஒரு திட்டத்தை உருவாக்குங்கள்
அச்சம் ஏதும படாமல், பயப்படுவதற்குப் பதிலாக, அமைதியாக இருங்கள். உங்கள் எதிர்காலத்தைத் திட்டமிடுங்கள். உங்கள் துணையிடம் அவர்கள் என்ன செய்ய விரும்புகிறார்கள் என்று கேளுங்கள். அவர்களின் இலக்குகளைப் புரிந்துகொண்டு அவற்றை அடைய உதவுங்கள்.
மேலும் படிக்க | எடையை ஈசியா குறைக்க..’இந்த’ 8 உடற்பயிற்சியை அடிக்கடி பண்ணுங்க..!
நிதி ஆதரவு
வேலை இழப்பின் முக்கிய விளைவு நிதி நெருக்கடி. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் வேலை செய்தால், அவர்களுக்கு நிதி உதவி செய்யுங்கள்.இணைந்து உட்கார்ந்து பேசி பட்ஜெட்டை தயாரித்து, செலவுகளைக் குறைப்பதற்கான வழிகளைக் கண்டறியவும்.
நேர்மறையாக இருக்க அவர்களுக்கு உதவுங்கள்
புதிய வேலை தேடுவதில், எடுக்கும் முயற்சிகள் பலனளிக்கவில்லை என்றால் ஏமாற்றம் ஏற்படுவது இயல்பு. அத்தகைய நேரங்களில் அவர்களை ஊக்குவிக்கவும். அவர்களின் பலம் மற்றும் சாதனைகளை அவர்களுக்கு நினைவூட்டுங்கள். நேர்மறையாக இருக்க முயற்சி செய்யுங்கள்.
உங்கள் துணை மீது நம்பிக்கை வையுங்கள்
உங்கள்வாழ்க்கைத் துணையை நீங்கள் நம்புகிறீர்கள் என்பதையும், எந்தச் சவாலையும் ஒன்றாகச் சந்திக்கத் தயாராக இருப்பதையும் அவர்களுக்கு எடுத்துரைத்து நம்பிக்கை அளியுங்கள்.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். நிலைமை தீவிரமாக இருந்தால், கண்டிப்பாக மன நல ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | முகத்திற்கு பளபள பொலிவு கிடைக்க தயிரை இப்படி பயன்படுத்துங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ