திருமண கனவுகளோடு வாழும் ஆண்கள் பலருக்கு தங்களது வருங்கால மனைவியை “இப்படி நடத்த வேண்டும், அப்படி நடத்த வேண்டும்” என்று சில ஆசைகள் இருக்கும். ஆனால் உண்மையிலேயே அவர்கள் வேண்டிய உறவு கையில் கிடைக்கும் போது அதை எப்படி கையாள்வது என்பது தெரியாமல் போகும். இப்படி இருக்கும் ஆண்கள் ஒருபுறமிருக்க, இன்னொரு புறம் காதல்-உறவில் எந்த அனுபவமும் இன்றி ஒரு சில ஆண்கள் திருமணம் செய்து கொள்வர். அவர்களில் பலருக்கு தனது மனைவியை எப்படி நடத்த வேண்டும் என்று தெரியாது. இது, அவர்கள் மீதுள்ள தவறல்ல. மனிதர்களாகிய நாம், ஒவ்வொரு அனுபத்தில் இருந்தும்தான் புதுப்பது விஷயங்களை கற்றுக்கொள்ள முடியும். காதலும் அப்படித்தான், கல்யாணமும் அப்படித்தான். எனவே, உங்கள் மனைவியை ராணி போல நீங்கள் நடத்த ஆசைப்பட்டால் இந்த டிப்ஸை படிங்க. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

1.மனைவியை முதன்மை படுத்துங்கள்:


திருமணம் ஆன புதிதில் மனைவிக்கு பெரிதாக முக்கியத்துவம் கொடுக்கும் ஆண்கள், நாட்கள் செல்ல செல்ல மரியாதை கொடுப்பதையும் முதன்மை படுத்துவதையும் மறந்து விடுகின்றனர். ஆனால், அவர்களது ஆசையையும் அவர் கூறும் கருத்துக்களையும் நீங்கள் முதன்மை படுத்தினாலே போதும். நீங்கள் கொடுக்கும் இந்த மரியாதை அவர்களை ஸ்பெஷலாக உணர வைக்கும். கணவன், தனது மனைவியை முதன்மைப்படுத்த ஆரம்பித்தாலே போதும் வீட்டில் பாதி பிரச்சனை ஆரம்பிப்பதற்கு முன்னரே முடிந்து விடும். 


2.சர்ப்ரைஸ் செய்யுங்கள்:


பெரும்பாலான பெண்கள், ஆடம்பரமான பொருட்களையோ பரிசுகளையோ எதிர்பார்ப்பதில்லை. அடிக்கடி தனக்கு பிடித்தமானவர் தனக்காக செய்யும் சிறு சிறு செயல்களே அவர்களை பெரிதாக மகிழ்ச்சியடைய வைக்கும். அது, அலுவலத்தில் இருந்து நீங்கள் வரும் நேரத்திற்கு முன் கூட்டியே வருவதாக இருக்கட்டும், அவருக்கு பிடித்த உணவை “இது உனக்கு பிடிக்குமேன்னு வாங்கிட்டு வந்தேன்..” என கூறுவதாக இருக்கட்டும். இது போன்ற செயல்கள் அவர்களின் மனதில் பட்டாம்பூச்சியை பறக்க வைக்கும். வீட்டு வேலைகளை பகிர்ந்து செய்வது, அவருக்கு பிடித்த இடத்திற்கு அவரை அழைத்து செல்வது போன்றவை நல்ல கணவனுக்கு அழகு. 


மேலும் படிக்க | புதிதாக திருமணமான தம்பதிகளா? கண்டிப்பா இதை தெரிஞ்சிக்கோங்க!


3.கணவன்-மனைவி என்பதை மறந்து விடுங்கள்..


ஆம், சமயங்களில் திருமண உறவில் இருக்கிறோம் என்பதை மறந்து, காதலர்களாக மாறிப்பாருங்கள். நீங்கள் காதலிக்க ஆரம்பித்த புதிதில் எப்படி அவர் குறித்து உங்களுக்கு எந்த அளவு ஆர்வம் இருந்ததோ, அதே அளவு ஆர்வத்தை நீங்கள் தக்க வைத்துக்கொள்ள வேண்டும். நாளின் இறுதியில், இன்றைய நாள் உங்களுக்கு எப்படி இருந்தது என்பதையும் அவர்களுக்கு அந்த நாள் எப்படி கடந்தது என்பதையும் பகிர்ந்து கொள்ள வேண்டும். உறவு ஆரம்பித்த புதிதில் எப்படி அவரை கவர சில விஷ்யங்களை செய்தீர்களோ, அதே விஷயங்களை திருமணம் ஆன பிறகும் செய்து கொண்டே இருக்க வேண்டும். 


4.வீட்டில் இருக்கும் போது செல்போன் பயன்பாட்டை குறைக்கவும்...


வேலை குறித்த விஷயங்களாக இருந்தாலும் சரி, சமூக வலைதளங்களை ஸ்க்ரால் செய்வதாக இருந்தாலும் சரி, உங்கள் மனைவி அருகில் இருக்கும் போது செல்போன் உபயோகிப்பதை தவிர்க்கவும். அவர் பேசும் போது உங்கள் முழு கவனமும் அவர் மீது இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். இது, உங்கள் மீது அவருக்கு இருக்கும் மரியாதையை அதிகரிக்க உதவும். 


மேலும் படிக்க | வெந்தயம் சாப்பிடுவது நல்லதுதான்.. ஆனா இந்த மாதிரி பிரச்சனையும் உண்டாகலாம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ